Medical Physicist - மருத்தவ இயற்பியலார் - Part II



தொடர் பதிவு பாதையும் பதிவும்: Medical Physicist மருத்தவ இயற்பியலார் - Introduction


கேன்சர் (புற்று நோய்) சிகிச்சையில் ஒரு வகை கதிரியக்க சிகிச்சை முறை.அதாவது இங்கிலீஷ் -ல் சொன்னா Radiation Therapy . நாங்கள வேலை செய்யும் துறையை Department of Radiation Oncology என்று இங்கிலிஷில் சொல்லுவார்கள். இதில் டாக்டர் ,மெடிக்கல் ப்ய்ச்சிசிஸ்ட்(நாங்க தானுங்க), டேக்னலாஜீஸ்ட் என்ற மூன்று முக்கியமானவர்கள் இருப்பார்கள்.


இதில் மெடிக்கல் ப்ய்ச்சிசிஸ்ட் என்கிற நாங்கள் இரண்டு முக்கிய பணிகளை செய்வோம்.


1 . சிகிச்சைகான திட்ட பணி தயாரித்தல் (Treatement Planning )
2 . சிகிச்சை கருவிகளின் தரத்தை உறுதி செய்தல் (Quality Assurance )


வளர்ந்த நாடுகளில் சிகிச்சைகான திட்ட பணி தயாரித்தல் வேலையை மெடிக்கல் ப்ய்ச்சிசிஸ்ட் என்பவரும் சிகிச்சை கருவிகளின் தரத்தை உறுதி செய்தல் வேலையை Dosimetrist என்பவரும் செய்வார்கள்.அது எதுக்கு நமக்கு..நாம நம்ம கதைக்கு வருவோம்..




முதலில் நாம்ப "சிகிச்சை கருவிகளின் தரத்தை உறுதி செய்தல் (Quality Assurance )"வேலையை பற்றி பார்போம்.கேன்சர் (புற்று நோய்) கதிரியக்க சிகிச்சை முறையில் பயன்படும் இயந்திரத்தை வாங்கும் போது எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுதா என்று பார்க்கணும். அது மட்டும் இல்லாமல் சீரான அல்லது பரிந்துரைக்க பட்ட இடைவெளியில் தொடர்ந்து அந்த இயந்தரம் ஒழுங்கா வேலை செய்யுதா என்று பார்க்க வேண்டும். இயந்தரதின் செயல்பாடு வரையரக்க பட்ட படி இல்லை என்றால் அதை சரி செய்ய பொறியாளரை நாங்கள் அழைப்போம் (கவனிக்க: நாங்கள் பொறியாளர் அல்ல... கதிரியக்க சிகிச்சை முறையில் பயன்படும் இயந்திரத்தை சரி செய்வது எங்கள் வேலை அல்ல...)

எப்படின்னு கேட்டிங்கனா நம்ப டிவி வாங்கும் போது கலர்,brightness ,contrast ,mute ,எத்தனை channel அப்படீன்னு செக் பண்ணி பாக்கறோம் இல்ல அது மாதிரி இதுவும்..அப்பறம் கொஞ்சம் நாள் கழித்து சவுண்ட் சரியாய் கேடகலேன்னா நாம்ப டிவி மெக்கானிக்கை கூப்டற மாதிரி தான்..

நீங்க கேக்கறது புரியுது..ப்ரிச்சனை வந்தா கூப்டலாம்..ஏன் இடையில் சும்மா சும்மா செக் பண்ணி பார்க்கணும் என்று ..


அதாவது நம்ப டிவி ஆடியோ output 500Watts என்று வச்சுகோங்க. நம்ப யாரும் அது 500Watts இருக்கானு செக் பண்ண மாட்டோம்..அப்படியே அது கொஞ்சம் கூட குறைத்து இருந்தாலும் அது ஒரு பிரச்சனை இல்ல.. முதலில் ஆடியோ output 500Watts இருந்து பிறவு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்தாலும் நம்ப volume பட்டனை அதிகமாக்கி வர வர காது சரியாவே கேட்க மாட்டேங்குக்துன்னு சொல்லிட்டு ஆடியோ output 0watts ஆகும் வரை வெயிட் பண்ணுவோம். இது நடந்தாலும் அது ஒரு மிக ப்ரிச்சனை அல்ல ..ஆனால் இந்த கதிரியக்க இயந்தரம் தவறு செய்தால் ஒரு நோயாளிக்கு செல்லும் சிகிச்சை தவறு ஆகிவிடும் வாய்ப்பு உள்ளத்தால் இயந்தரம் தொடர்ந்து சோதணைக்கு உட்படுத்தபடுகிறது. இந்த பணியை நாங்கள் செய்து வருகிறோம்..

