Showing posts with label பார்வைகள் பல விதம். Show all posts
Showing posts with label பார்வைகள் பல விதம். Show all posts

நான் ஒரு முட்டாளுங்க...

.
(Photo Courtesy:Mr.Muthulingam,Hyderabad)

 சுய முன்னேற்றம் குறித்த  புத்தகம் படிப்பதை நானும் அவவ்போது செய்து வருகிறேன்.அதை படிக்கும் போது எதோ நாளை முதல் இதன் படி நடந்தால் வெற்றி நமதே என்பது போல் தெரியும்.ஆனால் அது படித்த பிறகு தான் மிக்க பெரிய குழப்பமே ஆரம்பம் ஆகும் எனக்கு..

சில புத்தகம்  "ஒரு விஷயத்தை பற்றி தெரியாம அந்த விசயத்தில் இறங்க கூடாது" என்பது போல்  அறிவுரைகள் சொல்லும்.இறுதியில் ஆழம் தெரியாம  காலை விட கூடாது என்பது போல் அதன் கருத்து இருக்கும். ஓகே என்று ஒரு விசயத்தை செய்வதற்கு முன் அதன் பற்றி அறிய முற்பட்டால் அதில் உள்ள ரிஸ்க் பற்றி தெரிந்து வேண்டாம் என்று முடிவு செய்வேன்.அப்போது அடுத்த ஒரு தலைப்பில் சொல்லப்பட்ட " லைப்-ல ரிஸ்க் எடுக்காட்டி ஜெயிக்க  முடியாது என்று இருந்தது  ஞாபகம் வரும்.இப்ப மறுபடியும் குழப்பம் ஸ்டார்ட் ஆகிவிடும் ..இதுல எது சரின்னு என்று மண்டய பிச்சுக்க வேண்டி இருக்கும்.
சரி இது பற்றி நம்ப நண்பர்களிடம் அல்லது பெரியவர்களிடம் முழு கதையை சொல்லி அறிவுரை கேட்டா  அவங்க Take Calculative Risk அப்படின்னு ஒரு புது வார்த்தையை சொல்லி இன்னும் குழப்பிடுவாங்க.
Calculative risk எப்படி எடுக்கனும்? ? நான் எடுக்கற Calculative risk சரியானு எப்படி தெரியும்? போன்ற கேள்விக்கு பதில் தெரியாம நான் முழிச்சுகிட்டு இருப்பேன்..
அப்பறமா ஒருத்தன் "  நீ ஜெய்சிட்டா அது சரியான Calculative risk.இல்லாட்டி அது தப்பான Calculative risk " அப்படின்னு பொசுக்குனு சொல்லிப்புட்டான்  பாவி பய புள்ள..

இது தெரியாம மதில் மேல் பூனை மாதிரி இருந்த  நான் ஒரு முட்டாளுங்க ...

சுகந்தி டீச்சர்

எல்லாரும் சொல்லுவாங்க..
"நம்ப நாட்டின் எதிர் காலம் இளைஞரின் கையில் என்று.."
அதில் எனக்கு பெரிய அளவில் உடன்பாடு இல்லை.இது எல்லா தலை முறையிலும் சொல்லப்படும் ஒரு வெற்று கோஷமாக தான் எனக்கு படுகிறது.என்னை பொறுத்த வரை ஒரு ஆசிரியர் தான் ஒருவருடைய எதிர் காலத்தையும் ஓரளவு மாற்ற முடியும் என்று படுகிறது. கொஞ்சம் யோசித்து பார்த்தால் உங்களுக்கு உண்மை புரியும்.நீங்கள் என்ன படிப்பு படிப்பது என்று ஒரு ஆசிரியரை தான் கேட்டு இருப்பீர்கள்.உங்களுக்கு பிடித்த ஆசிரியர் எடுத்த பாடம் உங்களுக்கு பிடித்து போய் இருக்கும். சிலர் பாடம் எடுக்கும் விதத்திற்காகவே அவர்களை நமக்கு பிடித்து போய் இருக்கும்.சிலரை அதற்காகவே பிடிக்காமலும் போய் இருக்க கூடும்.நமது தமிழகத்தில் பெரும்பாலும் ஆசிரியருக்கு என்று ஒரு சிறப்பு மரியாதை இருந்து வருகிறது.தனியார் பள்ளிகளில் Vs அரசு பள்ளிகள்ஆசிரியர் ஊதியம் என்று பார்த்தால் எனக்கு தெரிந்து இந்த ஆசிரியர் துறையில் மட்டும் தான் ஊதிய வேறுபாடு மிக அதிகம். அதற்கான காரணம் ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.என்னை கேட்டால் ஆசிரியர் என்றவுடன் கண்ணம்மா டீச்சர் ஞாபகம் வர பல காரணம் உண்டு(அவரை பற்றி பிறகு பார்போம் ) என்றாலும் சில மாதங்களுக்கு முன்பு சுகந்தி என்ற டீச்சர் என்னை மிகவும் பாதிப்படைய செய்து விட்டார்.



