Showing posts with label யாரோ சொன்னாக. Show all posts
Showing posts with label யாரோ சொன்னாக. Show all posts

கற்பக விநாயகர் Vs Other Vinyagar 's





வணக்கம்.
எல்லாரும் இன்று எல்லாரும் வெறும் வாயை மெல்லாமல் கொழுக்கட்டை வைத்து மென்று கொண்டு இருப்பீர்கள்.இன்னும் கொஞ்சம் கொறிக்க..

பிள்ளையார் பட்டியில் உள்ள கற்பக விநாயகர் மற்ற எல்லா விநாயகரை விட கொஞ்சம் வேறு வேறுபட்டவர்.
அது என்னவென்றால்
1 . இந்த விநாயகருக்கு இரு கைகள் மட்டும் தான் இருக்கும்.மற்ற விநாயகர் போல எந்த ஒரு ஆயுதத்தையோ அல்லது கொழுக்கட்டையோ வைத்து இருக்க மாட்டார்.இந்த விநாயகர் தியான கோலத்தில் இருப்பதாய் நம்ப படுகிறது.(Refer the Images)
2.இந்த விநாயகர் இரு கால்களை மடக்கி சம்மணம் போட்டு அமர்ந்து இருப்பார் .மற்ற விநாயகர் எல்லாம் இவ்வாறு இருக்காது(Refer the Images)
3.இந்த விநாயகரின் தந்தம் இடது பக்கம் உடைந்து இருக்கும்.மற்ற விநாயகருக்கு வலது பக்கம் உடைந்து இருக்கும்.(Refer the Images)
4 இந்த விநாயகரின் துதிக்கை சில விநாயகரை போல் வலப்பக்கம் (வலம்புரி) இருந்தாலும், துதிக்கை நேராக வந்து வளைவது இந்த விநாயகருக்கு மட்டும் தான். (Refer the Images)

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

மெய் பொருள் காண்பது அறிவு


படிக்கும் போது புவியல் பாடத்தில் 5 மார்க் வாங்குவதற்காக உலக வரைபடத்தை முதன் முதலில் பார்த்தது. அதன் பிறகு நம் நண்பர்கள் வெளி நாட்டில் எங்கு இருக்குகாங்க என்று பார்க்க தான் நாம பல பேரு உலக வரைபடத்தை பயன்படுத்தறோம்.



உலக வரைபடத்தில் கிரீன்லாந்து மற்றும் ஆப்ரிக்கா ரெண்டையும் பார்த்திங்கனா கிரீன்லாந்து என்னவோ ஆப்ரிக்காவை விட கொஞ்சம் தான் சிறிசு என்று தோணும் ஆனால் அது உண்மை இல்லை.ஆப்ரிக்காவின் பரப்பளவு (விக்கிபீடியா படி) =30,221,532 km2 கிரீன்லாந்துவின் பரப்பளவு (விக்கிபீடியா படி) =2,166,086 km2 அதாவது ஆப்ரிக்கா க்ரீன்லந்தை விட 14 மடங்கு பெரியது.



பிறகு என் உலக வரைபடம் அப்படி உள்ளது என்றால் கூம்பு(Cone), கோளம்(Sphere) போன்றவற்றை தட்டையாக மாற்றி வரையும் முறையை பொறுத்து இதன் அளவுகள் மாறுபடும்.கோணத்தை நிலையாக கொண்டு வரைந்தால் நாம் பிரிக்கும் மைய இடத்தில் இருந்து நகர நகர உருவம் மாறும்.(The distortion of the size will be in the increasing pattern if you move away from the centre.) இந்த முறைக்கு பெயர் Mercator projection. Mercator projection உள்ள இந்த குறைபாடு எல்லாரும் அறிந்தது.இதனால் Mercator projection- ன் குறைபாடை Greenland problem என்றும் கூறுவார்கள்.தொலைவை விட கோணத்துக்கு முக்கியத்துவம் இருப்பதால் கடல் வழி பயணத்துக்கு இந்த Mercator projection மிகுந்த பயனுள்ளது.

இதை தான் வள்ளுவர் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்று கூறி உள்ளார்.

