உள்ளது உள்ளபடி - 4

(நன்றி:நண்பர் அண்டோ வாஸ் எழுதியது-santovaz@gmail.com)


ஒரு மாதத்திற்கு முன்பு எனது தாய் மற்றும் சித்தி இருவரையும் தமிழ்நாடு வரை அனுப்பி வைப்பதற்காக எர்னாகுளம் ரயில் நிலையம் சென்றிருந்தேன், இரவு பத்து மணிக்கு ரயில் வரும் என்று விசாரணை பெட்டியில் கூறினார்கள் . போக வேண்டிய நடை பாதை மேடைக்கு மெதுவாக ஊர்ந்து சென்றோம் (அம்மாவால் துரிதமாக நடக்க இயலாது ). இரண்டு மணி நேரம் முன்னதாக வந்து என் சாமர்த்தியத்தை மெச்சி கொண்டே அவர்கள் இருவரையும் ஒரு இடத்தில் அமர வைத்து விட்டு (platform no 4) சைட் அடிக்க கிளம்பினேன் , போகும் வழியில் பாப் கார்ன் வாங்கி கொண்டு நடந்தேன் (நான் ஒரு (பாப் கார்ன்) பைத்தியம் ) , என்ன தான் சொல்லுங்கள் இந்த கேரள பெண்களின் நடை உடை பாவனைகளின் தரம் ஒரு உயர் தரம் தான் ம்ம்.... என்ன செய்வது நான் கொடுத்து வைச்சது அவ்வளவு தான் ! , கையில் இருந்த பாப் கார்ன் மற்றும் அரை மணி நேரம் காலியாக , நடை பாதை மேடை 9 திற்கு திரும்பினேன்

வேறு ஒரு ரயில் அந்த நடை பாதையின் முன் வந்து நிற்க என் அம்மா , சித்தியின் முகங்கள் அஷ்ட கோணத்தில் மாறியது ,

இந்த இடத்தில் ஒரு விஷயம் கூற விரும்புகிறேன் அது ஏனோ தெரியவில்லை இந்த ரயில் நிலையங்களில் உண்டாகும் உணர்ச்சி பரிமாணங்கள் பேருந்து நிலையங்களில் உண்டாவதில்லை (உறவுகளை பிரியும் அந்த தருணங்கள் மனதை நெகிழ வைக்கும்) இல்லை என்று மறுக்கும் நண்பர்கள் உண்டு , என்னை பொறுத்த வரை மனது குழம்பிய நிலைகளில் எனக்கு ஆறுதல் அளிக்க வல்ல விஷயங்கள் இரண்டு 1. கடற்கரை 2. ரயில் நிலையம் ஆனால் இரவு நேரங்களில் கடற்கரை உலாத்தல் சாத்தியம் இல்லை எனெவே நான் எப்பொழுதும் ரயில் நிலையங்களை நாடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளேன் .

back to ernakulam Railway station

வந்து நின்ற ரயிலில் இருந்து இறங்கும் ஒவ்வொரு மனிதர்களின் முக பாவங்களை ரசித்து கொண்டிருந்தேன் ஒரு பிரயாணி உறங்கி கொண்டிருந்த சக பிரயாணியை எழுப்பினார் எழுந்த பிரயாணிக்கு ஒரு நாற்பது வயது இருக்கும் அவருக்கு உறக்கம் களைந்து இருக்கும் நிலை உணர சில கணங்கள் ஆயின உடனே அவர் எதையோ தேடினார் , விநாடிகள் கழிய கழிய அவருடைய தேடுதலின் தீவிரம் கூடியது , இருக்கையின் அடியில் , கழிப்பறையின் உள்ளே என்று தேட எனக்கு ஒன்றும் பிடி பட வில்லை . திடீரென்று ரயிலில் இருந்து இறங்கி தலை மேல கை வைத்து ஐயோ அலற தொடங்கினார் நெஞ்சிலும் தலையிலும் அடித்து கொண்டு அவர் அழ ,சுற்றி இருந்த யாருக்கும் ஒன்றும் புரிய வில்லை என்னவென்று சிலர் விசாரிக்க அவர் கூட பிரயாணம் செய்த ஒன்பது வயது மகனை காண வில்லை என்பது தெரிய வந்தது , பதட்டத்தில் அவருக்கு தலை சுற்ற நிலை தடுமாறி தரையில் அமர்ந்தார் , அவருக்கு உதவி செய்யும் எண்ணத்தில் அவருடைய பொருட்களை ரயிலில் இருந்து இறக்கி வைத்து விட்டு அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தேன் அவர் வாய் உளறி கொண்டே இருக்க ( என் மனைவிக்கு என்ன பதில் சொல்வேன், ஒரே மகன் எங்கு போய் தேடுவேன் ) அவருக்கு உதவ யாரவது வருவார்களா என்று பார்த்தேன் பெண்கள் உச்சு கொட்டி கொண்டு இருக்க ஆண்கள் முனவிகொண்டிருக்க நேரம் கழிந்தது , மெதுவாக எனக்கு தெரிந்த மலையாளத்தில் அவரிடம் மொபைல் உண்டா என்று விசாரித்தேன் உடனே அவர் சட்டை பையில் இருந்த மொபைலை என் கையில் கொடுக்க அதை சுவிட்ச் ஆன் செய்தேன் , பின்னர் அவருடைய மொபைல் நம்பர் அவருடைய மகனுக்கு தெரியுமா இன்று வினவினேன் , தெரியும் என்று அவர் கூற அவரை அழைத்து கொண்டு ரயில்வே காவல் நிலையதிருக்கு கிளம்பினேன் ( எனக்கு எதற்கு இந்த தேவை இல்லாத வேலை என்ற முக பாவனை என் அம்மா முகத்தில் இருந்தது )

