மருதாணி



டேய் கண்ணா..
நீ மருதாணியாய் இருந்திருக்கலாம்
சில காலமாவது என் கையோடும்
சேர்ந்திருக்கலாம் நானும் உன்னை
கையில் வைத்து தாங்கி இருப்பேன்

தமிழ் வழி கல்வி

மின்னழுத்தமானி - POTENTIOMETER
தனி ஊசல் - SIMPLE PENDULUM
விடுபடு திசைவேகம் -ESCAPE VELOCITY
பாதரசமானி - HYGROMETER
காந்த புல செறிவு -MAGENETIC FLUX
...........
........
பகுமுறை வடிவியல் -ANALYTICAL GEOMETRY
பகா எண்கள் - PRIME NUMBERS
கர்ணம் - ??
........
.......
கரிம - ORGANIC
வினையூக்கி - CATALYST
மூலக்கூறு - MOLECULE
.....
....
மேலே உள்ள அட்டவணை தமிழ் வழி கல்வியில் படித்த ஒவ்வொரு மாணவனும் தன் மனதில் 12 -ம் வகுப்பு முடித்து கல்லூரி படிக்கையில் போடும் அட்டவணை தான்.
அறிவியல் பாடங்களை தமிழ் வழி கல்வியில் பயில்வது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக பலரும் கருதுவது இயல்பு.
உடனே "தாய் மொழியில் தான் ஜப்பான்ல படிக்கிறாக...நம்ப சீனாவுல படிக்கிறாக" என்று யாராவது உங்களிடம் சொல்ல கூடும்.
அவர்களிடம் கேளுங்கள் உங்கள் மகன் எங்க படிக்கிறாக..இல்ல உங்க பேர பிள்ளைக எங்க படிக்கிறாக... என்று.
ஏன் ஒருவருக்கு மட்டும் எல்லார் மத்தியில் நல்ல செல்வாக்கு என்றால் அவர் பன்மொழி வித்தகர் அதனால் தான் என்று பாராட்டு பத்திரம் தருகிறார்கள்.
ஹிந்தியை ஏன் எதிர்த்தீர்கள் என்றால் ஹிந்தியை எதிர்க்கவில்லை ஹிந்தி திணிப்பை தான் எதிர்த்தோம் என்றும் விளக்கமும் சொல்லும் ஊரு இது.
தமிழ் மொழி மாநாடு... தமிழ் செம்மொழி மாநாடு...மயிலாடு.. என்று பார்த்து கொண்டிராமல்

போங்கயா போங்க போயி புள்ள குட்டிகள படிக்க வைங்க..
மறக்காம இங்கிலீஷ் மீடியத்துல படிக்க வைங்க ..
நான் சொல்வதெல்லாம் ரொம்ப சிம்பிள்
தமிழை வாழ்கைக்காக படிங்க..
இங்கிலிஷ வருமானத்துக்காக படிங்க...


பின் குறிப்பு:(இந்த பதிவை தமிழுக்கு எதிரானதா நெனைக்காதிங்க..ஆங்கிலத்தில் படித்து தமிழ் மொழியிலும் அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டால் நன்று.)

