உள்ளது உள்ளபடி - 2

(நன்றி:நண்பர் அண்டோ வாஸ் எழுதியது-santovaz@gmail.com)12 May 2009 மதியம் பதினோரு மணி
இடம் : மதுரை ரயில் நிலையம்
வட்டார தமிழ் மணக்கும் மதுரையை வந்தடைந்தேன் , ஒரு கையில் பையும் மறு கையில் தண்ணீர் புட்டியும் கொண்டு ரயில் நிலையத்தை விட்டு வெளியேறினேன் , வாசலில் பயண சீட்டு பரிசோதகர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார் எதற்கு வம்பு என்று பயணசீட்டை வழிய சென்று காண்பித்தேன் பின்பும் அவர் முக பாவம் மாற வில்லை என்ன வென்று கூர்ந்து நோக்கினால் அட ச்சே zip போடவில்லை , ஒரு அசமஞ்ச சிரிப்போடு சரி செய்தேன்

மாட்டு தாவணி பேருந்து நிலையத்தை அடைய இரு வழி 1. auto 2. மாநகர பேருந்து வித்தியாசம் எழுபது ரூபாயும் ஏழு ரூபாயும் , ஏறினேன் பேருந்து ; நல்ல கூட்டம், கண்டக்டர் முதல் காய் கறி விற்பவர் வரை அரசியலையும் மறு தின வாக்கு பதிவையும் , பிற விசயங்களையும் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர் , காதை கடன் கொடுத்து கிடைத்த சங்கதிகள் சில இங்கு

1. கலைஞர் கொடுக்கும் கலர் TV சிறியதாக உள்ளது
2. தடை செய்ய பட்ட லாட்டரி திரும்ப வந்தால் நன்றாக இருக்கும்
3. ஒரு வோட்டுக்கு ரூபாய் முன்னூறும் பட்டு சேலையும்
4. தமன்னா வின் பூர்வீகம் தமிழ்நாடு அல்ல (கூறியவர்க்கு 45 வயது இருக்கும் !)
5. மு க அழகிரி கண்டிப்பாக ஜெயிப்பார்
6. விஜயகாந்துக்கு பதிலாக வடிவேலு கட்சி ஆரம்பித்திருந்தால் நல்ல இருந்திருக்கும்

இப்படி சொல்லிகொண்டே போகலாம் ஆனாலும் நான் இறங்க வேண்டிய பேருந்து நிலையம் வந்து விட்டதால் நிறுத்தி கொண்டேன் என் observer கதாபாத்திரத்தை , பேருந்தை விட்டு இறங்கும் பொழுது ஒருவர் தன் சாக்கு மூடியை தூக்கி விடுமாறு உதவி கோரினார் உடனே இருவர் ஓடி போய் உதவி செய்தனர் உடனே ஒரு கரை வேட்டி " எங்க கலைஞர் ஆட்சியில தான் இந்த மாதிரி உதவி எல்லாம் கிடைக்கும் அதனால் எல்லாரும் அவருக்கே வோட்டு போடுங்க " என்றார் . காலம் எத்தனை வேகமாய் மாறினாலும் இந்த கரை வேட்டி பண்பாடு மாறது போலும் என்று நினைத்து கொண்டேன்

இன்னும் சொல்லுவேன்

1 comment:

Popular Posts