காதல் சந்திக்காதவர்களை கூட
சத்தியமாய் இந்த கடன் சந்தித்திருக்கும்-கடன்
வாங்கியவர் விதத்திலோ அல்லது
கொடுத்தவர் விதத்திலோ
படிக்கும் போது பக்கத்துக்கு பையனிடம்
வாங்கிய பென்சிலில் தொடங்கி
துளைத்து விட்ட பஸ் பாஸ்ற்க்காக
வாங்கிய கைமாத்தில் தொடர்ந்து
இன்னும் எல்லாரிடத்திலும்
தொடர்கிறது கடன் என்னும் கா(வ)லனின் பயணம்.
படிப்ப்பிற்க்காகவும் பாசத்திற்க்காகவும்
வாங்கிய அவசியக்கடன்
பௌசிர்க்காகவும் ரௌசிர்க்க்காகவும்
வாங்கிய அனாவசியக்கடன் என
தொடர்கிறது கடன் என்னும் கா(வ)லனின் பல ரூபங்கள்.
கந்து வட்டி , மீட்டர் வட்டி எல்லாம்
கடனின்அழையா விருந்தாளி-அது
காவு எடுத்துள்ளது பலரின் தாலி.
நாடு போட்ட குட்டிகளை விட வட்டி
போட்ட குட்டிகளின் வளர்ச்சி அதிகம் -அன்று
எல்லா வட்டிகளையும் ஒழித்து விட்டு
கடன் அட்டையை வளர்க்கிறது நாடு - இன்று
வாங்கும் வரை ரொம்ப ரொம்ப கஷ்டம் வாங்கிய
பின் திருப்பி கொடுப்பது அவரவர் இஷ்டம் -அன்று
வாங்கும் வரை முகவர் வருவான் உன் வீடு
வாங்கிய பின் உன் பாடு திண்டாடு - இன்று
கடனுக்காக எதுவும் கேட்காமல் புரியாமல் காட்டிய இடத்தில
கண்ணை மூடி கைநாட்டு வைப்பான் படிக்காதவன் -அன்று
முகவர் இட்ட தப்பு குறியீட்டு இடத்தில எதுவும்
படிக்காமல் சரியாக கையெழுத்து இடுகிறான் மெத்த படித்தவனும்-இன்று
பல நேரங்களில் பலர் கடனை திருப்பி கொடுப்பதே
அடுத்த முறை கடன் வாங்க வேண்டும் என்பதற்க்காகத்தான்.
வாங்கியவன் மறைந்தாலும்
கொடுத்தவன் மறைந்தாலும்
கடன் மட்டும் மார்க்கண்டேயனாய்
தன்னை உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கிறது...
அவ்வப்போது புதுப்பித்துக்கொண்டும் இருக்கிறது ...
No comments:
Post a Comment