படித்ததும் பாதித்ததும் 2

(நன்றி:குமுதம் இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)

அவசர ஆம்புலன்ஸ் உதவிக்கு 108 சேவை இருக்கிறது. இதர ஆம்புலன்ஸ் சேவைகளிலிருந்து இது வேறுபட்டது. காரணம், மருத்துவமனை வரை செல்லும் முன்பாகவே முதல் உதவி கொடுத்துவிடும் வசதியும் இதில் சேர்த்திருப்பதுதான்.

ஆனால் உயிர் அபாயம் உள்ள நிலையில் மட்டுமே உதவ 108 உள்ளது. இதர நெருக்கடிகளுக்கு பயன்படாது.


இந்த வாரம் என் தோழி ஒருவர் சேத்துப்பட்டு ரயிலடியிலிருந்து தொலைபேசினார். அங்கே மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் தன் மலத்தின் மீதே புரண்டபடி கிடக்கும் நிலையில் இருப்பதாகச் சொன்னார். 108ஐ தொடர்பு கொள்ளச் சொன்னேன். அப்போதுதான் அவர்கள் இத்தகைய நெருக்கடிகளுக்கு வருவதில்லை என்பது தெரிந்தது.

அடுத்து என் தோழி பேன்யன் தொண்டு நிறுவனத்துக்கு தொலைபேசினார். பேன்யன் தெருவில் இருக்கும் அநாதையான மன நலம் குன்றியவர்களுக்கென்றே உருவாக்கப்பட்ட அமைப்பு. அதை நடத்துபவர்கள் மீடியாவில் பல முறை புகழப்பட்டு பல்வேறு விருதுகள் பெற்றிருக்கக்கூடியவர்கள்.

என் தோழிக்கு போனில் கிடைத்த பதில் இது: இப்போதெல்லாம் நாங்கள் புதிதாக யாரையும் எடுத்துக் கொள்வதில்லை.

சரி. வேறு ஏதாவது அமைப்புக்கு உங்களால் தகவல் சொல்ல முடியுமா?

அதெல்லாம் எங்களால் முடியாது. நீங்களே போலீசுக்குப் போய் சொல்லுங்கள்.

இப்போது என்ன செய்வது ?சேத்துப்பட்டு ரயிலடியில் ஒரு பிணம் கிடப்பதாகச் சொன்னால்தான் போலீஸ் வரும். அல்லது ஒருவர் குடித்துவிட்டு ரகளை செய்வதாகச் சொன்னால் வரும். அல்லது அங்கே குண்டு வைத்திருப்பதாகச் சொன்னால் வரும். இதுதான் நம் சமூக நிலை.

என் தோழி தினசரி தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் ரயில்பாதையில் பயணம் செய்கிறார். ஏன் சேத்துப்பட்டு ரயிலடியில் மட்டும் ஒவ்வொரு மாதமும் புதிது புதிதாக, மன நலம் குன்றியவர்கள் காணப்படுகிறார்கள் என்று அவருக்கு புதிராக இருக்கிறது. அதுவும் நகர முடியாத நிலையில் இருப்பவர்கள், சுயபிரக்ஞயற்றவர்கள் எல்லாம் எப்படி சரியாக சேத்துப்பட்டு ரயிலடியைக் கண்டுபிடித்து வந்து சேருகிறார்கள் என்பது பெரும் புதிர். தங்களால் வைத்துப் பராமரிக்க முடியாதவர்களை, சமாளிக்க முடியாதவர்களை யாரேனும் இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டுப்போய் விடுகிறார்களோ என்ற சந்தேகமே வருகிறது.

(நன்றி:குமுதம் இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)

படித்ததும் பாதித்ததும் 1

(நன்றி:குமுதம் இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)
மும்பையில் சென்ற வருடம் நவம்பரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது தீவிரவாத எதிர்ப்புப் படை தலைவர் ஹேமந்த் கர்காரே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் அணிந்திருந்த புல்லட் தடுப்புக் கவசம் அவரைக் காப்பாற்றவில்லை.