அவர் வேறு யாரும் அல்ல.வேதார்ணயம் பள்ளி பஸ் விபத்தில் பள்ளி குழந்தைகளை காப்பாற்ற முற்பட்டு உயிர் இழந்த அந்த பெண் தான். இந்த தியாகத்துக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்க பட்டு உள்ளது.அவருக்கு நல்லாசிரியர் விருதும் கூட வழங்கி இருக்கலாம்.அவர் 11 குழந்தைகளை காப்பாற்றி உள்ளதாக சொல்ல படுகிறது.அவர் குழந்தைகளை காப்பாற்றும் போது தனது job description படி இதை நான் செய்ய வேண்டுமா என்று யோசித்து இருக்க மாட்டார் என்றே எனக்கு படுகிறது
.எப்படியோ அவர் காப்பாற்றிய குழந்தைகளில் ஒருவராவது அவர் கடைசியாய் சொல்லி கொடுத்த ஆபத்தில் உதவுவது என்பதை அவர்கள் வளர்ந்த பின்னர் உணருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நம்மால் செய்ய முடியாதை செய்யும் யாரும் ஹீரோ தான் ...
அப்படி பார்த்தால் இந்த சுகந்தியும் ஒரு ஹீரோ தான்..

பாடம் கற்று கொடுத்தவர்கள் எல்லாம் ஆசிரியர் என்றால் எல்லாரும் எல்லாருக்கும் பாடம் கற்று கொடுத்து கொண்டு இருப்பதால் அனைவருக்கும் "ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்."

நண்பர்கள் தினமாம்

சரி வாங்க கொஞ்சம் நட்பை பத்தி கொஞ்சம் பேசுவோம்
Scene 1
நட்பு னா என்னனு தெரிஞ்சுக்க நமக்கு தெரிந்த தமிழ் சினிமா என்ன சொல்லுதுன்னு பார்த்தா
நட்புகாக உயிரை குடுப்பது,காதல் தூது போவது , எப்ப கேட்டாலும் கணக்கு பார்க்காம காசு செலவு செய்வது,
நண்பன் சாகும் போது தானும் சாவது , நண்பனுக்காக பழியை ஏற்று கொள்வது
நம்ப தமிழ் கலாச்சார கதைகள் என்ன சொல்லுதுன்னு பார்த்தா நண்பன் செய்வது தப்பு என்று தெரிந்தும் அவனுக்காக போராடுவது ,ஆயுள் வளர்க்கும் ஏதேனும் பொருள் கிடைத்தால் தான் சாப்பிடாமல் தான் நண்பனுக்கு தருவது
மானத்தை காக்கும் கை மாதிரி இருக்கணும் என்றும் சொல்லுது..நானும் +2 படிக்கும் போது நட்பை பத்தி ஒரு கவிதை எழுதினேன்
அது என்னன்னா உடலும் உயிரும் போல, நிழலும் நிஜமும் போல,பூவும் மனமும் போல, நகமும் சதையும் போல என்பதற்கும் அதிகமானது என்பது போல தொடரும்.
Action cut camera move to flash back
Scene 2

