சத்தம் போட்டு சொல்லாதே - 1


தமிழகத்தில் இந்த டிசம்பர் மாதத்தில் இன்னும் ஒரு திருவிழா.இடை தேர்தல் திருவிழா..
இதுவரை நடந்த இடை தேர்தல்களில் ஆளும் கட்சி தான் அதிகமாக வெற்றி பெற்று உள்ளது என்பது புள்ளியல் தரும் செய்தி. தேர்தல் என்றால் பல கூத்துகள் நடக்கும். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசம் மட்டும் அல்ல, சுவராசியமும் கூட.

திருச்செந்தூர் திமுக வேட்பாளர் அனிதா ராதாக்ருஷ்ணன் எப்படியும் தன் ப(X )த்தாலும் கட்சி
ப(X )த்தாலும் வென்று விடுவார் என்றாலும் சுவராசியமும் என்னவென்றால் அனிதா ராதாக்ருஷ்ணன் அதிமுக-வில் இருந்து விலகி MLA பதவியை ராஜினமா செய்ததால் இந்த இடை தேர்தல் நடக்கிறது. MLA வாக இருந்த ஒருவரே மீண்டும் அதே தொகுதியில் MLA வாக இந்த தேர்தல் நடக்கிறது அதுவும் நம் வரி பணத்தில்.

என்ன கொடுமை சார் என்கிறிர்களா ?

அட அரசியல இதலாம் சகஜம் அப்பா! இல்ல இல்ல சாதாரணமப்பா!!

------------------------
பின் குறிப்பு : (X) என்ற இடத்தில வரும் எழுத்து options are below
(a) ல (b) ண (c) ன

1 comment:

  1. இதை சத்தம் போட்டு சொன்னாலும்

    நம்ம ஊர் அரசியல் தொண்டர்கள் காதுகளுக்கு செல்லாது

    ReplyDelete

Popular Posts