அவரைக் கொன்ற எட்டு புல்லட்டுகளில் மூன்று வலது நெஞ்சில் கவசத்தைத் துளைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்தவை என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறியிருக்கிறது. கர்காரே அணிந்திருந்த கவசம் 2004ல் மும்பை காவல் துறையால் வாங்கப்பட்ட கவசங்களில் ஒன்று.

அப்போது அந்தக் கவசங்களில் சிலவற்றை சோதித்துப்பார்க்க கோரேகானில் இருக்கும் காவல் துறை துப்பாக்கி சுடும் பயிற்சிக் களத்துக்கு அனுப்பினார்கள். சோதனையில் குண்டுகள் கவசத்தை துளைத்துவிட்டன. உடனே இது பற்றி புகார் எழுப்பப்பட்டது.

மொத்த கவசங்களையும் சப்ளை செய்யும்போது தரம் மேம்படுத்தப்படும் என்று (வியாபாரிகளால்) சொல்லப்பட்டிருப்பதால், ஆர்டரை ரத்து செய்ய வேண்டாம் என்று கோப்பில் எழுதப்பட்டிருக்கிறது. தரம் ‘மேம்படுத்தி’ சப்ளை செய்த கவசத்தில் ஒன்றைத்தான் கர்காரே அணிந்து கொண்டு போய் செத்தார்.

கர்காரே சாகும்போது அணிந்திருந்த கவசத்தை சோதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் மனைவி கவிதா முன்வைத்தார். அரசிடமிருந்து பதில் இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கவிதா , அந்தக் கவசம் எங்கே என்று கேட்டு மனு செய்தார்.

இப்போது அரசு பதில் சொல்லியிருக்கிறது. கவசம் மிஸ்ஸிங்காம்.

ஏன் மிஸ்ஸிங் ? யோசியுங்கள். கவசம் கிடைத்து சோதித்தால், தரக் குறைவானது என்று தெரிந்தால், அப்போது கவசம் வாங்க அனுமதித்த தலைகளுக்கு ஆபத்து. கவசத்துக்கு இவ்வளவு என்று லஞ்சம் வாங்கிய விவரங்கள் வெளிவந்துவிடும்.

நம் சமூகத்தை மிகப் பெருமளவில் ஒவ்வொரு துறையிலும் சீரழித்துக் கொண்டிருப்பது லஞ்சம் ஊழல்தான். அது நோயல்ல; நோயின் அறிகுறிதான் என்று சொல்வதை என்னால் துளியும் ஒப்புக் கொள்ள முடியவில்லை. லஞ்சம் நம் தேசத்தை அழித்துக் கொண்டிருக்கும் புற்று நோய்.

(நன்றி:குமுதம் இதழில் ஞாநி எழுதிய ஓ பக்கங்களில் வெளிவந்தது)

கடன்


காதல் சந்திக்காதவர்களை கூட
சத்தியமாய் இந்த கடன் சந்தித்திருக்கும்-கடன்
வாங்கியவர் விதத்திலோ அல்லது
கொடுத்தவர் விதத்திலோ

படிக்கும் போது பக்கத்துக்கு பையனிடம்
வாங்கிய பென்சிலில் தொடங்கி
துளைத்து விட்ட பஸ் பாஸ்ற்க்காக
வாங்கிய கைமாத்தில் தொடர்ந்து
இன்னும் எல்லாரிடத்திலும்
தொடர்கிறது கடன் என்னும் கா(வ)லனின் பயணம்.

படிப்ப்பிற்க்காகவும் பாசத்திற்க்காகவும்
வாங்கிய அவசியக்கடன்
பௌசிர்க்காகவும் ரௌசிர்க்க்காகவும்
வாங்கிய அனாவசியக்கடன் என
தொடர்கிறது கடன் என்னும் கா(வ)லனின் பல ரூபங்கள்.

கந்து வட்டி , மீட்டர் வட்டி எல்லாம்
கடனின்அழையா விருந்தாளி-அது
காவு எடுத்துள்ளது பலரின் தாலி.