இது தான் வாழ்கையோ

தீபாவளியோ பொங்கலோ ஒரு சராசரி நாளாகவே கழிகிறது வெளி மாநிலத்தில் வசிக்கும்
எங்களுக்கு.குஜராத்தில் இருந்ததால் பட்ட திருவிழா (Kite festival) காரணமாக இந்த பொங்கல் ஒரு விடுமுறை நாளாக கழிந்தது.பொங்கல் அன்று 5 மணி அளவில் நானும் என் ரூம் மேட் பாலாஜியும் மெயின் ரோட்டில் அருகே நடை பயணம் சென்று கொண்டிருக்கையில் சற்று தொலைவில் மேல பறந்து கொண்டிருந்த ஒரு பட்டம் கீழே வர தொடங்கியது.கீழே வந்த பட்டம் ஒரு மின் கம்பியில் மாட்டி கொண்டது.அந்த பட்டதை விட்டு கொண்டிருந்த 7வயது மதிக்கத்தக்க ஒரு பையன் ஒரு பெரிய கம்புடன் வந்து அதை எடுக்க முயன்று சிறிய போரட்டத்திருக்கு பின் அதை மின் கம்பியில் இருந்து விடுவித்தான். மெயின் ரோட்டில் விழுந்த பட்டதின் நூல் அவன் எடுப்பதற்கு முன்பே ஒரு இரு சக்கர வாகணத்தில் மாட்டிக்கொண்டது.தமிழ் பட ஹீரோ போல் அந்த பட்டதை இழுத்துக்கொண்டே போனான் இரு சக்கர வண்டிகாரன். அந்த சிறுவனின் முகத்தை ஒரு சோகம் தோற்றிக் கொண்டது.அதே சோகத்துடன் அவனை நாங்கள் கடந்து சென்று விட்டோம்.என்னுடன் இருந்த பாலாஜி சொன்னார் இதை ஏன் நீங்கள் ப்ளாக்-இல் எழுத கூடாது என்று அந்த பையனை போட்டோ எடுக்க பார்த்த பொழுது அவன் அங்கு இல்லை.நாங்கள் எங்கள் வழக்கமான தூரத்தை தொட்டு விட்டு திரும்பி கொண்டிருந்தோம்.
கிட்ட தட்ட அதே இடம், எங்கிருந்தோ வேறு ஒரு பட்டம் கீழே வர தொடங்கியது.அந்த பட்டம் விழுவதற்கு முன்பே அதை எடுக்க தயராக ஒரு கம்புடன் 11 வயது மதிக்கத்தக்க ஒரு பையன் காத்து இருந்தான்.
நாங்களும் சிறிது நேரம் அங்கு நின்றோம் .
அந்த பட்டமும் அவனுக்கு பெரிய சிரமம் கொடுக்காமல் குப்பை கூள செடியில் விழுந்தது.அவனும் அதை எடுத்து மகிழ்ச்சி அடைந்தான்.
நாங்கள் நினைத்தோம் " இது தான் வாழ்கையோ.. என்று. "

அவனை போட்டோ எடுத்த படியே அங்கிருந்து நகர்ந்தோம்.

சுண்டு விரல்


(நன்றி:நண்பர் அமிர்தராஜ் எழுதியது)

அன்பே உன் காலணிகளை வெறுக்கிறேன்
அவற்றால் நீ அடிப்பாய் என்பதற்காக அல்ல - அவை
உன் சுண்டு விரலை மட்டும் சுமக்க மறுப்பதால் ...

ஏன் இந்த blog spot ??

என்னிடம் சிலர் கேட்ட கேள்விகளையும் "யாரும் இல்லை சாட்சியாக மனம் தான் கேள்வியாக" என்று எனக்கு எழுந்த கேள்விகளையும் காண பதிலை என் (கேள்வி) பதில் என்ற ஒரு புதிய பிரிவில் கீழ் பதிய உள்ளேன்




சிரிப்பு பதில்:
என் நலம் விரும்பிகள் சிலர் நீ ஏன் blog spot -இல் எழுத கூடாது?? என்றனர்.
"நாம்ப வாங்கற அஞ்சுக்கும் பத்துக்கும் இந்த விளம்பரம் தேவையானு" நான் கேட்டேன்.
அதுக்கு" இல்ல இல்ல நீ ஒரு blog spot ஆரம்பித்து அதுல எழுதிட்டு உன் போட்டோவை போட்டு வச்சிரு.
பின்னாடி blog -க்கு வரவங்க பார்த்து படிச்சு தெரிஞ்சு நடந்துக்குவாங்க". என்றனர்.
அப்பறம் நான் உக்காந்து யோசித்ததன் விளைவு தான் இந்த பாதையும் பதிவும்..
வரலாறு முக்கியம் ..
சிறப்பு பதில்:
என் பார்வை... வெளிப்பாடு ..உரையாடல்..சின்ன பகிர்வு
உங்களுடன் உள்ள இடைவெளி குறைப்பதற்கான ஒரு முயற்சி அவ்வளவுதான்..
நீங்கள் ஒவ்வொரு பதிவையும் படித்தவுடன் "அட ஆமால்ல" என்று உங்கள் மனதில்
தோன்றினால் அதுவே அந்த பதிவின் வெற்றி தான்.

