இப்படிக்கு Camellia assamica

என்னை பார்த்த பின்பு தான் எழுந்திருக்கிறாய்
நான் என்ன உன் செல்ல மகளா ?

எனக்காக தினமும் பல முறை காத்து கிடக்கிறாய்
நான் என்ன உன் ஆசை காதலியா ?

தினமும் உன் இதழ்களை என்
மீது பதித்து விடுகிறாய் மறவாமல்
நானும் உனக்கு ஒரு உற்சாகத்தை
தந்து விடுகிறேன் தவறாமல்
நான் சூடாய் இருக்கையில் நீ உன்
இதழ்களை என் மீது பதிக்க முயல்கையில்
நான் சுட்டு விடுவதும்
நீ எனை உமிழ்ந்து விடுவதும்
என ஊடல் கொள்கிறோம்
ஊடல் கொண்ட அடுத்த ஐந்து நிமிடத்திற்குள்
நாம் இருவரும் கூடல் கொண்டு விடுகிறோம்.
என்னை உன்னுள் கலந்து விடுகிறாய்..
நான் என்ன உன் அன்பு மனைவியா ?

பொழுது போகாமல் போரடிக்கையில்
அலுவலக மீட்டிங் நடக்கையில்
வேலை பளு மண்டையை பிளக்கையில்
நண்பர்களுடன் வெட்டி அரட்டை அடிக்கையில்
இப்படி எல்லா நிகழ்விலும் உன்னுடன் நான்
உன் பர்சில் உள்ள உன் தாயின் புகை படத்தை போல ...



இப்படிக்கு,
தேநீர்(தேன்+நீர்)/(Camellia assamica)
(Camellia assamica is the Botanical name of Indian Tea)

4 comments:

  1. hai dear how do said? some time when v read some **kavithai** it will tell about our inner expression without our knowledge
    keep it up.............
    Anu&bharathi

    ReplyDelete
  2. படித்தது பிடித்தது ,
    அந்த தேனீர் கோப்பை " திருமணத்தில் ஜீன்சுடன் மணப்பெண்" ரசிக்கவில்லை

    ச.முத்துலிங்கம்

    ReplyDelete
  3. வேற லெவல். லைட்டு, ஸ்ட்ராங், மீடியம், நுரை இல்லாமனு வரைட்டி காட்டி'டீ'ங்க.

    ReplyDelete

Popular Posts