நாங்கள் இரண்டு வருடம் படித்ததை இரு பதிவுகளில் பதிந்து விட முடியாது என்பதால்...

மழைக்கு ஒதுங்கிய ஞாபகங்கள்...




மேக மூட்டமாய் இருப்பதால் வீட்டுக்கு செல்லும் போது மழை வந்து விட கூடாது என்ற எண்ணத்துடனும் வீடு வந்தவுடன் மழையை எதிர் பார்த்து மழை வந்தால் ரசிக்கும் சராசரி மனிதன் நான்.எனக்கு மழை மீது பெரிய ஆர்வம் இல்லை என்ற போதும் மழைக்கும் எனக்குமான தொடர்பு பல ஆச்சரியத்தையும் அதன் குறித்த பதில்களையும் யோசிக்க வைத்து உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இங்கே பெய்து கொன்டிருக்கும் மழையை ரசித்த படியே மழைக்கும் எனக்குமான உறவை மனம் லேசாய் அசை போட்டது. எனக்குள் பெய்த ஞாபக மழையில் உங்களுக்கு சில சாரல்கள்...



எனது சின்ன வயதில் மிக பெரிய லட்சியம் ஒன்று இருந்தது. அது என்னவென்றால் மழை முடிந்து போகிற இடத்தை (நிலபரப்பு) பார்த்து விடுவது .இதற்கான வாய்ப்பு பயணத்தில் மழை வரும் போது மட்டும் தான் கிடைக்கும்.ரயில் பயணம் என்றாலும் சரி அது என் அம்மாவுடன் நான் சென்ற 407 வேன் என்றாலும் சரி மழையின் ஈரம் சாலையில் முடியும் இடத்தை பார்த்து விட முயற்சித்தும் எனது தூக்கம் அல்லது கூட வரும் என் அம்மாவுடனான பேச்சு இந்த இலட்சியத்தை அடைய விடாமல் தடுத்துவிடும்.சற்று நேரத்தில் ஈர நிலத்தில் இருந்து சாதாரண நிலம் வந்து விடும் போது இன்றும் தோத்து விடோம் என்ற உணர்வு ஒட்டி கொள்ளும். அது மட்டும் அல்லாது மழை வரும் இடத்தை நாம் கடந்து விட்டோமா அல்லாது மழை வருவதின் செறிவு குறைந்து மழை இங்கு பெய்ய வில்லையா என்ற கேள்வி தொத்தி கொள்ளும்.

இப்போது போலவே நான் சின்ன பையன் இருந்த போதும் மழை வரும் நாட்களில் பள்ளிக்கு விடுமுறை விடுவார்கள்.பெரும்பாலும் இந்த மழை காலையில் வராது. அப்படியே வந்தாலும் பள்ளி செல்லும் நேரத்துக்கு கொஞ்சம் நேரம் முன்னாடி நின்று விடும்.(இப்ப கூட அப்படி தான் ) சாயங்காலம் தான் அதிகமாக வரும் அதனால் கடைசி இரண்டு பிரிவுகள் (peroids) மட்டும் குறைத்து அனுப்பி விடுவார்கள்.மழை காரணமாக மைதானம் ஈரமாய் இருப்பதால் நம்மை விளையாடவும் அனுமதிக்க மாட்டார்கள்.வீட்டில் இருந்த படி விளையாட முடிந்த விளையாட்டு காகித கப்பல் விடுவது தான்.

என் அம்மா திடீர் என்று மழை வரும் ஒரு நாளில் செய்து குடுத்த வாழைக்காய் பஜ்ஜியின் சுவை அதன் பின் பலமுறை நான் செய்ய சொல்லி கேட்ட போது கிடைக்கவே இல்லை. அது தான் நான் எதிர்பாராமல் கிடைக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சயை அறிந்த ஒரு சமயம்.


