பாச மலர்


(முன் குறிப்பு:தங்கை திருமணம் முடிந்து 40 நாட்கள் கழித்து
அண்ணன் & தங்கையின் டைரியின் வரிகள்)

தங்கை டைரி:
--------------
என் கல்யாணம் சொர்க்கத்தில் தான் நிச்சயக்க பட்டது..
ஆம் அண்ணா நம் வீட்டில் தானே நடந்தது..

காபி குடித்து எழுந்து பழகியவள்
காபி குடுக்க எழுந்திருத்து பழகுகிறேன்..

எல்லாருக்கும் பின்னால் எழுந்து
எல்லாருக்கும் முன்னால் சாப்பிடவ
எல்லாருக்கும் முன்னால் எழுந்து
எல்லாருக்கும் பின்னால் சாப்பிடறேன்..

அவர்கள் யாரும் என்னை முன்னால்
சாப்பிட கூடாதென்று சொல்ல வில்லை..
அவர்கள் யாரும் எனக்கு பின்னால்
சொல்ல கூடாதென்று தான்...

அவர் சட்டை அயன் செய்கையில்
உன் முகம் தோன்றி மறையுது தானாய்...
எதோ இருக்கிறேன் நானாய்...

அம்மாவிடம் சண்டை போட்டு மாற்றும் சீரியலை
எல்லாம் மாமியாருடன் சிரித்த படியே பார்க்கிறேன்...

பள்ளி கூட குழந்தை போல தீபாவளி,பொங்கல்
விடுமுறையை எதிர் பார்த்து இருக்கிறேன் நம் வீடு வர..

அண்ணன் டைரி :
-----------------
உன் திருமணம் நடந்து
40 நாட்கள் தான் நகர்ந்துள்ளன.
நான்கு யுகம் போல் தோணுது எனக்கு.

பிறப்பில் நான் முதல் வர விட்டு கொடுத்த உனக்கு
திருமணத்தில் நீ முதல் வர நான் விட்டு கொடுத்த நாள்..

அதிகாரத்தோடே பார்த்த அப்பாவும் நம் வீட்டு
அதிர்ஷ்ட தேவதை நீயும் அழுத முதல் நாள் ...

நாம் சண்டை போட்டு சாப்பிட துடிக்கும் மாம்பழ
டிசைன் தட்டும் டிவியை நோக்கிய டைன்னிங்
டேபிள் இருக்கையும் காலியாகவே உள்ளன.

அடித்து கொண்டு படுக்கும் கட்டில் மெத்தையும்
ஆளில்லாமல் தனியாகவே உறங்குகிறது..

மாற்றாத தேதி காலேண்டர்..
தண்ணீர் ஊற்றாத டேபிள் ரோஸ்..
துடைக்காத அப்பா பைக்கோடு
அவசரத்தில் அணியும் அயன் செய்யாத
சட்டையும் பாலிஷ் போடாத ஷுவும்
நீ இல்லாததை உரத்து உரைக்கின்றன..

இரும்பு மனிதர் என்று இறுமாப்போடு இருந்த
அப்பா துரும்பாக இளைத்து விட்டார் ..
உன்னை அதட்டி கொண்டே இருந்த அம்மாவும்
அடுப்படியிலேயே அடங்கிவிட்டார்..

ரிமோட் சண்டை போட்டு மாற்றாத டிவி அம்மா
வைத்த சீரியலோடு ஓடி கொண்டிருக்கிறது..
நம் வீட்டில் நீ இல்லாததால் டிவி சீரியல்
கதா பாத்திரங்கள் கூட அழுகின்றன...

இஷ்டப்பட்டு தான் கட்டி கொடுத்தோம் உன்னை ஆனால்
கொஞ்சம் கஷ்டத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

நீ வரும் நாட்களே தீபாவளி,பொங்கல் ஆனது எங்களுக்கு....

No comments:

Post a Comment

Popular Posts