மெய் பொருள் காண்பது அறிவு


படிக்கும் போது புவியல் பாடத்தில் 5 மார்க் வாங்குவதற்காக உலக வரைபடத்தை முதன் முதலில் பார்த்தது. அதன் பிறகு நம் நண்பர்கள் வெளி நாட்டில் எங்கு இருக்குகாங்க என்று பார்க்க தான் நாம பல பேரு உலக வரைபடத்தை பயன்படுத்தறோம்.உலக வரைபடத்தில் கிரீன்லாந்து மற்றும் ஆப்ரிக்கா ரெண்டையும் பார்த்திங்கனா கிரீன்லாந்து என்னவோ ஆப்ரிக்காவை விட கொஞ்சம் தான் சிறிசு என்று தோணும் ஆனால் அது உண்மை இல்லை.ஆப்ரிக்காவின் பரப்பளவு (விக்கிபீடியா படி) =30,221,532 km2 கிரீன்லாந்துவின் பரப்பளவு (விக்கிபீடியா படி) =2,166,086 km2 அதாவது ஆப்ரிக்கா க்ரீன்லந்தை விட 14 மடங்கு பெரியது.பிறகு என் உலக வரைபடம் அப்படி உள்ளது என்றால் கூம்பு(Cone), கோளம்(Sphere) போன்றவற்றை தட்டையாக மாற்றி வரையும் முறையை பொறுத்து இதன் அளவுகள் மாறுபடும்.கோணத்தை நிலையாக கொண்டு வரைந்தால் நாம் பிரிக்கும் மைய இடத்தில் இருந்து நகர நகர உருவம் மாறும்.(The distortion of the size will be in the increasing pattern if you move away from the centre.) இந்த முறைக்கு பெயர் Mercator projection. Mercator projection உள்ள இந்த குறைபாடு எல்லாரும் அறிந்தது.இதனால் Mercator projection- ன் குறைபாடை Greenland problem என்றும் கூறுவார்கள்.தொலைவை விட கோணத்துக்கு முக்கியத்துவம் இருப்பதால் கடல் வழி பயணத்துக்கு இந்த Mercator projection மிகுந்த பயனுள்ளது.

இதை தான் வள்ளுவர் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்று கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

Popular Posts