நட்பு
உடலின் உயிர் அல்ல - இறப்பில் உடலை விட்டு பிரிய
நிஜத்தின் நிழல் அல்ல -இருட்டில் நிழலை விட்டு பிரிய
பூவும் மனமும் அல்ல - வாடிய பின் பூவை விட்டு பிரிய
சதையும் நகம் அல்ல -வளர்ந்ததும் சதை விட்டு பிரிய
உயிரின் உறைவிடம் எது என உரைத்திட இயலும் ?
அன்னையின் அன்பை எதை கொண்டு அளந்திட இயலும்
உணர்ந்திட மட்டுமே நட்பு.. உணர்ந்திட மட்டுமே நட்பு..

என்று எழுதி இருந்தேன்
அதன் பின்னால் நட்பு என்ற இடத்தில் நாட்டு பற்று என்று போட்டு வேறு ஒரு இடத்தில் இந்த கவிதையை use செய்து விட்டேன்
Action Cut Back to Scene 1
இப்ப நான் எழுதியதை மட்டும் இல்லை மேல் உள்ள பல விசயங்களை படித்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பாய் இருக்கிறது.
இப்போது நட்பு குறித்த வரைமுறைகள் மாறி இருப்பதாய் தான் எனக்கு தோன்றுகிறது.
பல தூரங்களுக்கு அப்பால் பல பணிகளுக்கு இடையில் R u there என்ற சாட்டிங் மெசேஜ்-இலும் சிறப்பாய் வருகிற SMS அல்லது scrap மெசேஜ்-லும் எந்த ஒரு காரணமும் இல்லாமல் வருகிற டைம் பாஸ் போன்களிலும் ஆர்குட் & facebook பக்கங்களில் கமெண்ட் செய்து கலாய்பதிலும் தான் இப்போ நட்பு வேகமாய் பயணித்து கொண்டு இருப்பதாய் எனக்கு படுகிறது
முகம் பார்த்து பழகாமல் நெஞ்சத்தால் பார்ப்பது(முக நக நட்பது,அக நக நட்பது ) என்று திருவளுவர் இதை தான் கூறி இருப்பர் என்று நினைகிறேன்.

எனது பழைய கவிதையில் சில கருத்து மாற்றங்கள் இருந்தாலும்

உணர்ந்திட மட்டுமே நட்பு.. உணர்ந்திட மட்டுமே நட்பு.. என்பதில் மாற்றம் இல்லை



அனனவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்

தமிழ் தெரிந்த எல்லா உயிர்க்கும் - எதிரொலி


எனது சமீபத்திய பதிவுக்கு என் நண்பன் குமார் அனுப்பிய ஒரு எதிரொலி மின்னஞ்சலை
நண்பர்களின் படைப்புகளில் பதிவு செய்கிறேன்.

I read your recent articles about Semmozhi Conference!
It reflects all Tamizh peoples who really worry about "Tamizh Language".
I also have some issues on that song.
Here with I have give the link for that song if you don't have.
"http://www.youtube.com/watch?v=U87jbmVx3GA"
Please carefully see the song each seconds.
After around 4 min 07 sec a girl writing Tamizh letter's on the wall.
she turned to see her father.
The FATHER CALLED HIS DAUGHTER BY THE WORD "COME"!!!!!!
Even she wrote "Amma, Appa and Thenmozhi" on the wall.
Where gone "TAMIZH"?
It shows Gowtham menan & Co. doesn't show any interest on Tamizh!
Isn't it?
As usual commercial play a major role than Tamizh!

If you have time write an article on this issues in your blog! If possible.


