Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

காசு யாத்திரை


காசி யாத்திரை சென்றால் இழக்கணும்
பிடித்த உணவை..
காசு யாத்திரை சென்றால் இழக்கணும்
பிடித்த உறவை - எங்களை போல்..

காதல் கணக்கு - 2

எல்லா பக்கத்திலும்
ஒரே மாதிரி அழகாய்
இருக்கும் சம பக்க அழகி நீ

காதல் கணக்கு - 1

 
திசை அற்ற ஸ்கேலாரை  இருந்த நான்
உன் திசை நோக்கும் வெக்டராய் 
மாறிவிட்டேன்...

இயல்பு

பலமுறை 100 மார்க் போட்ட
கணக்கு வாத்தியாரை விட
ஒரு முறை கூட 100 போடாத
தமிழ் அய்யாவை பிடித்து
விடுவது இயல்பு.



இறுக்க உடை அணிந்த பெண்ணை
குறைந்தது இன்னும் ஒரு
முறையேனும் பார்த்து விடுவது
ஆணின் இயல்பு.


சம்பளம் எவ்வளவு என கேட்கையில்
கேட்வபரை பொறுத்து கொஞ்சம்
கூட்டியோ குறைத்தோ
சொல்வது இயல்பு.



அங்கு செல்வதற்கு அரை மணி
நேரம் ஆகும் என அறிந்தும்
தொலைபேசியில் பத்து நிமிஷத்தில்
அங்கு இருப்பேன் என சொல்லவது இயல்பு

முரண் - 2



படிக்க போறேன் என்று சொல்லி தான்
வந்தேன் மொட்டை மாடிக்கு
அடித்த காற்றும் அருகே இருந்த ஆறும்
இதமாய் இருந்தது மனசுக்கு

ஓடும் ஆறை விட ஆற்றுபடுகை அதிகம்
மாலை நேரம் ஆகிவிட்டதால்
ஆங்காங்கே ஆற்றுபடுகை
ஆற்று படுக்கையாக மாறுவதை கண்டேன்.

ஒரு இளைஞன் தனது கையில் எதையோ
வைத்து தேய்த்து கொண்டிருந்தான்.
விளையட வந்த இரு சிறுவர்கள் பெய்த சிறுநீரால்
ஓடும் ஒரு நதி ஆனது திரிவேணி சங்கமமாய்!

சில லாரிகள் மணல் திருட்டு பாவத்தை
சுமக்க முடியாமல் சுமந்து வெளியேறின

படிக்காமல் என்னடா பராக்கு பார்க்கிற என்று
படி படி (பட பட )என பொடனியில் அடித்து
சொன்னது காய போட்டு இருந்த
அப்பாவின் முழு கை சட்டை.

உரக்க படிக்க ஆரமித்தேன்
"ஆற்றங்கரையில் நாகரிகங்கள் தோன்றின..
ஆற்றங்கரையில் நாகரிகங்கள் தோன்றின..
ஆற்றங்கரையில் நாகரிகங்கள் தோன்றின..

சின்ன சின்ன வருத்தங்கள் - 2


அதிகாலையில் அவசர அவசரமாய் அனைப்பதால்
ஆசைபட்டு வைத்த அலாரம் பாடலை
கேட்க முடியாததை நினைக்கும் பொழுது

புதிய காலணிகளை(shoes) அணிந்து
நடக்கையில் வரும் அடை மழை...

நான் செல்லும் பேருந்தை முந்தி
செல்லும் அதே வழி தடத்து பேருந்து...



அழகான இளம் பெண் நம் கோச்சில்
இல்லாத நெடுந்தூர ரயில் பயணம்...

இப்படிக்கு Camellia assamica

என்னை பார்த்த பின்பு தான் எழுந்திருக்கிறாய்
நான் என்ன உன் செல்ல மகளா ?

எனக்காக தினமும் பல முறை காத்து கிடக்கிறாய்
நான் என்ன உன் ஆசை காதலியா ?

