உள்ளது உள்ளபடி -3

(நன்றி:நண்பர் அண்டோ வாஸ் எழுதியது-santovaz@gmail.com)


12-May 2009
இடம் : ராமநாதபுரம்


மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரை பேருந்தில் நான் உறங்கி போனதால் அப்பிரயாணத்தில் பதிவு செய்ய வேண்டிய விஷயங்கள் ஒன்றும் இல்லை வீடு வந்து சேர்ந்ததும் அம்மாவின் கையால் சுடு சோறு தக்காளி ரசம் அப்பளம் என்று ஒரு பிடி பிடித்தேன்( எத்தனை உயர் வகை உணவகங்களில் உணவு அருந்தினாலும் வீட்டு உணவுக்கு நிகர் ஏதும் இல்லை ), பயண களைப்பில் ஒரு உறக்கம் போட்டு எழுந்தேன்,என்னுடைய சித்தி சூடாக கொண்டகடலை சுண்டல் செய்து கொண்டு வந்தார்கள்,ஆகா! என்ன ஒரு சுவை,
உடை மாற்றி கொண்டு நான் வளர்ந்த நகரத்தை ஒரு சுற்று காண வேண்டி வீட்டை விடு வெளியே வந்தேன் , பொதுவாக ராமநாதபுரத்தை நடையிலும் மிதிவண்டியிலும் சுற்றி பழக்க பட்டதால் நடராசா டிரான்ச்போர்டை தொடங்கினேன்.

நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பல பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாட அவைகளை சுகமாக அசை போட்டேன் எனது தந்தை என்னை அழைத்து செல்லும் கிருஷ்ண பவன் உணவகம்(opp to G.H) கண்ணில் பட்டது (தற்பொழுது அந்த உணவகத்தின் உரிமையாளர் மற்றும் பெயர் வேறு )
பதினைந்து வருடங்களுக்கு முன் ஒவ்வொரு சனி கிழமையும் மேட்டினி சோ கண்டு விட்டு தந்தை மற்றும் சகோதரியுடன் இவ்வுணவகத்தில் வெங்காய பஜ்ஜியும் தேங்கா சட்டினியும் அருந்தியது கண் முன் வந்தது.
பழைய நினைவுகளை மென்று கொண்டே அவ்விடத்தை கடந்தேன் வழியில் டீ விற்கும் சுப்புவை கண்டேன் (இவர் சைக்கிளில் டீ வியாபாரம் செய்பவர் )அதே காக்கி சட்டை , டிரவுசர் அதே சைக்கிள் ஒரே ஒரு மாற்றம் கண்ணாடி கிளாசிற்கு பதிலாக disposable கப் ; ஒரு டீயை வாங்கி கொண்டு அவரிடம் பேச்சு கொடுத்தேன்,அவருக்கு ஒரு 45 வயது இருக்கும் சுமார் 28 வருடங்களாக இத்தொழில் செய்கிறார்.

இன்னும் வறுமை கோட்டிலே தான் இருக்கிறார் இரண்டு குழந்தைகள் உள்ளன பள்ளி படிப்பை முடித்திருகிறார்கள் , வீட்டிலே கலர் டீவீயும் தொலை பேசியும் உள்ளது பெரிய சேமிப்பு ஒன்றும் இல்லை இவ்வளவுக்கும் அவர் நல்ல உழைப்பாளி சிக்கனமாக வாழ்பவர் பெரிய கெட்ட பழக்கங்கள் ஒன்றும் இல்லை ஆனால் சினிமாக்களில் மட்டும் ஒரே பாடலில் கோடீஸ்வரனாகும் விந்தையை எண்ணி வியந்தேன்.

இன்னும் சொல்லுவேன்

No comments:

Post a Comment

Popular Posts