என் ஆயாவுடன் எங்கள் சொந்த ஊரில் இருக்கும் போது மழை வரும் போது ஓட்டில் இருந்து வடியும் நீரை பிடித்து வைக்க தோணி என்ற ஒன்று இருக்கும்.அதன் கீழ் வாளி(bucket ) வைத்து நீரை சேமித்து வைப்பது அவரது வழக்கம். நான் என் ஆயாவும் அதை பார்த்து கொண்டே இருப்போம். அது நிறைந்தவுடன் அடுத்த வாளி,என்று தொடர்ந்து எடுத்து எல்லா பாத்திரத்தை நிறைத்து விடுவது வழக்கம்.அந்த நீரை துணி தொவைக்க பயன் படுத்துவார். மழை நீரில் துணி துவைத்தால் அழுக்கு நல்லா போகும் என்று அவர் சொல்லுவார்.அன்று என் ஆயா சொல்லாமல் சொல்லி கொடுக்க நினைத்தது மழை நீர் சேமிப்பாய் கூட இருக்கலாம்.


புத்தகம் நனைந்து விடாமல்
அதை சட்டைக்குள் நுழைத்து
நடந்த பள்ளி கூட நாட்கள்...

நான் நனைந்து விடாமல் புத்தத்தை
என் தலையில் ஏற்றி இருந்த கல்லூரி நாட்கள்...

வளர வளர எனது எண்ணங்கள் மாறும் விதத்தையும் உணர்ந்த மற்ற ஒரு மழை நாள் அது.


ஞாபக சாரல் தொடரும் ..

சத்தம் போட்டு சொல்லாதே - 10

நடந்தது என்ன...நிஜம் ..


தினமும் இரவு ஒளி பரப்பாகும் ஜீ டிவியில் வரும் நம்பினால் நம்புகள் ,சன் டிவியில் வரும் நிஜம்,விஜய் டிவியில் வரும் நடந்தது என்ன போன்ற நிகழ்சிகளில் எல்லாம் பெரும்பாலும் ஹிந்து மத சடங்குகளையும் அதன் சார்ந்த மூட நம்பிகைகளையும் குறித்து அதிகமாக பேச படுகிறது. கிருஷ்துவ மதத்திலும் முஸ்லிம் மதத்திலும் இருக்கும் நம்பிக்கைகள் குறித்து இதுவரை பேசியதாய் எனக்கு தெரியவில்லை. இதை பார்க்கும் போது எனக்கு கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமத்தில் சொன்னது தான் நினைவு வருகிறது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


""வேறு எந்த மதத்தின் மீது யாரும் கை வைத்து விமர்சனம் செய்து விட முடியாது இந்து மதத்தை செய்ய முடியும் அப்படி செய்த பின்னாடியும் கூட இந்து மதம் நிலைத்து நிற்கிறது என்றால் விமர்சனங்களையும் கடந்து அதன் நியாயம் பரவி இருக்கிறது என்பது பொருள்"

சத்தம் போட்டு சொல்லாதே - 9


குமுதம் இதழிலில் வெளி வந்து கொண்டிருந்த ஞாநியின் ஓ பக்கங்கள் இனி மேல் வெளி வராது என்பது எனக்கு கொஞ்சம் வருத்தமாகவும் உள்ளது.அவரின் சில கருத்துக்களை நீக்க சொல்லி குமுதம் கேட்டதாகவும் அவர் மறுத்து விட்டதாக அவர் தெரிவித்து உள்ளார். அவரின் கருத்தை அவரது வலை பக்கத்தில் படித்து விட முடியும் என்றாலும் எனக்கு தோன்றும் கேள்விகள்
1 . இந்தியா டுடே புத்தகத்திற்காக நித்யானந்தா பற்றி அவர் எழுதியதில் இருந்து சிலவற்றை இந்தியா டுடே நீக்கி விட்டு வெளிட்டது என்று கூறி இருந்தாலும் அதில் தன் கருத்தை நீக்கி வெளியட அனுமதிதித்து விட்டு இப்போது மட்டும் கருத்தை நீக்கி வெளியட மறுத்து வெளியேறுவது எதனால் ?
2 . குமுதம் ,விகடன் போன்ற முக்கிய பத்திரிக்கைகள் கூட இப்போது பயப்படுவதால் நமது முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு இருக்கும் சகிப்பு தன்மை அவரது வாரிசுகளுக்கு இருக்காதோ என்று அச்சம் கலந்த ஐயம் ஏற்படுகிறது.