தினமும் உன் இதழ்களை என்
மீது பதித்து விடுகிறாய் மறவாமல்
நானும் உனக்கு ஒரு உற்சாகத்தை
தந்து விடுகிறேன் தவறாமல்
நான் சூடாய் இருக்கையில் நீ உன்
இதழ்களை என் மீது பதிக்க முயல்கையில்
நான் சுட்டு விடுவதும்
நீ எனை உமிழ்ந்து விடுவதும்
என ஊடல் கொள்கிறோம்
ஊடல் கொண்ட அடுத்த ஐந்து நிமிடத்திற்குள்
நாம் இருவரும் கூடல் கொண்டு விடுகிறோம்.
என்னை உன்னுள் கலந்து விடுகிறாய்..
நான் என்ன உன் அன்பு மனைவியா ?

பொழுது போகாமல் போரடிக்கையில்
அலுவலக மீட்டிங் நடக்கையில்
வேலை பளு மண்டையை பிளக்கையில்
நண்பர்களுடன் வெட்டி அரட்டை அடிக்கையில்
இப்படி எல்லா நிகழ்விலும் உன்னுடன் நான்
உன் பர்சில் உள்ள உன் தாயின் புகை படத்தை போல ...



இப்படிக்கு,
தேநீர்(தேன்+நீர்)/(Camellia assamica)
(Camellia assamica is the Botanical name of Indian Tea)

20-20


20-20 போட்டியில் பவுன்டரிகள் தேவை

அணியின் ஓட்டத்திற்காக அல்ல

Cheer (Leaders) girls-in ஆட்டத்திற்காக....

எப்புடி...

சின்ன சின்ன வருத்தங்கள்


கடிகாரத்திலோ கைபேசியிலோ
படும் முதல் கீறல்...

புதிய சட்டையின் காலர் விறைப்பு தன்மை
குறைந்ததை உணரும் நேரம்..

நண்பர் கணினியில் Enter பட்டனை
வேகமாக அழுத்தி தட்டும் நேரம்...

முன்று வினாடி அதிகம் பேசியதருக்கு
ஒரு நிமிட கணக்கில் கட் ஆகும் கைபேசி காசு ...

தேவதை


நாய்கள் ஜாக்கிரதை என்று போர்டு
எழுத அவள் வீடு வந்தவன்
அவளை பார்த்து அழகு ஜாக்கிரதை
என போர்டு எழுதி சென்று விட்டானாம் ..



Holi தினத்தில் வண்ணம் தீர்ந்ததால்
எவனோ ஒருவன் அவள் கன்னம் தொட்டே
கலர் எடுத்து சென்று விட்டானாம்...

நிறவெறி-RACISM



நிறவெறியையை எதிர்த்து தலைவர்
பறக்க விட்டார் சமாதான புறாவை..
வெள்ளை நிற புறாவை மட்டும்
கருப்பு நிற புறாவை ஒதுக்கி விட்டு...




கேரம் விளையாட்டில்
வெள்ளைக்கு இரண்டு மதிப்பு..
செஸ் விளையாட்டில்
வெள்ளைக்கு முதல் வாய்ப்பு..
சமாதான புறா கூட வெள்ளை தான்.
ஆனால் வெள்ளை புடவை அணிந்த
விதவை மட்டும் மதிப்பு அற்று...




பிளாஸ்டிக்கை திட்டாதீர்கள்..
எங்கள் ஊரில் தலைமுறை தலைமுறையாய்
ஒழிக்க முடியாத இரட்டை குவளை முறையை
தனி ஆளாய் ஒழித்தது இந்த பிளாஸ்டிக் டீ கப்பு தான்




எல்லார் காதலியும் rasicsa வாதி தான்
தீண்டாமை கடை பிடிக்க சொல்லுவதால்..

காதல் கேட்டேன்


ராத்திரி 12 மணிக்கு போன் பண்ணி தூக்கத்தில்
எழுப்பி தூங்கீடீயானு கேட்க மாட்டேன்
அதிகாலை எழுந்து குட் மார்னிங்
SMS அனுப்ப மாட்டேன்
அடுத்த நிமிடம் போன் செய்து SMS
வந்துதாணு பேச மாட்டேன்
அர்த்தமே இல்லமா அடுத்த வார்த்தை
சாப்பிட்டாயானு கேட்க மாட்டேன்
ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை போனை
பண்ணி "நல்லா இருக்கியானு" விசாரிக்க மாட்டேன்
ஒரே கலர் டிரஸ் போட்டிருக்கோம்
என்று சந்தோஷ பட மாட்டேன்
அவதியும் அவசரமாய் கிளம்பி உன்னை
பஸ் ஸ்டாண்டில் டிராப் பண்ண வர மாட்டேன்


