நிறவெறி-RACISM



நிறவெறியையை எதிர்த்து தலைவர்
பறக்க விட்டார் சமாதான புறாவை..
வெள்ளை நிற புறாவை மட்டும்
கருப்பு நிற புறாவை ஒதுக்கி விட்டு...




கேரம் விளையாட்டில்
வெள்ளைக்கு இரண்டு மதிப்பு..
செஸ் விளையாட்டில்
வெள்ளைக்கு முதல் வாய்ப்பு..
சமாதான புறா கூட வெள்ளை தான்.
ஆனால் வெள்ளை புடவை அணிந்த
விதவை மட்டும் மதிப்பு அற்று...




பிளாஸ்டிக்கை திட்டாதீர்கள்..
எங்கள் ஊரில் தலைமுறை தலைமுறையாய்
ஒழிக்க முடியாத இரட்டை குவளை முறையை
தனி ஆளாய் ஒழித்தது இந்த பிளாஸ்டிக் டீ கப்பு தான்




எல்லார் காதலியும் rasicsa வாதி தான்
தீண்டாமை கடை பிடிக்க சொல்லுவதால்..

செல்போன் Snatching

நான் எங்கோ எப்பொழுதோ படித்த விசயங்களையும் செவி வழி செய்திகளையும் இங்கே "யாரோ சொன்னாக" என்ற ஒரு பிரிவில் கீழ் பதிய உள்ளேன்


கடந்த ஒரு மாதத்திற்குள் ஹைதராபாத்-இல் எனது இரண்டு நண்பர்கள் தங்களது கைபேசியை இழந்து உள்ளனர்.சாலையில் நடந்து கைபேசி பேசி கொண்டு செல்லும் போது சிலர் பைக்கில் வந்து கைபேசியை அபகரித்து சென்று விட்டனர். இது போன்ற கைபேசி அபகரிப்பு எல்லா பெரு நகரங்களிலும் அதிகமாகி கொண்டு வருகிறது.

இதை தவிர்க்க ear phone use செய்யலாம்.எடுத்தாலும் தடுக்க வாய்ப்பு உள்ளது.
அல்லது இந்த புகை படத்தில் உள்ளது போல் தான் செல்ல வேண்டுமோ என்று தோணுது ..

உள்ளது உள்ளபடி - 2

(நன்றி:நண்பர் அண்டோ வாஸ் எழுதியது-santovaz@gmail.com)



12 May 2009 மதியம் பதினோரு மணி
இடம் : மதுரை ரயில் நிலையம்




வட்டார தமிழ் மணக்கும் மதுரையை வந்தடைந்தேன் , ஒரு கையில் பையும் மறு கையில் தண்ணீர் புட்டியும் கொண்டு ரயில் நிலையத்தை விட்டு வெளியேறினேன் , வாசலில் பயண சீட்டு பரிசோதகர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார் எதற்கு வம்பு என்று பயணசீட்டை வழிய சென்று காண்பித்தேன் பின்பும் அவர் முக பாவம் மாற வில்லை என்ன வென்று கூர்ந்து நோக்கினால் அட ச்சே zip போடவில்லை , ஒரு அசமஞ்ச சிரிப்போடு சரி செய்தேன்

மாட்டு தாவணி பேருந்து நிலையத்தை அடைய இரு வழி 1. auto 2. மாநகர பேருந்து வித்தியாசம் எழுபது ரூபாயும் ஏழு ரூபாயும் , ஏறினேன் பேருந்து ; நல்ல கூட்டம், கண்டக்டர் முதல் காய் கறி விற்பவர் வரை அரசியலையும் மறு தின வாக்கு பதிவையும் , பிற விசயங்களையும் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர் , காதை கடன் கொடுத்து கிடைத்த சங்கதிகள் சில இங்கு

1. கலைஞர் கொடுக்கும் கலர் TV சிறியதாக உள்ளது
2. தடை செய்ய பட்ட லாட்டரி திரும்ப வந்தால் நன்றாக இருக்கும்
3. ஒரு வோட்டுக்கு ரூபாய் முன்னூறும் பட்டு சேலையும்
4. தமன்னா வின் பூர்வீகம் தமிழ்நாடு அல்ல (கூறியவர்க்கு 45 வயது இருக்கும் !)
5. மு க அழகிரி கண்டிப்பாக ஜெயிப்பார்
6. விஜயகாந்துக்கு பதிலாக வடிவேலு கட்சி ஆரம்பித்திருந்தால் நல்ல இருந்திருக்கும்

