#அம்மாவும்அப்பாவும்நாங்களும் -5

காட்சி 24: 92-94 காலகட்டம் அப்பா இறந்ததிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சராசரி வாழ்க்கைக்கு திரும்பியிருந்தோம் அம்மா அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்காக சைக்கிள் கற்றுக் கொள்ள வேண்டும் அப்போதுதான் பிள்ளைகளை பள்ளியில் விடுவதற்கும் தனது சராசரி வேலைகளுக்கும் உதவியாக இருக்கும் என்று எண்ணினார் அதற்காக இரவு நேர வாடகை சைக்கிள் எடுத்து வந்து கற்றுக் கொள்வது என முடிவு எடுத்திருந்தார் அவருக்கு துணையாக சைக்கிள் ஓட்டவே தெரியாத விஜயா அக்கா கமலா அக்காவும் சேர்ந்து கொண்டனர். இந்த முயற்சி ஏனோ முழுவதுமாக நிறைவடையவில்லை. நான் ஏற்கனவே கூறியது போல் தொழில் சற்று நன்றாக நடந்து கொண்டிருந்ததால் உதவிக்காக எங்களது சொந்த ஊரிலிருந்து ஒரு அண்ணாவை எங்களை பள்ளியில் விடுவதற்கும் கடையை பார்த்துக் கொள்வதற்கும் வரவழைத்து இருந்தார். அப்போது சின்னத்தம்பி படம் பிரபலமாக இருந்ததால் அவருக்கு அந்த ஊரில் எல்லாரும் சின்ன தம்பி என்று பெயர் வைத்து விட்டார்கள். ஏதோ சில காரணங்களால் அவரும் ஆறு மாதங்களிலேயே வேலையை விட்டு சென்று விட்டார் சென்று விட்டார். இது 94 ஆம் ஆண்டு நான் குரங்கு பெடல் போட்டு சைக்கிளை ஓட்டியபடி பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பொழுது தவறுதலாக கீழே விழுந்து இடது கையை முறித்துக் கொண்டிருந்தேன். பின்பு எக்ஸ்ரே மாவு கட்டு இன்று ஆறு மாத காலம் அப்படி இப்படியாக ஓடிவிட்டது அம்மாவும் எங்களை நல்லபடியாக வளர்த்துக் கொண்டிருந்தார்.

காட்சி 25: 95-96 ஆம் ஆண்டின் காலகட்டம் என நினைக்கிறேன். எங்கள் வீட்டிற்கு ஒரு உறவினர் அக்கா வந்திருந்தார். இரவு அவரும் அவரது வயது வைத்த தோழிகளும் பேசிக் கொண்டிருந்தனர். அந்த தொடர் வீட்டின் உரிமையாளர் ஏதோ சில வார்த்தைகள் அக்காவையும் தோழிகளையும் திட்டி விட்டார். அதிகம் கோவப்படாத அம்மா அப்பொழுது நன்கு கோபம் அடைந்து விட்டார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. வீட்டை காலி செய்வதென முடிவெடுத்து அடுத்த நாளே வீட்டுக்கு கால் செய்து விட்டார். நாங்க வைத்திருந்த கடைக்கு அருகில் அதே வீதியில் இந்த வீடு கிடைக்கவில்லை என்று போதும் மூன்று நான்கு தெருக்கள் தள்ளி உள்ள வீட்டிற்கு நாங்கள் சென்று விட்டோம். இந்த இடம் பெயர்தலால் அம்மாவுக்கு தான் வேலை பளு அதிகமாகும் என்று தெரியும். இருந்தாலும் அம்மா அந்த முடிவை எடுத்திருந்தார்.மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பதை அம்மா எங்களுக்கு அவரின் இந்த செயல் மூலம் கற்றுக் கொடுத்திருந்தார் தொடரும்..

கிருஷ்ணப்பன் சொக்கலிங்கம்
16-08-2023

No comments:

Post a Comment

Popular Posts