சத்தம் போட்டு சொல்லாதே-4


வரும் 26 -ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல்.
முக்கிய வேட்பாளர்களில் ஒருவர் போரை நடத்த சொன்ன மஹிந்த ராஜபட்கச்சே
மற்றொருவர் போரை நடத்திய தளபதி சரத் பொன்சேகா
இவர்களில் யாரோ ஒருவர் வெற்றி பெற போகிறார்கள்.
யார் வெற்றி பெற வேண்டும் ?? யார் வெற்றி பெற்றால் தமிழருக்கு லாபம் ?
யாம் அறியேன் பரா பரமே!!
நீயே சொல்லடி சிவசக்தி!!

GLOBAL WARM(N)ING


GLOBAL WARM(N)ING
இப்போது இது ஒரு பிரபலமான வார்த்தை
26 /11 என்றதும் நினைவுக்கு வருவது மும்பை தாக்குதல்...
26 /12 /2004 , 26 /01 /2001 என்றதும் நினைவுக்கு வருவது ?????.
பலருக்கு தெரியாது
26 /12 /2004 --------> சுனாமி.
26 /01 /2001 --------> குஜராத் நில நடுக்கம்.
26 /11 தாக்குதலில் பலி எண்ணிக்கை 150 முதல் 200 வரை..
சுனாமி & நில நடுக்க நிகழ்வில் பலி எண்ணிக்கை பல ஆயிரத்தை தாண்டும்..
நீலகிரி நிலசரிவு ,கர்நாடகா , ஆந்திரா வெள்ள தாக்குதல் என நீளும் இயற்கையின் தாக்குதல்..
பத்திரிகைகளும் சரி நாமும் சரி
26 /11 நினைவு நாள் நிகழ்வுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பிற இரு நிகழ்வுகளுக்கு
கொடுப்பதில்லை.ஏன் ???
தீவிரவாத தாக்குதல் மூன்றாவது நபர் செய்தது..செய்வது...
மற்ற இரண்டிலும் நமது பங்கும் கொஞ்சம் உள்ளது அதனால் தான்..

Copenhagen மாநாட்டில் வளர்ந்த நாடுகள் வளரும்
நாடுகளை புறக்கணிப்பதாய் கூறி வெளி வந்த நம் நாடு கூட என்ன செய்யும்.

தாஜ் மஹால் பக்கம் வசிப்பவர்கள் மண்ணெண்ணெய் உபயோகிக்க கூடாது என்று
கூறி விட்டு அதன் பக்கத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய five star ஹோட்டல்
இரண்டு திறக்க அனுமதி வழங்கும்.
ஒரு டிவிஎஸ்-50 இல் வரும் நடுத்தர வர்க ஆசாமியிடம் டிராபிக் போலீஸ் pollution control certificate - இல்லை என்று லஞ்சம் கேட்க வழி வகுக்கும்.
சரி நாட்ட விடுங்க.. நான் என்ன செய்யலாம்
மரம் வைத்து தினம் தண்ணீர் ஊற்ற முடியாது...
பிளாஸ்டிக் use செய்யாமலே இருக்க முடியாது..
எல்லா இடத்துக்கும் நடந்தே செல்ல இயலாது...
என்று யோசித்த படியே நடக்கையில் கையில் படுகிறது ஒரு சின்ன மரத்தின் கிளை..
எப்பொழுதும் சடக் என்று ஒடித்து விடும் வழக்கம் கொண்ட எனக்கு அதை இப்பொழுது ஏனோ ஒடிக்க எனக்கு மனம் வரவில்லை...
இது கூட copenhagen மாநாட்டின் ஒரு வெற்றியாக இருக்கலாம்...