Take care
Truly
P.Kumar

தமிழ் தெரிந்த எல்லா உயிர்க்கும்


செம்மொழி மாநாட்டு மைய நோக்கு பாடலையையும் அது படமாக பட்ட விதத்தையும் தொலை காட்சியில் பார்க்கும் பொழுது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்குது..
இயக்கம் கவுதம் மேனன் எடுத்தது என்பது பார்த்தவுடன் தெரிந்தது.
அந்த பாடலில் திரையில் அ ,ம,ஊ,ஈ,இ,ன,ண,ஒ,கு,வ,ஏ,ஆ,மு,ச,ற,ர,ஞ,ல,ய பல எழுத்துகள் வரும்..ஆனால் அதில் தமிழின் சிறப்பு என்று சொல்லகூடிய ழகரம் " ழ " இல்லை.என்ன செய்யறது கவுதம் மேனனுக்கு தெரிந்த தமிழ் அவ்வளவுதான். பாரதி ராஜா ,பாலு மகேந்திரா போன்றோரை எடுக்க சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று எனக்கு படுகிறது.இசை ஞானியும் SP.பாலசுப்ரமணியமும் இல்லாதது ஒரு குறையாக படுகிறது.இசை ஞாநியை இசை அமைக்க சொல்லி இருக்கலாம். ரஹ்மானும் ஒரு பாடகராக இருந்து இருக்கலாம்.இசைஞானியும் ஜூன் 2 தனது பிறந்த நாள் அன்னதான விழாவில் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்துகள் என்று தனது வருத்தத்தை மெதுவாய் சொல்லி இருக்கிறார்.என்ன செய்ய.. கடந்த தமிழ் மாநாட்டில் "கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலியும்" என்ற நாட்டமை பாடல் ஜெயலலிதா அவர்களுக்கு பிடித்து போனதால் இசை அமைப்பாளர் சிற்பி மாநாட்டு இசையை நிகழ்த்தினார்.
சரி விடுங்க..கலைஞர் உடன் பணியாற்றி உள்ளேன் என்று A.R. ரகுமான் மற்றும் கவுதம் மேனன் பெருமை படுவதற்கும் குறிப்பாக கவுதம் மேனன் என்னை வைத்து படமும் A.R. ரகுமான் என்ன பாடலுக்கு இசையும் அமைத்து உள்ளார் என்று கலைஞர் பெருமை பட உதவும். ஆனால் ஒரு விஷயம் கலைஞரின் பாடல் மிக அருமை.அதுவும் தொடக்க வரிகள்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம் -
உழைத்து வாழ்வோம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்


கலைஞர் சார்,
What a Man ...உங்களுக்கு இன்னும் வயசு ஆகவில்லை...

நெஞ்சத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்...

நட்பு என்ற வார்த்தையை கேட்டவுடன் எல்லார் மனதிலும் சில முகங்கள் தோன்றி மறையும்.
நட்புக்கு இலக்கணமாய் அதியமான் அவ்வை நட்பு,கிருஷ்ணர் குசேலர் நட்பு என்று சில பழங்கதைகளும் நமக்கு சொல்லபடிருக்கு.பழங்கதைகளை திருப்பி சொல்லி உங்களை போர் அடிக்க விரும்பலை..என் கதைய சொல்லறேன் கேளுங்க..(யாரு பா அது அதுக்கு பழங்கதையே பரவா இல்லைங்கறது).
என் கூட வேலை பார்த்த எல்லாரையும்,என் கூட படிச்ச எல்லாரையும் நண்பன் தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.Colleague,Classmate அப்படினு இது வரை பிரித்து கூப்பிட்ட தில்லை.நண்பன் என்ற அடைமொழியோடு பல பேரு கூட நட்பில்லாமல் இருக்கேன்.சில பேரு கிட்ட மட்டும் தான் நட்பு கொண்ட நண்பனாய் இருந்து இருக்கேன்.இருந்தாலும் பாருங்க அவங்க கிட்ட கூட இந்த மாதிரி சில சம்பங்கள் நடந்து இருக்கு.
என் டீம்ல விளையாடும் என் நண்பன் அவுட் ஆகும் போது ஒரு சந்தோசம் அடுத்து நான் பேட்டிங் பண்ண போறேன்னு.
என் உடனே எப்பவும் படித்த இன்னொரு நண்பன் பரிட்சைல அஞ்சு மார்க்கு அதிகம் வாங்குன போது ஒரு பொறாமை.