இப்படி சொல்லிகொண்டே போகலாம் ஆனாலும் நான் இறங்க வேண்டிய பேருந்து நிலையம் வந்து விட்டதால் நிறுத்தி கொண்டேன் என் observer கதாபாத்திரத்தை , பேருந்தை விட்டு இறங்கும் பொழுது ஒருவர் தன் சாக்கு மூடியை தூக்கி விடுமாறு உதவி கோரினார் உடனே இருவர் ஓடி போய் உதவி செய்தனர் உடனே ஒரு கரை வேட்டி " எங்க கலைஞர் ஆட்சியில தான் இந்த மாதிரி உதவி எல்லாம் கிடைக்கும் அதனால் எல்லாரும் அவருக்கே வோட்டு போடுங்க " என்றார் . காலம் எத்தனை வேகமாய் மாறினாலும் இந்த கரை வேட்டி பண்பாடு மாறது போலும் என்று நினைத்து கொண்டேன்

இன்னும் சொல்லுவேன்

காதல் கேட்டேன்


ராத்திரி 12 மணிக்கு போன் பண்ணி தூக்கத்தில்
எழுப்பி தூங்கீடீயானு கேட்க மாட்டேன்
அதிகாலை எழுந்து குட் மார்னிங்
SMS அனுப்ப மாட்டேன்
அடுத்த நிமிடம் போன் செய்து SMS
வந்துதாணு பேச மாட்டேன்
அர்த்தமே இல்லமா அடுத்த வார்த்தை
சாப்பிட்டாயானு கேட்க மாட்டேன்
ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை போனை
பண்ணி "நல்லா இருக்கியானு" விசாரிக்க மாட்டேன்
ஒரே கலர் டிரஸ் போட்டிருக்கோம்
என்று சந்தோஷ பட மாட்டேன்
அவதியும் அவசரமாய் கிளம்பி உன்னை
பஸ் ஸ்டாண்டில் டிராப் பண்ண வர மாட்டேன்


உன் பிறந்த நாள் பரிசு வித்தியாசமாய்
வாங்க கடை தேடி அலைய மாட்டேன்
சின்ன சின்ன தப்பு செய்ய பொய்யாய்
உன்னிடம் பெர்மிசன் கேட்க மாட்டேன்
செல்லமான பெயர் வைக்க இரவெல்லாம்
ரொம்ப நான் யோசிக்க மாட்டேன்
தலை சீவாமா நீ வந்தா கேசுவல கூட
நீ அழகா இருக்கணு பொய் சொல்ல மாட்டேன்


சும்மா சும்மா நீ கொடுக்கும்
சாக்லேட்டை திங்க மாட்டேன்
நீ தின்ன சாக்லேட் காகிதம்
எல்லாம் எடுத்து சேர்க்க மாட்டேன்
உன் ஊரு பஸ்சை கூட
பாசத்தோட பார்க்க மாட்டேன்
உனக்காக லைப்ரரி போய்
நோட்ஸ் எல்லாம் எடுக்க மாட்டேன்
யார் யாரை வழி அனுப்புவதுன்னு நாலு
மணி நேரம் பஸ் ஸ்டாப்பில் நிற்க மாட்டேன்


கவிதை எழுதி வைரமுத்து ,வாலியை
ஓவர் டேக் செய்ய முயற்சிக்க மாட்டேன்

குட் நைட் SMS -க்கு பதில் குட் நைட் சொல்ல
Hero Honda பைக் எடுத்து உன் வீடு வரை வர மாட்டேன்

மாட்டேன் மாட்டேன் இதுல எதுவும் செய்ய மாட்டேன்
ஆனால் ஒரு காதல் காதல் காதல் கேட்டேன்

Miles to go Before they Sleep..


சமீப காலத்தில் நிகழ்ந்த சில விபத்துகளான கேரளா படகு விபத்து, கோதாவரி படகு விபத்து, வேதாரணியம் பள்ளி வாகன விபத்து , கோபியில் பள்ளி செல்லும் ஆட்டோ விபத்து எல்லா விபத்துகளுக்கும் சொல்லும் ஒரு முக்கிய காரணம் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றியது.
நானும் இது போன்ற சில வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை பார்த்த பிறகு இவ்வாறு பயணம் மேற் கொள்ள கூடாது என்று இருந்தேன்.நான் முன்பு வேலை
பார்த்த Goraj என்ற இடம் பரோடாவில் இருந்து 45km தொலைவில் உள்ளது.பஸ் போக்குவரத்து மிக குறைவு.பயணம் பாதை என்பது நீங்கள் யூகிக்க வேண்டுமானால் தமிழ் MA படத்தில் வரும் "பறவையே எங்கு இருக்கிறாய் " யில் வருவது போன்று இருக்கும்.
அங்கு தான் எனது தீர்மானம் முதலில் முடிவு பெற்றதாக நான் நினைத்தேன்.