போகும் வழி எல்லாம் மகனை பற்றிய பிதற்றலுடன் அவர் வர அவருக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்று யோசித்த படி நான் நடந்தேன் காவல் நிலையத்தில் நடந்ததை கூற , அவர்கள் உடனே (!) குறிப்பெடுக்க தொடங்கினார்கள் , எந்த ரயில் நிலையம் வரை ஷ்யாம் (மகனுடைய பெயர் ) அவருடன் இருந்தான், எப்பொழுது அவர் கண் அயர்ந்தார் , அதன் பின் உள்ள ரயில் நிலையங்கள் எத்தனை , அவைகளின் தொலைபேசி எண்கள் என்று அவர்கள் செயல் பட்ட விதம் மிக துரிதம் , துல்லியம்.
5 நிமிடங்கள் கடந்திருக்கும் ஒரு அதிகாரி நல்ல செய்தி கொண்டு வந்தார் 60 km தொலைவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் ஒரு சிறுவன் இருப்பதாக கூற அதே சமயத்தில் மகனை தொலைத்தவருடைய மொபைல் அடித்தது , அழைத்து அவருடைய மகன் , ரயில் அதிகாரியின் போனில் இருந்து அவன் அழைக்க இவர் நெகிழ்ந்து உரையாடிய விதம் வார்த்தைகளால் விவரிக்கக் இயலாது அப்பாட என்று நான் மூச்சு விட ஒரு காவல் துறை அதிகாரி வந்து நடந்த விசயங்களை ஒரு காகிதத்தில் எழுதி தரும் படி கூறினார் , கூடவே வந்த என் பெயர் மற்றும் விலாசம் கொடுக்கும் படி அவர் கூறினார், போச்சுடா என்ற படி எழுதி கொடுத்தேன் பின் அந்த நபரை அழைத்து அவருடைய பொருட்கள் எல்லாம் என் அன்னையின் வசம் உள்ளதையும் அவர்க்கு இன்னும் 10 நிமிடங்களில் ரயில் வரும் என்பதையும் உணர்த்தினேன்.


மகனை இருக்கும் ரயில் நிலையத்திலே இருக்கும் படி கூறி விட்டு அவர் வந்து தன் பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு டாக்ஸி பிடிக்க ஓடினார் நானும் என் அம்மா மற்றும் சித்தியை அவர்கள் ஏற வேண்டிய ரயிலில் ஏற்றி விட்டு வீடு வந்து சேர்ந்தேன் நடு நிசி 2 மணிக்கு எனக்கு ஒரு போன் வர இந்நேரத்தில் யாரடா தூக்கத்தை தொந்தரவு செய்வது என்று சபித்து கொண்டே போனை எடுத்தேன் மறு முனையில் ஷியாமின் தகப்பனார் தன்னுடைய மகனை கண்டு விட்டதாகவும் தக்க தருணத்தில் உதவிய எனக்கு நன்றி கூறுவதற்காக அழைத்ததாக அவர் கூறினார் எனது தொலைபேசி என்னை அந்த காவல் துறை அதிகாரி கொடுத்ததாகவும் கூறினார்.


இன்னும் சொல்லுவேன்

2 comments:

  1. நாலு பேருக்கு நல்லது நடகனுனா எதுவுமே தப்பில்லை (டன் ட டன் ட டன் ட)
    அண்ணா நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா

    ReplyDelete
  2. தேவன் கிருஷ்ணமுர்த்திAugust 12, 2010 at 6:41 AM

    உன்னை மாதிரி நாலு பேர் இருக்கறதுனால தான் TASMAC ல இன்னும் BEER கிடைக்குது. வாழ்க உன் துண்டு (எப்பவும் செய்தால் தான் தொண்டு, எப்போவாவது செய்தால் அது துண்டு தான் தம்பி)!!

    ReplyDelete

Popular Posts