நாங்க ரெண்டு பேரும் சைட் அடிச்ச பொண்ணு அவன் கிட்ட மட்டும் வந்து பேசும் போது ஒரு வயிற்று எரிச்சல்
அப்பறம் ஒவ்வொரு நண்பர்களிடமும் ஒவ்வொரு விசயங்களை மறைத்து வைக்க முற்படுவது
அப்படீன்னு பட்டியல் நீண்டு கொண்டே போகும்..

நான் கூட இவங்க கிட்டவும் நட்பு இல்லையோனு தான் முதலில் நினைத்தேன்.பிறகு தான் எனக்கு புரிந்தது இது எல்லாம் எப்படினா..பேருந்தில் நமக்கு புடிச்ச சன்னல் ஓர இருக்கையை மழை காலத்தில் ஒதுக்கிற மாதிரி தான்.அதுக்கு நாமும் காரணமில்லை அந்த இருக்கையும் காரணமில்லை.. எப்படி இருந்தாலும் சன்னல் ஓர இருக்கையை மீதான ஒரு ஆசை நமக்கு குறைய போவது இல்லை.அது போல தான் நட்பு கூட...

என்றும் நட்புடன்
கிருஷ்ணப்பன்

கொஞ்சம் வாழ்த்து கொஞ்சம் நிஜம்


எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக சாதனை புரிந்த ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துகள்.
அவர் மாநகராட்சி பள்ளி மாணவி என்ற தகவல் மகிழ்ச்சியை கொஞ்சம் அதிகரிக்கிறது.
இந்த 10th மற்றும் 12th தேர்வில் மாநில அளவில் முதல் சில இடங்களை பெறுவர்கள் ஒரு 10 அல்லது 15 ஆண்டு கழித்து எப்படி உள்ளார்கள் என்று பர்ர்க்க கொஞ்சம் ஆர்வமாய் இருக்கிறேன்.ஏன் எனில் நன்றாக படித்த பலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் வாழ்வில் சுழற்றி அடிக்க பட்டத்தை நான் பார்த்து இருக்கிறேன்.ஏன் இந்த அங்காடி தெரு படத்தில் கூட வருமே 1100 மார்க் வாங்கியவன் ஜவுளி கடையில் வேலை பார்ப்பது போல்.அது கதை அல்ல நிஜம்...

குஜராத் 4 நாட் அவுட்

மே 1
என்றவுடன் நினைவுக்கு வருவது உழைப்பாளர் தினம்.
அது மட்டும் அல்ல . 1960,மே 1 -இல் குஜராத் மகாராஷ்டிரா என இரண்டாக பிரிந்தது. இது நடந்தது 50 வருடம் ஆகி விட்டது. அதனால் குஜாரத்தில் "குஜராத் 50" என்று இந்த ஆண்டு கொண்டாடினர். சரி நம்ப கதைக்கு வருவோம்.

நான் குஜராத் வேலைக்கு வந்ததும் இந்த நாளில் (மே 1 ) தான். நான் இங்கு வந்து நான்கு வருடம் ஆகிவிட்டது. இன்னும் குஜராத்தி பேச தெரியாது.(யாருடா அது ஹிந்தி மட்டும் பேச தெரியுமானு கேக்கறது..என்னோட மனசாட்சி தான பொழச்சு போ).இந்த படத்தை பார்த்த ஏதோ என் 5 வது ஆண்டு தொடக்கத்தை சொல்லற மாதிரி இருக்கு இல்ல..