உன் பிறந்த நாள் பரிசு வித்தியாசமாய்
வாங்க கடை தேடி அலைய மாட்டேன்
சின்ன சின்ன தப்பு செய்ய பொய்யாய்
உன்னிடம் பெர்மிசன் கேட்க மாட்டேன்
செல்லமான பெயர் வைக்க இரவெல்லாம்
ரொம்ப நான் யோசிக்க மாட்டேன்
தலை சீவாமா நீ வந்தா கேசுவல கூட
நீ அழகா இருக்கணு பொய் சொல்ல மாட்டேன்


சும்மா சும்மா நீ கொடுக்கும்
சாக்லேட்டை திங்க மாட்டேன்
நீ தின்ன சாக்லேட் காகிதம்
எல்லாம் எடுத்து சேர்க்க மாட்டேன்
உன் ஊரு பஸ்சை கூட
பாசத்தோட பார்க்க மாட்டேன்
உனக்காக லைப்ரரி போய்
நோட்ஸ் எல்லாம் எடுக்க மாட்டேன்
யார் யாரை வழி அனுப்புவதுன்னு நாலு
மணி நேரம் பஸ் ஸ்டாப்பில் நிற்க மாட்டேன்


கவிதை எழுதி வைரமுத்து ,வாலியை
ஓவர் டேக் செய்ய முயற்சிக்க மாட்டேன்

குட் நைட் SMS -க்கு பதில் குட் நைட் சொல்ல
Hero Honda பைக் எடுத்து உன் வீடு வரை வர மாட்டேன்

மாட்டேன் மாட்டேன் இதுல எதுவும் செய்ய மாட்டேன்
ஆனால் ஒரு காதல் காதல் காதல் கேட்டேன்

பாச மலர்


(முன் குறிப்பு:தங்கை திருமணம் முடிந்து 40 நாட்கள் கழித்து
அண்ணன் & தங்கையின் டைரியின் வரிகள்)

தங்கை டைரி:
--------------
என் கல்யாணம் சொர்க்கத்தில் தான் நிச்சயக்க பட்டது..
ஆம் அண்ணா நம் வீட்டில் தானே நடந்தது..

காபி குடித்து எழுந்து பழகியவள்
காபி குடுக்க எழுந்திருத்து பழகுகிறேன்..

எல்லாருக்கும் பின்னால் எழுந்து
எல்லாருக்கும் முன்னால் சாப்பிடவ
எல்லாருக்கும் முன்னால் எழுந்து
எல்லாருக்கும் பின்னால் சாப்பிடறேன்..

அவர்கள் யாரும் என்னை முன்னால்
சாப்பிட கூடாதென்று சொல்ல வில்லை..
அவர்கள் யாரும் எனக்கு பின்னால்
சொல்ல கூடாதென்று தான்...

அவர் சட்டை அயன் செய்கையில்
உன் முகம் தோன்றி மறையுது தானாய்...
எதோ இருக்கிறேன் நானாய்...

அம்மாவிடம் சண்டை போட்டு மாற்றும் சீரியலை
எல்லாம் மாமியாருடன் சிரித்த படியே பார்க்கிறேன்...

பள்ளி கூட குழந்தை போல தீபாவளி,பொங்கல்
விடுமுறையை எதிர் பார்த்து இருக்கிறேன் நம் வீடு வர..

அண்ணன் டைரி :
-----------------
உன் திருமணம் நடந்து
40 நாட்கள் தான் நகர்ந்துள்ளன.
நான்கு யுகம் போல் தோணுது எனக்கு.

பிறப்பில் நான் முதல் வர விட்டு கொடுத்த உனக்கு
திருமணத்தில் நீ முதல் வர நான் விட்டு கொடுத்த நாள்..

அதிகாரத்தோடே பார்த்த அப்பாவும் நம் வீட்டு
அதிர்ஷ்ட தேவதை நீயும் அழுத முதல் நாள் ...

நாம் சண்டை போட்டு சாப்பிட துடிக்கும் மாம்பழ
டிசைன் தட்டும் டிவியை நோக்கிய டைன்னிங்
டேபிள் இருக்கையும் காலியாகவே உள்ளன.