ஆனால் அது முதல் இல்லை என்று இப்போது கருதுகிறேன்.இது போன்ற விபத்து நடந்த அடுத்த சில நாட்களுக்கு நாளேடுகளில் டிராபிக் போலீஸ் சோதனை,சில பள்ளி வாகன உரிமம் ரத்து,சில ஓட்டுனர் உரிமம் ரத்து என்ற செய்தி தொடரும். ஆனால் பாருங்க நம்ம Government பஸ் இருக்கைகள் 55 + 2
என்று எழுதி இருந்தாலும் பெரும்பாலும் 55 X 2 என்று தான் இருக்கும். அங்கு தான் எனது தீர்மானம் முதலில் முடிவு பெற்று உள்ளது.




என்னை பொறுத்த வரையில் மக்கள் தொகை நிறைந்த நம் போன்ற நாடுகளில் இது போன்ற எண்ணிக்கையை கடை பிடிப்பது மிக கடினம். இது போன்ற விபத்துகளை கூட தடுப்பது கடினமே..
ஏன் எனில் பயணங்களை தவிர்க்க இயலாது..
Becaz Everybody Wish..

Miles to go Before they Sleep..But Unfortunately Some times They Sleep before reach their miles..

அகரம் வளர்ச்சியும் அதிரடி ரைடும்


சூர்யாவுடன் ஒரு கோடி ஒரு ஆரம்பம் என்ற நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்தது.

அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சூர்யா மற்றும் முருகதாஸ் வீட்டில் அதிரடி ரைடு நடந்தது
கூறித்து பலரும் என்னிடம் வருத்த பட்டனர்.இது எல்லாம் ஆளும் கட்சியின் அட்டகாசம் என்று.
தூண்டுதலின் பேரில் ரைடு நடந்ததா என்ற கேள்விக்கு பதில் கொடுக்கும் முக்கியத்துவதால்
ரைடு நடந்ததே தவறு என்று நினைக்காதீர்கள்..
என்னை பொறுத்த வரை ரைடு நடந்ததில் எந்த தவறும் இல்லை.

உள்ளது உள்ளபடி - 1

(நன்றி:நண்பர் அண்டோ வாஸ் எழுதியது)
(முன் குறிப்பு :எனது நண்பன் சில மாதங்களுக்கு முன்பு எழுதிய பதிவு என்பதால் சற்று பழையதாக தோன்றலாம்.ஏற்கனவே படித்தவர்களுக்கு கொஞ்சம் போர் அடிக்கலாம்...பொறுத்தருள்க...)

12-May- 2009

சமீபத்தில் சொந்த ஊரான ராமநாதபுரம் சென்றிருந்தேன்,காரணம் நானும் ஒரு இந்திய பிரஜை என்பதற்கான ஒரே அடையாளமான ஓட்டுரிமை,

சேர்தலையிலிருந்து ரயில் பிரயாணம் நடுநிசியில் தொடங்கினேன் , upper berth கிடைத்த சந்தோசத்தில் மேலே ஏறினேன் ; எதிர் படுக்கையில் ஒரு இளம் பெண் (20 அல்லது 22 வயது இருக்கும் ) , இன்னொரு முறை முகம் காண மனம் சலனப்பட்டது , முடியவில்லை இரவெல்லாம் புரண்டு புரண்டு படுத்தபடி முகம் காண முயற்சித்தேன் முடியவில்லை மன சஞ்சலத்தில் கண்ணுறங்கி போனேன் , அதிகாலை 6 மணிக்கு எழுந்து காலை கடன்களை முடித்து கையில் தேநீர் குவளையுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்தேன் ,chart இல் பேர் காண யோசித்தேன் , இந்த பாழாய் போன மழையால் chart கிழிந்து காணமல் போயிருந்தது ச்சே !

ஏழு மணிக்கு அவள் இறங்கி வந்தாள், அபரிதமான அழகு என்று சொல்வதற்கில்லை ஆனாலும் கலையான முகம் (மலையாளீ ) , அவள் தேநீர் பருகும் போது தான் என்னுடைய இருப்பு உணரப்பட்டது , அரை கண்ணில் நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டாள் , சட்டென்று எழுந்தேன் கண்ணாடி காண , தலை ஒழுங்காக வாரியிருந்தேன் அப்பொழுதுதான் உணர்ந்தேன் வயசானதை , மனதில் குறித்து கொண்டேன் அம்மாவிடம் பொண்ணு பார்க்க சொல்லணும் என்று திருநெல்வேலி junction இல் இறங்கி போனாள் அப்பெண் , பேர் கேட்க ஆசை இருந்தும் "sorry சித்தப்பா" என்று சொல்லிவிட்டால் மௌனமாகி முனகினேன் (இந்த ஹீரோகளுக்கு மட்டும் எப்படி சமயம் அமைகிறது !)