ரொம்ப நல்ல ஊருங்க.. நல்ல மக்கள்..வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு மாதிரி தான் இந்த குஜராத் கூட.காந்தி பிறந்த மண்ணு , அவர் படித்த ஸ்கூல் , மது விலக்கு, IIM ahmedabad ,சோமநாத் கோவில், கிருஷ்ணர் கால் பதித்த தவ்ரக்ஹா, சுரத் சேலை & வைரம் , குஜராத் NRI ,குஜராத் மக்கள் மனசு,அவர்களின் ஷேர் மார்க்கெட் investments , அடுத்த ஸ்டேட் மக்களை ட்ரீட் பண்ணு விதம்
இப்படி எவ்வளவோ விஷயம் குஜராத் பத்தி எழுதனும்னு தோணுது
ஆனா நெறய டைப் பண்ண பண்ண கை வலிக்குது
எனக்கு வர இந்த கை வலி தானா ஆறிடும்.
ஆனா அத படித்து உங்களக்கு வரப்போற வலியை நினைக்கும்
போது டைப் பண்ண வர கை தானா நின்னுடுது.

அதானல் கொஞ்சம் கொஞ்சமாய் உங்களுக்காக
குஜராத் 4 நாட் அவுட் தொடரும்

விண்ணை தாண்டி வருவாயா - திரைப்படம்

விண்ணை தாண்டி வருவாயா - திரைப்படம்
DIRECTED BY : GOUTHAM MENON.
MUSIC BY : A.R.RAHMAN.
STAR CAST : SIMBHU, TRISHA

Story:


First love will be remains in the heart till the end.For Every girls, Her lover & Her Family are the two eyes.She Can't answer which one is best.It will vary from time to time.




Plus +++++
1.No Over Acting from Anybody Especially Simbu
2.No மசாலா
3.Love, Love & Love only

Miuns---------

1.Repeated Scene from Gowtham's previous films like
a.Song "Hosana" looks like a "Adiyae kollutha" from varnam ayiram,
b.Song "Kadal viluntha" meen looks like "Anal mela panithuli" from Varanam Ayiram
c.one song in bed room like kaka kaka,patchai kili muthucharam and all
d.Cotton saree Heroine kaka kaka,patchai kili muthucharam
e.One thing is not repeated that also went as negative.That is Harris Jeyaraj

2.Most of the places Narrating the story by back ground didn't give feel to the film

3.Repeated Dialogues like
a.எவ்வளவோ பொண்ணு இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸி யை லவ் பண்ணுன
b.எனக்கு 20 உனக்கு 21,எனக்கு 49 உனக்கு 50.எனக்கு 80 உனக்கு 81 like that.

Over all:
His Previous film Varanm ayiram was upper middle class story of
"தவமாய் தவமிருந்து" .In Same Way this VTV is upper middle class story of "அழகி"

இதயத்துள்ள கைவைக்கும் போது என் இதயம் சொன்னது:

1 .Interval வரும் பொழுது விண்ணை தாண்டி வருவாயானு படத்துல கேட்டது எனக்கு interval போய்ட்டு வருவாயானு கேட்டது
2 .படம் முடியும் போது
படத்தின் முதல் டயலாக் ஞாபகம் வந்தது "எவ்வளவோ படம் இருந்தும் நான் ஏன் இந்த படத்துக்கு" வந்தேன்.

விலை வாசி ஏற்றம்..

கடந்த ஒரு மாதத்தில் பால் 2 ரூபாய் , அரிசி 15 ரூபாய் , சிக்கன் 20 ரூபாய் அதிகமாகி உள்ளது.
விலை வாசி பற்றி சற்று யோசித்த போது எனக்கு பட்ட விஷயங்கள்..
கடந்த இரண்டு வருஷத்தில் சின்ன ஊருகளில் கூட சூப்பர் மார்க்கெட் ஆரமித்து உள்ளார்கள்.
அதுவும் ADITYA BIRLA GROUP,RELIANCE போன்ற பெரிய நிறுவனங்கள்.
மக்கள் தொகை நிறைந்த நம் போன்ற நாடுகளில் அத்தியாவசிய பொருட்கள் நல்ல வியாபார தன்மை கொண்டது.பேராண்மை படத்தில் சொல்வது போல் M-C-M முறை தான்.இது இன்னும்அதிகமாகும்.