அடித்து கொண்டு படுக்கும் கட்டில் மெத்தையும்
ஆளில்லாமல் தனியாகவே உறங்குகிறது..

மாற்றாத தேதி காலேண்டர்..
தண்ணீர் ஊற்றாத டேபிள் ரோஸ்..
துடைக்காத அப்பா பைக்கோடு
அவசரத்தில் அணியும் அயன் செய்யாத
சட்டையும் பாலிஷ் போடாத ஷுவும்
நீ இல்லாததை உரத்து உரைக்கின்றன..

இரும்பு மனிதர் என்று இறுமாப்போடு இருந்த
அப்பா துரும்பாக இளைத்து விட்டார் ..
உன்னை அதட்டி கொண்டே இருந்த அம்மாவும்
அடுப்படியிலேயே அடங்கிவிட்டார்..

ரிமோட் சண்டை போட்டு மாற்றாத டிவி அம்மா
வைத்த சீரியலோடு ஓடி கொண்டிருக்கிறது..
நம் வீட்டில் நீ இல்லாததால் டிவி சீரியல்
கதா பாத்திரங்கள் கூட அழுகின்றன...

இஷ்டப்பட்டு தான் கட்டி கொடுத்தோம் உன்னை ஆனால்
கொஞ்சம் கஷ்டத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

நீ வரும் நாட்களே தீபாவளி,பொங்கல் ஆனது எங்களுக்கு....

மருதாணி



டேய் கண்ணா..
நீ மருதாணியாய் இருந்திருக்கலாம்
சில காலமாவது என் கையோடும்
சேர்ந்திருக்கலாம் நானும் உன்னை
கையில் வைத்து தாங்கி இருப்பேன்

நினைவு நாள் அஞ்சலி

(முன் குறிப்பு :என் ஆயாவின் நினைவு நாள் 14.01.2006.அதன் நினைவாய் ஒரு நினைவு அஞ்சலி )

அறிமுகம்

என் ஆயா பெயர் சின்ன குட்டி
நான் தான் அவளின் செல்ல குட்டி

பல கார்டு என் பர்சில் இருந்தாலும் அவள்
பெயர் தான் விஸ்டிங் கார்டு - சின்ன குட்டி
பேரன் கிருஷ்ணப்பன் (செந்தில்)
என்ற அடை மொழியோடு தான்
என் வாய்மொழி தொடங்கும் எங்கள் ஊரில்

எப்பவோ விசேஷத்தில் கொடுத்த மலேசிய பிஸ்கட்டும்
என் வரவுக்காக காத்து கிடக்கும் என் ஆயாவோடு
பார்த்து பார்த்து பிஸ்கட் பதத்து போகும்
ஆனால் அவள் பாசம் மட்டும் ??

என்னை திட்டுவதாய் நினைத்து கொண்டு
"இப்படியா பண்ணுவ..நல்லா இருப்ப!அரசாள்வ! "
என்று வாய்க்கு வந்தபடி வாழ்த்துவாள்.

நடுவே சின்ன வட்ட படிகம் அதனுள்
நந்தி,சிவன் காட்சி என்ற அவள்
மோதிரத்தின் சிறப்பு என்னை ஆக்கி
இருக்கிறது பல முறை வியப்பு .



இறுதி நாட்கள்

யார் யார்க்கெல்லாம் அவள் பிறப்பிற்கான
தேதியை எண்ணி கொண்டிருந்தாளோ
அவர்களெல்லாம் இவளின் இறப்புக்கான
தேதிகளை யூகித்து கொண்டு இருந்தனர்.

தன் மார்பில் வாய் வைத்து பால் குடித்த
பிள்ளைகள் எல்லாம் தன் வாயில் பால்
ஊற்றிய போதே அவள் பாதி இறந்திருப்பாள்.

நாங்கள் எல்லாரும் நல்லா
இருக்க வேண்டி கொண்டவள்
நல்லா இறக்க நாங்கள்
எல்லாரும் வேண்டி கொண்டோம்

இரங்கற்பா

நான் உன் கடைசி காலத்துல காசி கூட்டி
போயி காட்டனுமுனு காசெல்லாம் சேத்து வெச்சேனே.
ரயில் இல்லாட்டி பீலைட்டுல போலாம்னு கனவெல்லாம்
கண்டேன - அந்த கனவெல்லாம் நிழலாக்கி நீ
இல்லைங்கிறத நிஜமாக்கி போனாயே !!

