உள்ளது உள்ளபடி - 1

(நன்றி:நண்பர் அண்டோ வாஸ் எழுதியது)
(முன் குறிப்பு :எனது நண்பன் சில மாதங்களுக்கு முன்பு எழுதிய பதிவு என்பதால் சற்று பழையதாக தோன்றலாம்.ஏற்கனவே படித்தவர்களுக்கு கொஞ்சம் போர் அடிக்கலாம்...பொறுத்தருள்க...)

12-May- 2009

சமீபத்தில் சொந்த ஊரான ராமநாதபுரம் சென்றிருந்தேன்,காரணம் நானும் ஒரு இந்திய பிரஜை என்பதற்கான ஒரே அடையாளமான ஓட்டுரிமை,

சேர்தலையிலிருந்து ரயில் பிரயாணம் நடுநிசியில் தொடங்கினேன் , upper berth கிடைத்த சந்தோசத்தில் மேலே ஏறினேன் ; எதிர் படுக்கையில் ஒரு இளம் பெண் (20 அல்லது 22 வயது இருக்கும் ) , இன்னொரு முறை முகம் காண மனம் சலனப்பட்டது , முடியவில்லை இரவெல்லாம் புரண்டு புரண்டு படுத்தபடி முகம் காண முயற்சித்தேன் முடியவில்லை மன சஞ்சலத்தில் கண்ணுறங்கி போனேன் , அதிகாலை 6 மணிக்கு எழுந்து காலை கடன்களை முடித்து கையில் தேநீர் குவளையுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்தேன் ,chart இல் பேர் காண யோசித்தேன் , இந்த பாழாய் போன மழையால் chart கிழிந்து காணமல் போயிருந்தது ச்சே !

ஏழு மணிக்கு அவள் இறங்கி வந்தாள், அபரிதமான அழகு என்று சொல்வதற்கில்லை ஆனாலும் கலையான முகம் (மலையாளீ ) , அவள் தேநீர் பருகும் போது தான் என்னுடைய இருப்பு உணரப்பட்டது , அரை கண்ணில் நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டாள் , சட்டென்று எழுந்தேன் கண்ணாடி காண , தலை ஒழுங்காக வாரியிருந்தேன் அப்பொழுதுதான் உணர்ந்தேன் வயசானதை , மனதில் குறித்து கொண்டேன் அம்மாவிடம் பொண்ணு பார்க்க சொல்லணும் என்று திருநெல்வேலி junction இல் இறங்கி போனாள் அப்பெண் , பேர் கேட்க ஆசை இருந்தும் "sorry சித்தப்பா" என்று சொல்லிவிட்டால் மௌனமாகி முனகினேன் (இந்த ஹீரோகளுக்கு மட்டும் எப்படி சமயம் அமைகிறது !)

இன்னும் சொல்வேன்

No comments:

Post a Comment

Popular Posts