இன்னும் சொல்வேன்

பாச மலர்


(முன் குறிப்பு:தங்கை திருமணம் முடிந்து 40 நாட்கள் கழித்து
அண்ணன் & தங்கையின் டைரியின் வரிகள்)

தங்கை டைரி:
--------------
என் கல்யாணம் சொர்க்கத்தில் தான் நிச்சயக்க பட்டது..
ஆம் அண்ணா நம் வீட்டில் தானே நடந்தது..

காபி குடித்து எழுந்து பழகியவள்
காபி குடுக்க எழுந்திருத்து பழகுகிறேன்..

எல்லாருக்கும் பின்னால் எழுந்து
எல்லாருக்கும் முன்னால் சாப்பிடவ
எல்லாருக்கும் முன்னால் எழுந்து
எல்லாருக்கும் பின்னால் சாப்பிடறேன்..

அவர்கள் யாரும் என்னை முன்னால்
சாப்பிட கூடாதென்று சொல்ல வில்லை..
அவர்கள் யாரும் எனக்கு பின்னால்
சொல்ல கூடாதென்று தான்...

அவர் சட்டை அயன் செய்கையில்
உன் முகம் தோன்றி மறையுது தானாய்...
எதோ இருக்கிறேன் நானாய்...

அம்மாவிடம் சண்டை போட்டு மாற்றும் சீரியலை
எல்லாம் மாமியாருடன் சிரித்த படியே பார்க்கிறேன்...

பள்ளி கூட குழந்தை போல தீபாவளி,பொங்கல்
விடுமுறையை எதிர் பார்த்து இருக்கிறேன் நம் வீடு வர..

அண்ணன் டைரி :
-----------------
உன் திருமணம் நடந்து
40 நாட்கள் தான் நகர்ந்துள்ளன.
நான்கு யுகம் போல் தோணுது எனக்கு.

பிறப்பில் நான் முதல் வர விட்டு கொடுத்த உனக்கு
திருமணத்தில் நீ முதல் வர நான் விட்டு கொடுத்த நாள்..

அதிகாரத்தோடே பார்த்த அப்பாவும் நம் வீட்டு
அதிர்ஷ்ட தேவதை நீயும் அழுத முதல் நாள் ...

நாம் சண்டை போட்டு சாப்பிட துடிக்கும் மாம்பழ
டிசைன் தட்டும் டிவியை நோக்கிய டைன்னிங்
டேபிள் இருக்கையும் காலியாகவே உள்ளன.

அடித்து கொண்டு படுக்கும் கட்டில் மெத்தையும்
ஆளில்லாமல் தனியாகவே உறங்குகிறது..

மாற்றாத தேதி காலேண்டர்..
தண்ணீர் ஊற்றாத டேபிள் ரோஸ்..
துடைக்காத அப்பா பைக்கோடு
அவசரத்தில் அணியும் அயன் செய்யாத
சட்டையும் பாலிஷ் போடாத ஷுவும்
நீ இல்லாததை உரத்து உரைக்கின்றன..

இரும்பு மனிதர் என்று இறுமாப்போடு இருந்த
அப்பா துரும்பாக இளைத்து விட்டார் ..
உன்னை அதட்டி கொண்டே இருந்த அம்மாவும்
அடுப்படியிலேயே அடங்கிவிட்டார்..

ரிமோட் சண்டை போட்டு மாற்றாத டிவி அம்மா
வைத்த சீரியலோடு ஓடி கொண்டிருக்கிறது..
நம் வீட்டில் நீ இல்லாததால் டிவி சீரியல்
கதா பாத்திரங்கள் கூட அழுகின்றன...

இஷ்டப்பட்டு தான் கட்டி கொடுத்தோம் உன்னை ஆனால்
கொஞ்சம் கஷ்டத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

நீ வரும் நாட்களே தீபாவளி,பொங்கல் ஆனது எங்களுக்கு....

சத்தம் போட்டு சொல்லாதே-5

மும்பை எல்லாருக்கும் பொதுவானது என்று உரக்க சொல்லிருக்கிறார்கள் காங்கிரஸ் ப.சிதம்பரம் & பிஜேபி தலைவர்கள் என்று பெருமிதம் கொள்ள வேண்டாம்.

பீகார் மாநிலத்தவர் மும்பையில் தாக்கப்பட்ட போது சொல்லவில்லை...
வட மாநிலத்து மாணவர்கள் வங்கி பணியாளர் தேர்வு எழுத
மும்பை வந்து ரயில் நிலையத்தில் தாக்கப்பட்ட போது சொல்லவில்லை...
அது ஏன் சச்சின் நான் முதலில் இந்தியன் பிறகு தான் மும்பைவாசி என்ற போது சேனா படை அவரை வசை பாடிய போது கூட பேசாத இவர்கள் இப்போது பேச காரணம்...



முகேஷ் அம்பானி...சொன்னதை வழி மொழிந்துள்ளார்கள்...
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...
பட்ஜெட்ல கூட இது தான் நடக்குதா...

Popular Posts