பாட்டி வடை சுட்ட கதை


நம் எல்லாருக்கும் தெரிந்த ஒரு கதை,ரொம்ப தேய்ந்த ஒரு கதையும் கதை கூட.
பாட்டி வடை சுட்ட கதை.இந்த கதையில் இறுதியில் நரி காக்கையை ஏமாற்றி வடையை பறித்து விடுவது போல அமையும்.
நீங்கள் என்றாவது யோசித்து உண்டா நரி ஏன் இந்த கதையில் என்று?.ஒரு நாய் , பூனை என்று வைத்து கூட கதை புனைய பட்டிருக்கலாம்.நரியை ஏமாற்றும் விலங்கு என்று காட்ட வேண்டிய அவசியம் என்ன? இந்த கேள்விக்கான பதில் பின் வரும் கேள்வியில் தான் உள்ளது.நீங்கள் சர்கஸில் எங்காவது நரியை பார்த்தது உண்டா?.பாம்பு கீறி சண்டை போல் எங்காவது நரியை வைத்து வித்தை காட்டுவதை பார்த்து உண்டா? பார்த்து இருக்க வாயப்பு இல்லை.காரணம் நரியை நீங்கள் அவளவு சீக்கரம் ஏமாற்றி பழக்க படுத்த முடியாது. சிங்கம் , புலி , யானை, பாம்பு போன்ற பெரிய விலங்குகளை கூட கொஞ்சம் சீக்கரம் பழக்க படுத்த முடியும். தன்னால் ஏமாற்ற முடியாத நரியை ஏமாற்றும் விலங்காக நாம்(மனிதன்) சித்தரித்து விட்டோம்.இதன் அடுத்த கட்டமாய் நாம் சொல்லவதை கேட்காதவனையும் அவன் நரி மாதிரி என்று சொல்ல ஆரம்பித்து விட்டோம்.நாம கலக்கரோம் இல்ல

இதற்கு மனிதனோட அகராதியில் பல பெயர் இருக்கு.அது என்னன்னா Sixth Sense , தந்திரம் , Diplomacy, Politics and etc.

ஏன் அக்னி சாட்சி ...



பஞ்ச பூதங்களான நீர்,நிலம்,காற்று,நெருப்பு,ஆகாயம் இந்த ஐந்தில் ஏன் நெருப்பை மட்டும் சாட்சியாய் வைத்தார்கள்.
அக்னியை தவிர எல்லாமே தன் நிலையை மாற்றி கொள்ளும் எப்படி என்றால்
நீரின் சுவை இடத்திருக்கு இடம் மாறகூடும்,
நிலம் என்பது பாலைவனம் , கடல் என இடத்திருக்கு இடம் மாறும்.
காற்று என்பது தென்றல்,சுறாவளி என நிலை மாறக்கூடும்.
ஆகாயம் என்பது மாறி கொண்டே இருக்கும்..
ஆனால் இந்த அக்னியின் தன்மை எங்கும் ஒன்றே சுடுவது ... சுடுவது மட்டுமே
அதனால் தான் அக்னி சாட்சி...
("எங்க பாட்டி அப்பவே சொல்லுச்சு..." என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது)

செல்போன் Snatching

நான் எங்கோ எப்பொழுதோ படித்த விசயங்களையும் செவி வழி செய்திகளையும் இங்கே "யாரோ சொன்னாக" என்ற ஒரு பிரிவில் கீழ் பதிய உள்ளேன்


கடந்த ஒரு மாதத்திற்குள் ஹைதராபாத்-இல் எனது இரண்டு நண்பர்கள் தங்களது கைபேசியை இழந்து உள்ளனர்.சாலையில் நடந்து கைபேசி பேசி கொண்டு செல்லும் போது சிலர் பைக்கில் வந்து கைபேசியை அபகரித்து சென்று விட்டனர். இது போன்ற கைபேசி அபகரிப்பு எல்லா பெரு நகரங்களிலும் அதிகமாகி கொண்டு வருகிறது.

இதை தவிர்க்க ear phone use செய்யலாம்.எடுத்தாலும் தடுக்க வாய்ப்பு உள்ளது.
அல்லது இந்த புகை படத்தில் உள்ளது போல் தான் செல்ல வேண்டுமோ என்று தோணுது ..

Popular Posts