குஜராத் 4 நாட் அவுட் - 2

குஜராத் 4 நாட் அவுட்-இல் முதலில் யாரை பற்றி,எதை பற்றி எழுதலாம் என்று எண்ணி கொண்டிருந்த பொழுது எனக்கு சட் என்று ஞாபகம் வந்தது இவர்கள் தான்.இந்த பதிவு ஒரு நன்றி உணர்வுடன் பதிய படுவது என்பதால் கொஞ்சம் போர் அடித்தால் பொறுத்து அருள்க

ஒருவர் நான் முன்பு வேலை இருந்த Goraj-il என் வீட்டில் வேலை செய்த வேலைக்கார அம்மா பார்வதிபென் மோஷி(மோஷி அப்படினா ஹிந்தியில் வயதான அம்மாவை குறிப்பது).அவர் எங்கள் வீட்டில் சர்வ வேலைகளையும் செய்வார்.நாங்கள் இரவு (கவனிக்க) தான் செல்வோம்.சமைப்போம்.சாப்ட்டு படுத்ருவோம்.காலை கிளம்பி வேலைக்கு சென்று விடுவோம்.அவ்வளவு தான் .நாங்க சமையல் செய்த அறையை பார்த்தா எங்களுக்கே கொஞ்சம் பயமாத்தான் இருக்கும்.ஆனால் மீண்டும் இரவு வந்தால் வீட்டில் எல்லாம் சுத்தமா இருக்கும்.அது மட்டும் இல்லை.எங்கள் எல்லார் மீதும் அவர் வச்சு இருந்த பாசம் பற்றி வார்த்தையால சொல்ல இயலாது.எங்களுக்கு முன்பு இருந்த எங்கள் சீனியர் ஒருவர் கூட தான் ராஜினாமா செய்து போகும் போது இந்த மோஷியை தன் குடும்பத்தோடு வந்துவிடுமாறு கேட்டு உள்ளார்.மோஷி தான் மகனை விட்டு வர முடியாது என்று மறுத்து விட்டாராம்.ஒரு முறை எங்கள் நிர்வாகம் அவரை வேறு ஒரு Quarters-க்கு மாற்றி விட்டனர்.பின்பு நாங்கள் அனைவரும் அவரே மீண்டும் எங்களுக்கு வேண்டும் என்று கேட்டு போராடி (ஒரு கீழ் சாதி காரர் ஒருவருகாக நீங்கள் ஏன் பரிந்து வர்றீங்க என்று கேட்ட நிர்வாகத்தை மீறி) திரும்ப பெற்றோம்.ஒரு முறை என் நண்பனின் அம்மா வந்திருந்தார்கள்.அவர்கள் இருந்தது ஒரு மாதம் தான் என்றாலும் திரும்பி போன போது மோஷி அழுதுவிட்டார்.அதனால் நாங்கள் அங்கிருந்து ராஜினாமா செய்தவதை கடைசில் தான் அவருக்கு சொல்வது என்று இருந்தோம்.ஆனால் அவர் அதை முன்பே கண்டு பிடித்து அழ தொடங்கி வீட்டார் . இறுதியாய் என் நண்பன் அவரை பற்றி சொன்ன இரு வாசகம் இதோ,எனது ஜீன்ஸ் இப்ப தான் நான் வாங்கும் போது இருந்த கலர்ல இருக்கு எங்க அம்மா கூட கை வலிக்குதுன்னு கொஞ்சம் நல்லா துவைக்க மடாங்கனு.அவன் சொன்ன மற்றொன்று,ஒரு முறை யாரோ உனக்கு எப்படி மனைவி வேண்டும் என்று கேட்டதுக்கு இந்த மோஷி மாதிரி மனசும்,வேலையும் செய்ற பொண்ணா வேணும் என்றான்.அந்த மோஷியை சமிபத்தில் பார்த்தேன் .

அவர் கண்கள் கொஞ்சம் ஒளி இழந்து இருக்கிறது.நிறைய உழைத்து உழைத்து கலைத்தது உடம்பில் தெரிந்தது.இருந்தாலும் இன்னும் உழைத்து கொன்ன்டிருகிறார்.(நம்ப முதல்வர் மாதிரி குடும்பதுக்க்காக)


அதே போலவே நான் ராஜ்கோட் சென்ற போது என் நண்பன் கோதண்டராமன் வீட்டு வேலை கார அம்மா(பெயர் தெரியாது)என் நண்பனிடம் சொன்னார் நீங்கள் துவைக்க போடும் துணி மிக குறைவாக உள்ளது.அதனால் நீங்கள் குடுப்பதில் இருந்து மாதம் 50 ரூபாயை குறைத்து கொள்ளுங்கள் என்றார்.நான் பார்த்து சம்பளம் குறைக்க சொல்லி கேட்ட முதல் வேலையாள் இவராய் தான் இருப்பார்.

அது போலவே இப்போ எங்கள் மருத்துவமனையில் உள்ள ஹேமலதாபெண் என்ற பணி பெண் எங்கள் தேவையை அறிந்து தேநீர் குவளைகளை தந்து கொண்டே இருக்கிறார்.

இந்த குஜராத் மாநிலம் தேச பிதாவுக்கு பெயர் பெற்றது என்றாலும் நிறைய கஸ்தூரி பாய் போன்ற தேச மாதா-களாலும் நிறைந்து உள்ளது.(எவரையும் வாஞ்சையோடு கவனித்து கொள்ளும் எவரும் மாதா தானே).

நம்பை சுற்றி சில மாதாக்கள் எப்பவும் இருக்க கூடும்.நான் இப்பொது எல்லாம் அவர்களை கவனித்து அவருக்கு குறைந்த பட்சம் அவவ்போது ஒரு நன்றியை மட்டுமாவது சொல்லி வருகிறேன்.

No comments:

Post a Comment

Popular Posts