பொங்கலுக்கு முன்னால போயிட்டா
பொங்கல் கெடயாதுன்னு புள்ளைங்க போலம்புனத
பொய்யாக்க பொறுத்திருந்து பொங்கலன்று
சாயங்காலம் பொசுக்குனு போயிட்டியா ??-இல்ல

மாட்டு பொங்கல் தாண்டி மண்டைய போட்டா
மகனோட பழனி மலை பயணம் முடியாதோனு
ஒரு நாள் முன்னால உன் மூச்ச முடித்தாயா??

உன் வாயில் ஊற்றிய பாலின் மிச்சத்தை தான்
நாங்க வச்ச பொங்கல் பானையில ஊற்றினோம்.
பொங்கல் வச்ச காப்பரசி மிச்சம் தான் நாங்க
உனக்கு போட்ட வாய்க்கரசினு தெரியுமா??

தான் நெய் போட்டு கொடுத்த சத்து மாவை
திண்ற பேரன் தனக்கு நெய் பந்தம் பிடிக்கணும்னு
அவளுக்கு ஆசை - விடுப்பு முடிந்து கிளம்பும்
போது தவறாமல் கேட்பாள் "எனக்கு
எதாவதுனா வர மாட்ட இல்ல" என்று.

நான் பதில் பேசாமல் வந்ததால் வந்த சந்தேகமோ
என்னவோ பொங்கல் பார்க்க தமிழகம் வந்த என்னை
அவளை பொனமாய் பார்க்க செய்து விட்டாள்.. பாவி
அவளை பொனமாய் பார்க்க செய்து விட்டாள்..

மார்கழி மாதம் அதிகாலை நேரம்

நான் பார்க்க வந்தது
உன் வாசல் கோலத்தை அல்ல -
உன் கோலத்தை தான்!!



நீ பிடித்து வைப்பதால் சாணம் கூட
சாமி ஆகிவிடுகிறது - ஏனோ என்னை
மட்டும் பிடிக்காமலேயே வைத்திருக்கிறாய்??

தினமும் நான் கோவில் செல்வது
சுண்டலுக்காக என்று ஊரே சொல்லுது
எனக்கு மட்டும் தான் தெரியும்
தென்றல் உனக்காக தான் என்று...

கோயில் வாசலில் ஒற்றை காலில் தவம்
இருக்கிறார்கள் வரம் வேண்டி - நானும்
நிற்கிறேன் உன் வரவை வேண்டி...

வாடை காற்றில் என்னை வாடா விடாமல்
உன் அக்னி பார்வையை கொஞ்சம் வீசிப்போ
நான் குளிர் காய்ந்து கொள்ள...

மீரஜ் & Me




மீரஜ் மகாராஷ்டிரா & கர்நாடகாவின் எல்லை கோடு.
எனது professinoal வாழ்கை-இன் ஆரம்ப கோடு
எனது முதல் வெளி நாட்டு பயணம்
இல்லை இல்லை வெளி ஸ்டேட்டு பயணம்..

மலையும் மலை சார்ந்த குறிஞ்சியும்
நிலமும் நிலம் சார்ந்த மருதமும் கலந்த கலவை.
மீரஜ் மூன்று D' க்களுக்கு பிரபலம்
கழுதை எனும் Donkey
தூசு எனும் Dust
மருத்துவர் எனும் Doctor
மூன்றிலும் 33 சதவீதமாய் நான்.

விநாயகரிடம் கொண்ட பக்திக்கு முக்தியாக கிடைத்தது
வேலை சித்தி விநாயக் கணபதி மருத்தவமனையில்
வேலை கிடைக்க எந்த சாமி காரணம் என்றால் சட் என்று
சொல்வேன் குப்புசாமி , சீனிசாமி என்ற இரு ஆசாமிகளை .

விழுங்க முடியாத உணவு, விளங்க முடியாத மொழி
ஆட்டோ காரனிடம் argue செய்ய இயலவில்லை
அழகான பெண்ணிடம் டைம் கேட்க முடியவில்லை
இந்தி எதிர்த்த தலைவர்கள் எல்லாம்
என் நெஞ்சில் எதிரிகளாய் தெரிந்தனர்.

