கற்பக விநாயகர் Vs Other Vinyagar 's

வணக்கம்.
எல்லாரும் இன்று எல்லாரும் வெறும் வாயை மெல்லாமல் கொழுக்கட்டை வைத்து மென்று கொண்டு இருப்பீர்கள்.இன்னும் கொஞ்சம் கொறிக்க..

பிள்ளையார் பட்டியில் உள்ள கற்பக விநாயகர் மற்ற எல்லா விநாயகரை விட கொஞ்சம் வேறு வேறுபட்டவர்.
அது என்னவென்றால்
1 . இந்த விநாயகருக்கு இரு கைகள் மட்டும் தான் இருக்கும்.மற்ற விநாயகர் போல எந்த ஒரு ஆயுதத்தையோ அல்லது கொழுக்கட்டையோ வைத்து இருக்க மாட்டார்.இந்த விநாயகர் தியான கோலத்தில் இருப்பதாய் நம்ப படுகிறது.(Refer the Images)
2.இந்த விநாயகர் இரு கால்களை மடக்கி சம்மணம் போட்டு அமர்ந்து இருப்பார் .மற்ற விநாயகர் எல்லாம் இவ்வாறு இருக்காது(Refer the Images)
3.இந்த விநாயகரின் தந்தம் இடது பக்கம் உடைந்து இருக்கும்.மற்ற விநாயகருக்கு வலது பக்கம் உடைந்து இருக்கும்.(Refer the Images)
4 இந்த விநாயகரின் துதிக்கை சில விநாயகரை போல் வலப்பக்கம் (வலம்புரி) இருந்தாலும், துதிக்கை நேராக வந்து வளைவது இந்த விநாயகருக்கு மட்டும் தான். (Refer the Images)

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

No comments:

Post a Comment

Popular Posts