ஓ பக்கம் தூரம் ஆனது..இதுவும் கடந்து போகும் என்று நம்புவோமாக!!!

Medical Physicist - மருத்தவ இயற்பியலார் - Part I


சமீபத்தில் நான் எனது உறவினர் ஒருவரிடம் பேசி கொண்டு இருந்த போது
அவர் எதேட்சையாக கேட்டார். நீ என்ன வேலை பார்க்கிறாய் என்று...
அந்த உரையாடல் கீழே இதோ

நான்:மெடிக்கல் ப்ய்சிசிஸ்ட்

என் உறவினர்:அப்படினா என்ன வேலை..கொஞ்சம் புரியர மாதிரி சொல்லுபா..

நான்:(ஆரமிபிச்சுடாங்காய ஆரமிபிச்சுடாங்க என்று நினைத்த படியே)கான்சர் நோயாளிகளுக்கு radiation -ல் எப்படி ட்ரீட் பண்றதுன்னு நாங்க பிளான் பண்ணுவோம்.

என் உறவினர்: ஒன்னும் வெளங்கலையே...என்னமோ பெரிய படிப்பு பெரிய வேலைன்னு சொன்னங்க..ஆனா நீ என்னடானா என்ன படிச்சேன் கூட சொல்ல தெரியாம தடுமாற..இந்த காலத்து பசங்களுக்கு எதையும் பட்டுனு சொல்ல தெரியல..

நான்: அதாவது கான்சர் வந்தா radiation இல்ல!! இல்ல!!(அவருக்கு புரிய வேண்டும் என்று) கரண்ட்டு குடுப்பாங்க அப்படின்னு சொல்லுவாங்க இல்லையா..அதுல...

என் உறவினர்: (என்னை இடை மறித்து) ஆமா ஆமா நம் முத்துசாமிக்கு கூட முப்பது நாள் போய் கரண்ட்டு வச்சாங்க..அந்த கரண்ட்டு வைக்கிற வேலைன்னு சொல்லு.

நான்: இல்லைங்க அவங்க எங்களுக்கு கீழ் வேலை பார்க்கும் Technologist. நாங்க அவங்களுக்கு எவ்ளவு நேரம் radiation இல்ல இல்ல கரண்ட்டு,அப்பறம் அந்த கரண்டை எப்படி குடுக்கணும்னு சொல்லுவோம்.
என் உறவினர்: அப்பா நீ டாக்டரா..


நான்:(இப்பவே கண்ணை கட்டுதே என்று நினைத்து படி) இல்லைங்க டாக்டர் எங்களுக்கு கரண்டை எங்க எவ்வளவு கொடுக்கணும்னு சொல்லுவாங்க..நாங்க கரண்டை எப்படி எவ்வளவு நேரம் கொடுக்கணும்னு டாக்டர்-க்கு அச்சிஸ்ட்(assist) பன்னுவோம்.

என் உறவினர்: அட டாக்டர்க்கு அச்சிஸ்ட்டன்ட் அப்படினா கம்பவுண்டர்னு சொல்லு..

நான்: இல்லைங்க நாங்களும் டாக்டர் மாதிரி தான் ஆனால் டாக்டர்க்கு கொஞ்சம் கீழ்.. புரிஞ்சதுங்களா...

என் உறவினர்: லைட்டா புரிஞ்சது...முழுசா புரியல..

நான்:அப்பாட லைட்டாவது புரிஞ்சதே..

என் உறவினர்:நீ மினி டாக்டர் வேலை பாக்கிற...கரெக்டா ..

நான்: கரெக்ட்டு தான் ஆனா...

என் உறவினர்: என்ன ஆனானு இழுக்ற..எதாவது தப்புனா சொல்லுபா

நான்:(மறுபடியும் முதல் இருந்தா என்று பயந்து) இல்லங்க கரெக்ட் தான்..ரொம்ப கரெக்ட் என்றேன்.

பின் குறிப்பு: மெடிக்கல் ப்ய்ச்சிஸ் (Medical Physics ) படிச்ச நாங்க ஒரு உண்மை சொல்லி ஆகணும்...
நாங்க மெடிக்கல் ப்ய்ச்சிஸ் (Medical Physics ) படிக்க பட்ட கஷ்டத்தை விட என்ன படிச்சோம்னு மத்தவங்க கிட்ட சொல்லி புரிய வைக்க ரொம்ப கஷ்ட படுறோம்.