நாடு போட்ட குட்டிகளை விட வட்டி
போட்ட குட்டிகளின் வளர்ச்சி அதிகம் -அன்று
எல்லா வட்டிகளையும் ஒழித்து விட்டு
கடன் அட்டையை வளர்க்கிறது நாடு - இன்று

வாங்கும் வரை ரொம்ப ரொம்ப கஷ்டம் வாங்கிய
பின் திருப்பி கொடுப்பது அவரவர் இஷ்டம் -அன்று
வாங்கும் வரை முகவர் வருவான் உன் வீடு
வாங்கிய பின் உன் பாடு திண்டாடு - இன்று

கடனுக்காக எதுவும் கேட்காமல் புரியாமல் காட்டிய இடத்தில
கண்ணை மூடி கைநாட்டு வைப்பான் படிக்காதவன் -அன்று
முகவர் இட்ட தப்பு குறியீட்டு இடத்தில எதுவும்
படிக்காமல் சரியாக கையெழுத்து இடுகிறான் மெத்த படித்தவனும்-இன்று

பல நேரங்களில் பலர் கடனை திருப்பி கொடுப்பதே
அடுத்த முறை கடன் வாங்க வேண்டும் என்பதற்க்காகத்தான்.

வாங்கியவன் மறைந்தாலும்
கொடுத்தவன் மறைந்தாலும்
கடன் மட்டும் மார்க்கண்டேயனாய்
தன்னை உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கிறது...
அவ்வப்போது புதுப்பித்துக்கொண்டும் இருக்கிறது ...

வழிபாடும் வெளிப்பாடும்

வெள்ளி கிழமை மாலை நேரம்
அகம் மகிழ ஆண்டவனை காண சென்றேன்.
செல்லும் வழி யாவும் செல்-இல் பேசிய படியே பாதி
புது படத்தை விமர்சித்த படியே மீதி
-----------------------------------
கோவிலை அடைந்ததும் வாசலில்

என்னை காப்பாற்றுவார் என் கடவுள் என்பதில்
எள் அளவும் ஐயமில்லை ஆனால் என் செருப்பை
------------------------------------
தெய்வ தரிசனம்

அவ்வளவு நேரம் கண்விழித்து இருந்தவன்
தீபாராதனை-இல் கண்ணை மூடிகொண்டேன் சரி தானோ

தீபத்தட்டு வருகை-இல் கடவுளை விட காசு எவ்வளவு
போடுவது என்றே எண்ணம் செல்கிறது ஏனோ
---------------------------------------------
நவக்கிரக வழிபாடு

நவக்கிரக வழிபாடு பெரும்பகுதி
சுற்றுகள் எத்தனை என கணக்கு வைப்பதிலேயே
முடித்து விட்டேன்
--------------------------------------------
கொடிமரம் அருகே

ஆடையில் படும் அழுக்கை எண்ணி சாஷ்டாங்க
நமஸ்காரம் அதை அஷ்டாங்கமாக மாற்றி விட்டேன்.
---------------------------------------------
வாசலில்

பிச்சை பெறாதவன் திட்டி விட கூடாது என்றும்
செருப்பு இருக்க வேண்டும் என்றும் கடவுளை
வேண்டிய படியே கடக்கிறேன்
சற்று வேக வேகமாய் நடக்கிறேன்...

முரண் - 1


ஆயுதம் எடுத்தவனுக்கு ஆயுதத்தால் சாவு
பிறகு ஏன் அஹிம்சை எடுத்த காந்தி-க்கும்
--------------------------------------

பெரியாரும் கிளி ஜோசியம் பார்ப்பார்
கிளி-இன் சில நிமிட சுதந்திரதிற்காக
-------------------------------------

காசு இருந்தும் கையேந்திகள்

காசு இருந்தும் கையேந்தி உணவு
பைவ் ஸ்டார் ஓட்டலில் buffet

வாழ்த்தா! வழக்கமா?

தினம் தினம் காலை வணக்கம்(குட் மார்னிங் )
வைத்தாலும் சரி வாங்கினாலும் சரி
வாழ்த்தாக தெரியவில்லை அது
வழக்கமாகவே தெரிகிறது
வாழ்த்தா! வழக்கமா?

Popular Posts