விழுங்க முடியாத உனவின் விளைவு
வித விதமாய் விலை உயர்ந்த உணவு
தேடல் ஆரம்பித்ததும் இங்கே தான்.
சைவத்திற்க்கு அன்னபூர்ணா
அசைவத்திற்க்கு ரஹமதுல்லா

சில வேலை முன்பே செய்திருந்தாலும்
படித்ததற்காக கிடைத்த முதல் வேலை இங்கே தான்
ஆங்கில படமும் ஹிந்தி படமும்
பார்க்க தொடங்கியதும் இங்கே தான்.

மருத்துவ கல்லூரியும் லட்சுமி மார்கெட்டும் ஊருக்கு அழகு
அங்கே இருந்தால் நம் மனதிற்கே அழகு - எல்லா
ஊரிலும் அழகான பெண்களெல்லாம் இருப்பார்கள் ஆனால்
இந்த ஊரில் தான் எல்லா பெண்களும் அழகாக இருப்பார்கள்.
மிரஜ் பெண்கள் அழகு சிலைகள் அவர்கள்
உடைகள் எல்லாம் கண்ணாடி இழைகள் அதை
காண போதாது நம் இரு விழிகள்.அவர்கள்
அவவ்போது எனை தாக்கும் உளிகள்.

சாதிக்கு ஒரு சங்கம் இருந்தாலும்
பெயரில் சாதி இல்லை நம்ம ஊரில்
அதற்கு இங்கு Surname என்று பெயர்

வருடம் வருடம் இந்துகளின் விநாயகர் சதுர்த்தி
பண்டிகையும் முஸ்லிம்களின் உருசு திருவிழாவும்
ஒன்றை ஒன்று முந்தி கொண்டு வர பார்க்கும்.
அதனால் இந்துவும் முஸ்லிமும் லேசாய்
முட்டி கொள்ள வழி பொறக்கும்...

இந்த ஊரு சட்டமன்ற தேர்தல் கூட நம் ஊரு
காலேஜ் தேர்தலிடம் தோற்று போகும்.
சினிமா போஸ்டர் இல்லாத சுவர்களால்
கழுதைகள் எல்லாம் பசியால் காய்ந்து சாகும்...

ஏழு மாத வாழ்கை என்றாலும் ஏழு
ஏழு ஜென்மம் வரை நினைவில் நிற்கும் இந்த
அனுபவம் - முதல் வேலை என்பதால் மட்டும் அல்ல
படித்தவுடன் வேலை கிடைத்தது என்பதால் கூட .

பெண் Vs Physics



முன் குறிப்பு:
தொலைக்காட்சி முழுவதும் ரியாலிட்டி ஷோ-வில் பெண்களின் கெமிஸ்ட்ரியை பார்த்துக்கொண்டு இருக்க நான் பெண்களிடம் physics -ஐ பார்க்க முறபட்டத்தின் விளைவு இதோ
------------------------------------------
நியுட்டனின் புவி ஈர்ப்பு விசையை
கொக்கி போட்டு இழுக்கும் விழி ஈர்ப்பு விசையால்
கண்டு கொண்டேன் கற்றுக்கொண்டேன்...

கலிலியோ-வின் அலைவு நேரத்தை
பிண்ணிய கூந்தலின் இட வல அசைவுகளால்
கண்டு கொண்டேன் கற்றுக்கொண்டேன்...

ஐன்ஸ்டீன்-ன் அணுக்கொள்கையை
வெடித்து சிதறும் மனக்கொள்கையால்
கண்டு கொண்டேன் கற்றுக்கொண்டேன்...



ஆர்க்கிமிடிஸ் கோட்ப்பாட்டை
ஆண்களால் வெளியேற்றப்பட்ட அழுகையும்
பெண்களால் வெளியேற்றப்பட்ட சிரிப்பும் சமம் என்பதால்
கண்டு கொண்டேன் கற்றுக்கொண்டேன்....

நான் அறிஞன் அல்ல அறிஞன் ஆக்கப்பட்டவன் !?
நான் கவிஞனும் அல்ல கவிஞன் ஆக்கப்பட்டவன் !?