பின் குறிப்பு:(நான் பல முறை என் உடன் பணி புரிந்த பிரசன்னாவை கடுப்பேத்த அவன் கண் முன்னால் அவன் வளர்த்த செடிகளை கிள்ளி இருக்கிறேன். Sorry பிரசன்னா... )

நினைவு நாள் அஞ்சலி

(முன் குறிப்பு :என் ஆயாவின் நினைவு நாள் 14.01.2006.அதன் நினைவாய் ஒரு நினைவு அஞ்சலி )

அறிமுகம்

என் ஆயா பெயர் சின்ன குட்டி
நான் தான் அவளின் செல்ல குட்டி

பல கார்டு என் பர்சில் இருந்தாலும் அவள்
பெயர் தான் விஸ்டிங் கார்டு - சின்ன குட்டி
பேரன் கிருஷ்ணப்பன் (செந்தில்)
என்ற அடை மொழியோடு தான்
என் வாய்மொழி தொடங்கும் எங்கள் ஊரில்

எப்பவோ விசேஷத்தில் கொடுத்த மலேசிய பிஸ்கட்டும்
என் வரவுக்காக காத்து கிடக்கும் என் ஆயாவோடு
பார்த்து பார்த்து பிஸ்கட் பதத்து போகும்
ஆனால் அவள் பாசம் மட்டும் ??

என்னை திட்டுவதாய் நினைத்து கொண்டு
"இப்படியா பண்ணுவ..நல்லா இருப்ப!அரசாள்வ! "
என்று வாய்க்கு வந்தபடி வாழ்த்துவாள்.

நடுவே சின்ன வட்ட படிகம் அதனுள்
நந்தி,சிவன் காட்சி என்ற அவள்
மோதிரத்தின் சிறப்பு என்னை ஆக்கி
இருக்கிறது பல முறை வியப்பு .



இறுதி நாட்கள்

யார் யார்க்கெல்லாம் அவள் பிறப்பிற்கான
தேதியை எண்ணி கொண்டிருந்தாளோ
அவர்களெல்லாம் இவளின் இறப்புக்கான
தேதிகளை யூகித்து கொண்டு இருந்தனர்.

தன் மார்பில் வாய் வைத்து பால் குடித்த
பிள்ளைகள் எல்லாம் தன் வாயில் பால்
ஊற்றிய போதே அவள் பாதி இறந்திருப்பாள்.

நாங்கள் எல்லாரும் நல்லா
இருக்க வேண்டி கொண்டவள்
நல்லா இறக்க நாங்கள்
எல்லாரும் வேண்டி கொண்டோம்

இரங்கற்பா

நான் உன் கடைசி காலத்துல காசி கூட்டி
போயி காட்டனுமுனு காசெல்லாம் சேத்து வெச்சேனே.
ரயில் இல்லாட்டி பீலைட்டுல போலாம்னு கனவெல்லாம்
கண்டேன - அந்த கனவெல்லாம் நிழலாக்கி நீ
இல்லைங்கிறத நிஜமாக்கி போனாயே !!

பொங்கலுக்கு முன்னால போயிட்டா
பொங்கல் கெடயாதுன்னு புள்ளைங்க போலம்புனத
பொய்யாக்க பொறுத்திருந்து பொங்கலன்று
சாயங்காலம் பொசுக்குனு போயிட்டியா ??-இல்ல

மாட்டு பொங்கல் தாண்டி மண்டைய போட்டா
மகனோட பழனி மலை பயணம் முடியாதோனு
ஒரு நாள் முன்னால உன் மூச்ச முடித்தாயா??

உன் வாயில் ஊற்றிய பாலின் மிச்சத்தை தான்
நாங்க வச்ச பொங்கல் பானையில ஊற்றினோம்.
பொங்கல் வச்ச காப்பரசி மிச்சம் தான் நாங்க
உனக்கு போட்ட வாய்க்கரசினு தெரியுமா??