இருந்தாலும் தொடர் பதிவின் மூலமாக Medical Physicist என்னவென்று சொல்லியே தீருவேன்.அதுக்கு அப்பறம் யாராவது நீ என்ன படிச்சு இருக்காய் என்று கேட்டால் கீழ் உள்ள படத்தில் உள்ளது போல் பதில் சொல்லுவேன்

நண்பர்கள் தினமாம்

சரி வாங்க கொஞ்சம் நட்பை பத்தி கொஞ்சம் பேசுவோம்
Scene 1
நட்பு னா என்னனு தெரிஞ்சுக்க நமக்கு தெரிந்த தமிழ் சினிமா என்ன சொல்லுதுன்னு பார்த்தா
நட்புகாக உயிரை குடுப்பது,காதல் தூது போவது , எப்ப கேட்டாலும் கணக்கு பார்க்காம காசு செலவு செய்வது,
நண்பன் சாகும் போது தானும் சாவது , நண்பனுக்காக பழியை ஏற்று கொள்வது
நம்ப தமிழ் கலாச்சார கதைகள் என்ன சொல்லுதுன்னு பார்த்தா நண்பன் செய்வது தப்பு என்று தெரிந்தும் அவனுக்காக போராடுவது ,ஆயுள் வளர்க்கும் ஏதேனும் பொருள் கிடைத்தால் தான் சாப்பிடாமல் தான் நண்பனுக்கு தருவது
மானத்தை காக்கும் கை மாதிரி இருக்கணும் என்றும் சொல்லுது..நானும் +2 படிக்கும் போது நட்பை பத்தி ஒரு கவிதை எழுதினேன்
அது என்னன்னா உடலும் உயிரும் போல, நிழலும் நிஜமும் போல,பூவும் மனமும் போல, நகமும் சதையும் போல என்பதற்கும் அதிகமானது என்பது போல தொடரும்.
Action cut camera move to flash back
Scene 2

நட்பு
உடலின் உயிர் அல்ல - இறப்பில் உடலை விட்டு பிரிய
நிஜத்தின் நிழல் அல்ல -இருட்டில் நிழலை விட்டு பிரிய
பூவும் மனமும் அல்ல - வாடிய பின் பூவை விட்டு பிரிய
சதையும் நகம் அல்ல -வளர்ந்ததும் சதை விட்டு பிரிய
உயிரின் உறைவிடம் எது என உரைத்திட இயலும் ?
அன்னையின் அன்பை எதை கொண்டு அளந்திட இயலும்
உணர்ந்திட மட்டுமே நட்பு.. உணர்ந்திட மட்டுமே நட்பு..

என்று எழுதி இருந்தேன்
அதன் பின்னால் நட்பு என்ற இடத்தில் நாட்டு பற்று என்று போட்டு வேறு ஒரு இடத்தில் இந்த கவிதையை use செய்து விட்டேன்
Action Cut Back to Scene 1
இப்ப நான் எழுதியதை மட்டும் இல்லை மேல் உள்ள பல விசயங்களை படித்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பாய் இருக்கிறது.
இப்போது நட்பு குறித்த வரைமுறைகள் மாறி இருப்பதாய் தான் எனக்கு தோன்றுகிறது.
பல தூரங்களுக்கு அப்பால் பல பணிகளுக்கு இடையில் R u there என்ற சாட்டிங் மெசேஜ்-இலும் சிறப்பாய் வருகிற SMS அல்லது scrap மெசேஜ்-லும் எந்த ஒரு காரணமும் இல்லாமல் வருகிற டைம் பாஸ் போன்களிலும் ஆர்குட் & facebook பக்கங்களில் கமெண்ட் செய்து கலாய்பதிலும் தான் இப்போ நட்பு வேகமாய் பயணித்து கொண்டு இருப்பதாய் எனக்கு படுகிறது
முகம் பார்த்து பழகாமல் நெஞ்சத்தால் பார்ப்பது(முக நக நட்பது,அக நக நட்பது ) என்று திருவளுவர் இதை தான் கூறி இருப்பர் என்று நினைகிறேன்.

எனது பழைய கவிதையில் சில கருத்து மாற்றங்கள் இருந்தாலும்

உணர்ந்திட மட்டுமே நட்பு.. உணர்ந்திட மட்டுமே நட்பு.. என்பதில் மாற்றம் இல்லை



அனனவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்

Popular Posts