கடன்


காதல் சந்திக்காதவர்களை கூட
சத்தியமாய் இந்த கடன் சந்தித்திருக்கும்-கடன்
வாங்கியவர் விதத்திலோ அல்லது
கொடுத்தவர் விதத்திலோ

படிக்கும் போது பக்கத்துக்கு பையனிடம்
வாங்கிய பென்சிலில் தொடங்கி
துளைத்து விட்ட பஸ் பாஸ்ற்க்காக
வாங்கிய கைமாத்தில் தொடர்ந்து
இன்னும் எல்லாரிடத்திலும்
தொடர்கிறது கடன் என்னும் கா(வ)லனின் பயணம்.

படிப்ப்பிற்க்காகவும் பாசத்திற்க்காகவும்
வாங்கிய அவசியக்கடன்
பௌசிர்க்காகவும் ரௌசிர்க்க்காகவும்
வாங்கிய அனாவசியக்கடன் என
தொடர்கிறது கடன் என்னும் கா(வ)லனின் பல ரூபங்கள்.

கந்து வட்டி , மீட்டர் வட்டி எல்லாம்
கடனின்அழையா விருந்தாளி-அது
காவு எடுத்துள்ளது பலரின் தாலி.

நாடு போட்ட குட்டிகளை விட வட்டி
போட்ட குட்டிகளின் வளர்ச்சி அதிகம் -அன்று
எல்லா வட்டிகளையும் ஒழித்து விட்டு
கடன் அட்டையை வளர்க்கிறது நாடு - இன்று

வாங்கும் வரை ரொம்ப ரொம்ப கஷ்டம் வாங்கிய
பின் திருப்பி கொடுப்பது அவரவர் இஷ்டம் -அன்று
வாங்கும் வரை முகவர் வருவான் உன் வீடு
வாங்கிய பின் உன் பாடு திண்டாடு - இன்று

கடனுக்காக எதுவும் கேட்காமல் புரியாமல் காட்டிய இடத்தில
கண்ணை மூடி கைநாட்டு வைப்பான் படிக்காதவன் -அன்று
முகவர் இட்ட தப்பு குறியீட்டு இடத்தில எதுவும்
படிக்காமல் சரியாக கையெழுத்து இடுகிறான் மெத்த படித்தவனும்-இன்று

பல நேரங்களில் பலர் கடனை திருப்பி கொடுப்பதே
அடுத்த முறை கடன் வாங்க வேண்டும் என்பதற்க்காகத்தான்.

வாங்கியவன் மறைந்தாலும்
கொடுத்தவன் மறைந்தாலும்
கடன் மட்டும் மார்க்கண்டேயனாய்
தன்னை உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கிறது...
அவ்வப்போது புதுப்பித்துக்கொண்டும் இருக்கிறது ...

வழிபாடும் வெளிப்பாடும்

வெள்ளி கிழமை மாலை நேரம்
அகம் மகிழ ஆண்டவனை காண சென்றேன்.
செல்லும் வழி யாவும் செல்-இல் பேசிய படியே பாதி
புது படத்தை விமர்சித்த படியே மீதி
-----------------------------------
கோவிலை அடைந்ததும் வாசலில்

என்னை காப்பாற்றுவார் என் கடவுள் என்பதில்
எள் அளவும் ஐயமில்லை ஆனால் என் செருப்பை
------------------------------------
தெய்வ தரிசனம்

அவ்வளவு நேரம் கண்விழித்து இருந்தவன்
தீபாராதனை-இல் கண்ணை மூடிகொண்டேன் சரி தானோ

தீபத்தட்டு வருகை-இல் கடவுளை விட காசு எவ்வளவு
போடுவது என்றே எண்ணம் செல்கிறது ஏனோ
---------------------------------------------
நவக்கிரக வழிபாடு

நவக்கிரக வழிபாடு பெரும்பகுதி
சுற்றுகள் எத்தனை என கணக்கு வைப்பதிலேயே
முடித்து விட்டேன்
--------------------------------------------
கொடிமரம் அருகே

ஆடையில் படும் அழுக்கை எண்ணி சாஷ்டாங்க
நமஸ்காரம் அதை அஷ்டாங்கமாக மாற்றி விட்டேன்.
---------------------------------------------
வாசலில்

பிச்சை பெறாதவன் திட்டி விட கூடாது என்றும்
செருப்பு இருக்க வேண்டும் என்றும் கடவுளை
வேண்டிய படியே கடக்கிறேன்
சற்று வேக வேகமாய் நடக்கிறேன்...

Popular Posts