தான் நெய் போட்டு கொடுத்த சத்து மாவை
திண்ற பேரன் தனக்கு நெய் பந்தம் பிடிக்கணும்னு
அவளுக்கு ஆசை - விடுப்பு முடிந்து கிளம்பும்
போது தவறாமல் கேட்பாள் "எனக்கு
எதாவதுனா வர மாட்ட இல்ல" என்று.

நான் பதில் பேசாமல் வந்ததால் வந்த சந்தேகமோ
என்னவோ பொங்கல் பார்க்க தமிழகம் வந்த என்னை
அவளை பொனமாய் பார்க்க செய்து விட்டாள்.. பாவி
அவளை பொனமாய் பார்க்க செய்து விட்டாள்..

விருதுகள் 2009

Happy New Year to all of you..Happy Year Ahead


1.சிறந்த அறிமுக நாயகன் : மு.க. அழகிரி
(மக்களவை தேர்தலில் அறிமுகத்தின் போதே எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறியது,மக்களவையில் தமிழ் மொழியில் பேசுவதற்காக போராடுவதாலும் இவ்விருது இவருக்கு செல்கிறது)
2.சிறந்த டபுள் ஆக்சன் : மத்திய அரசுக்கு (இலங்கை சண்டை, தெலுங்கனா, மும்பை பிற
மாநிலத்தார் தாக்குதல், நுட்ரினோ மையம் ,மலேசிய தமிழர்
பிரச்சனை போன்ற விசயங்களில் இரட்டை வேடம் போட்டதற்காக இவ்விருது இவருக்கு செல்கிறது)
3.சிறந்த நாயகி : சோனியா காந்தி (தனி ஒரு மனிதராக இருந்து மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிக்கு வித்திட்டதாலும், தனது கணவரை கொன்ற விடுதலை புலிகள் இயகத்தை தந்திரமாக பலி வாங்கியதாலும் இவ்விருது இவருக்கு செல்கிறது)
4.சிறந்த வில்லன் : மஹிந்த ராஜபட்கச்சே
(விடுதலை புலிகள் இயகத்தை அழிகின்றேன் என்று கூறி பல குழந்தைகளையும் அழித்து கொன்றமைக்காக இவ்விருது இவருக்கு செல்கிறது)
5. சிறந்த ஸ்டன்ட் : மு.கருணாநிதி
(5 மணி நேர உண்ணா விரதத்தில் இலங்கை சண்டையை நிறுத்தியதாக
அவரே கூறி கொன்றமைக்காக இவ்விருது இவருக்கு செல்கிறது)
6 .சிறந்த திருப்புமுனை : ப. சிதம்பரம் & ஜெ.ஜெயலலிதா ( முதல யார் முதல் வர்றாங்கறது முக்கியம் இல்ல கடைசில யார் முதல் வர்றாங்கறது தான் முக்கியம் என்று ப.கண்ணப்பனுக்கு தேர்தல் வெற்றியில் உணர்த்தியதற்காக இவ்விருது ப. சிதம்பரம் செல்கிறது, இலங்கை பிரச்சனை குறித்த தனது நிலயை மாற்றியதற்காக இவ்விருது ஜெ.ஜெயலலிதாக்கும் செல்கிறது )
7 .சிறந்த நாயகன் : மு.க.ஸ்டாலின்
(படிப்படியாக வளர்ந்து துணை முதல்வர் பதவிக்கு வந்துள்ளதாலும் ,
அண்ணன் அழகிரிக்கு ஒரு விருது கொடுக்கபட்டுள்ளதாலும் இவ்விருது இவருக்கு செல்கிறது)
8 . சிறந்த வாழ்நாள் சாதனையாளர்: Dr .Y.S.ராஜ சேகர ரெட்டி
(ஊரில் மட்டும் அல்லாது மக்கள் மனதிலும் பாலம்
கட்டியவர்.பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும்)

9. சிறந்த இயக்குனர் : மு.கருணாநிதி
(தனது சூரிய குடும்பத்தில் சுற்றி உள்ள உள்ள ஸ்டாலின், அழகிரி ,கனிமொழி,கலாநிதி,தயாநிதி,ராஜாத்திஅம்மாள்,தயாளு அம்மாள், தி.மு.க கட்சி,தமிழக ஆட்சி என்ற 9 கோள்கள் அனைத்தையும் சிறப்பாக இயக்குவதால் இவ்விருது இவருக்கு செல்கிறது)



10. சிறந்த blogspot :பாதையும் பதிவும்
(தனக்கு தானே விருது வழங்கி கொள்ளலாம் என்று அண்ணா விருதை காஞ்சிபுரம் விழாவில் தனக்கே வழங்கி கொண்டும், சிறந்த வசனகர்தா என்று தமிழக அரசின் விருதை தனது உளியின் ஓசை படத்திருக்கு வழங்கி கொண்டும் நமக்கு எடுத்து காட்டை இருந்த கலைஞருக்கு நன்றி)


பின் குறிப்பு : பெரும்பாலான விருது கலைஞர் & கோ - விருக்கு செல்ல காரணம் நல்ல போட்டியாளர்கள் இல்லாதது தான்.
ஜெ.ஜெயலலிதா அவர்களும் பல மாதம் காணமல் போனவர் பட்டியலில் இருந்ததும் காரணமாக கூறப்படுகிறது.

சத்தம் போட்டு சொல்லாதே-3


ஒரு கட்சி அதிர்ஷ்டம் தான் நாட்ட காப்பாத்துது என்று சொல்லுது.
ஒரு கட்சி ஆண்டவன் ராமன் தான் நாட்ட காப்பாத்துது என்று சொல்லுது.
அதிர்ஷ்டமும் ஆண்டவனுமும் தான் நாட்ட காப்பத்தனும் என்றால் அரசு எதுக்கு ?? இதனால் தான் அமெரிக்கா,
பிரிட்டன்,ஆஸ்திரேலியா ,கனடா போன்ற நாடுகள் இந்தியாவிருக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்று கூறி உள்ளது.

அவஸ்த்தையில் ஒரு கடிதம்


மதிப்பிற்குரிய மன்மோகன் ஐயா,

உங்கள் அமைச்சரவையில் உள்ள ப.சிதம்பரம் அவர்கள் தனது பழைய நிதி துறை போலவே உள் துறையையும் பார்க்கிறார்.சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்தால் ஒரு பிரஸ் மீட்
வைப்பார் பின்பு நிலைமை சரி ஆகிவிடும்.அது போல உள்துறையையும் கவனிக்கிறார்.எனக்கு ஒரு கதை ஞாபகம் வருது ,
ஒரு மாணவன் " எனது நண்பன்" என்ற தலைப்பில் கட்டுரை படிக்க பரிட்சையில் வந்ததோ "எனது தந்தை " உடனே அவன் தான் படித்த கட்டுரையில்
வரும் நண்பன் என்ற இடத்தில எல்லாம் தந்தை என்று எழுதி விட்டானாம்.
"எனக்கு பல அப்பாக்கள் இருக்கிறார்கள்.எனக்கு மிகவும் பிடித்த அப்பா பக்கத்துக்கு வீட்டுக்காரர் ......".அது போல ப.சிதம்பரம் தினம் தினம் மாறி மாறி நடந்து கொள்கிறார்.
பிரதமரே உங்களுக்காக ஒரு குறள்

நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்ப செயல்


நான் உங்களை வேண்டுவது தெலுங்கனா விசயத்தில் ஒரு இறுதியான உறுதியான முடிவை எடுங்கள்.இல்லாவிடில் சோனியாவிடம் கேட்டாவது எடுங்கள்.

இப்படிக்கு
1 .Osmania unviersity -இல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவன்.
2 .தெலுங்கனா பகுதியில் கடை வைத்துள்ள கடலோர ஆந்திரா பகுதி வியாபாரி.
3 .பொங்கல் விடுமுறைக்கு ஆந்திரா + தெலுங்கனா கடந்து செல்ல
வேண்டி உள்ள ஒரு ரயில் பயணி

Popular Posts