முன்பு மேஸ்திரி வீடு கட்டுவார் இப்போது அது மறைந்து construction கம்பெனிகள் மற்றும் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் போல் வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்கள் மாறும்.
இதன் அடுத்த கட்டமாக சில பெரிய கம்பனிகள் விவசாய நிலத்தை வாங்கி விவசாயிகளை வேலைக்கு வைத்து பல உரங்களை போட்டு உற்பத்தி அதிகபடுத்தி விவசாயிகளை மாத சம்பளகாரர்களாக மாற்ற கூடும்.அன்று விவசாயிகளும் 8 மணி நேரம் வேலை + ஓவர் டைம் என்று சம்பளம் வாங்க கூடும். தொழில் போட்டியால் அப்பொழுது வேண்டுமானால் விலை கொஞ்சம் குறையலாம்.அது வரை விலை வாசி ஏறுமுகம் தான்...

Miles to go Before they Sleep..


சமீப காலத்தில் நிகழ்ந்த சில விபத்துகளான கேரளா படகு விபத்து, கோதாவரி படகு விபத்து, வேதாரணியம் பள்ளி வாகன விபத்து , கோபியில் பள்ளி செல்லும் ஆட்டோ விபத்து எல்லா விபத்துகளுக்கும் சொல்லும் ஒரு முக்கிய காரணம் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றியது.
நானும் இது போன்ற சில வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை பார்த்த பிறகு இவ்வாறு பயணம் மேற் கொள்ள கூடாது என்று இருந்தேன்.நான் முன்பு வேலை
பார்த்த Goraj என்ற இடம் பரோடாவில் இருந்து 45km தொலைவில் உள்ளது.பஸ் போக்குவரத்து மிக குறைவு.பயணம் பாதை என்பது நீங்கள் யூகிக்க வேண்டுமானால் தமிழ் MA படத்தில் வரும் "பறவையே எங்கு இருக்கிறாய் " யில் வருவது போன்று இருக்கும்.
அங்கு தான் எனது தீர்மானம் முதலில் முடிவு பெற்றதாக நான் நினைத்தேன்.

ஆனால் அது முதல் இல்லை என்று இப்போது கருதுகிறேன்.இது போன்ற விபத்து நடந்த அடுத்த சில நாட்களுக்கு நாளேடுகளில் டிராபிக் போலீஸ் சோதனை,சில பள்ளி வாகன உரிமம் ரத்து,சில ஓட்டுனர் உரிமம் ரத்து என்ற செய்தி தொடரும். ஆனால் பாருங்க நம்ம Government பஸ் இருக்கைகள் 55 + 2
என்று எழுதி இருந்தாலும் பெரும்பாலும் 55 X 2 என்று தான் இருக்கும். அங்கு தான் எனது தீர்மானம் முதலில் முடிவு பெற்று உள்ளது.




என்னை பொறுத்த வரையில் மக்கள் தொகை நிறைந்த நம் போன்ற நாடுகளில் இது போன்ற எண்ணிக்கையை கடை பிடிப்பது மிக கடினம். இது போன்ற விபத்துகளை கூட தடுப்பது கடினமே..
ஏன் எனில் பயணங்களை தவிர்க்க இயலாது..
Becaz Everybody Wish..

Miles to go Before they Sleep..But Unfortunately Some times They Sleep before reach their miles..

அகரம் வளர்ச்சியும் அதிரடி ரைடும்


சூர்யாவுடன் ஒரு கோடி ஒரு ஆரம்பம் என்ற நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்தது.

அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சூர்யா மற்றும் முருகதாஸ் வீட்டில் அதிரடி ரைடு நடந்தது
கூறித்து பலரும் என்னிடம் வருத்த பட்டனர்.இது எல்லாம் ஆளும் கட்சியின் அட்டகாசம் என்று.
தூண்டுதலின் பேரில் ரைடு நடந்ததா என்ற கேள்விக்கு பதில் கொடுக்கும் முக்கியத்துவதால்
ரைடு நடந்ததே தவறு என்று நினைக்காதீர்கள்..
என்னை பொறுத்த வரை ரைடு நடந்ததில் எந்த தவறும் இல்லை.

தமிழ் வழி கல்வி

மின்னழுத்தமானி - POTENTIOMETER
தனி ஊசல் - SIMPLE PENDULUM
விடுபடு திசைவேகம் -ESCAPE VELOCITY
பாதரசமானி - HYGROMETER
காந்த புல செறிவு -MAGENETIC FLUX
...........
........
பகுமுறை வடிவியல் -ANALYTICAL GEOMETRY
பகா எண்கள் - PRIME NUMBERS
கர்ணம் - ??
........
.......
கரிம - ORGANIC
வினையூக்கி - CATALYST
மூலக்கூறு - MOLECULE
.....
....
மேலே உள்ள அட்டவணை தமிழ் வழி கல்வியில் படித்த ஒவ்வொரு மாணவனும் தன் மனதில் 12 -ம் வகுப்பு முடித்து கல்லூரி படிக்கையில் போடும் அட்டவணை தான்.
அறிவியல் பாடங்களை தமிழ் வழி கல்வியில் பயில்வது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக பலரும் கருதுவது இயல்பு.
உடனே "தாய் மொழியில் தான் ஜப்பான்ல படிக்கிறாக...நம்ப சீனாவுல படிக்கிறாக" என்று யாராவது உங்களிடம் சொல்ல கூடும்.
அவர்களிடம் கேளுங்கள் உங்கள் மகன் எங்க படிக்கிறாக..இல்ல உங்க பேர பிள்ளைக எங்க படிக்கிறாக... என்று.
ஏன் ஒருவருக்கு மட்டும் எல்லார் மத்தியில் நல்ல செல்வாக்கு என்றால் அவர் பன்மொழி வித்தகர் அதனால் தான் என்று பாராட்டு பத்திரம் தருகிறார்கள்.
ஹிந்தியை ஏன் எதிர்த்தீர்கள் என்றால் ஹிந்தியை எதிர்க்கவில்லை ஹிந்தி திணிப்பை தான் எதிர்த்தோம் என்றும் விளக்கமும் சொல்லும் ஊரு இது.
தமிழ் மொழி மாநாடு... தமிழ் செம்மொழி மாநாடு...மயிலாடு.. என்று பார்த்து கொண்டிராமல்

போங்கயா போங்க போயி புள்ள குட்டிகள படிக்க வைங்க..
மறக்காம இங்கிலீஷ் மீடியத்துல படிக்க வைங்க ..
நான் சொல்வதெல்லாம் ரொம்ப சிம்பிள்
தமிழை வாழ்கைக்காக படிங்க..
இங்கிலிஷ வருமானத்துக்காக படிங்க...


பின் குறிப்பு:(இந்த பதிவை தமிழுக்கு எதிரானதா நெனைக்காதிங்க..ஆங்கிலத்தில் படித்து தமிழ் மொழியிலும் அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டால் நன்று.)

GLOBAL WARM(N)ING


GLOBAL WARM(N)ING
இப்போது இது ஒரு பிரபலமான வார்த்தை
26 /11 என்றதும் நினைவுக்கு வருவது மும்பை தாக்குதல்...
26 /12 /2004 , 26 /01 /2001 என்றதும் நினைவுக்கு வருவது ?????.
பலருக்கு தெரியாது
26 /12 /2004 --------> சுனாமி.
26 /01 /2001 --------> குஜராத் நில நடுக்கம்.
26 /11 தாக்குதலில் பலி எண்ணிக்கை 150 முதல் 200 வரை..
சுனாமி & நில நடுக்க நிகழ்வில் பலி எண்ணிக்கை பல ஆயிரத்தை தாண்டும்..
நீலகிரி நிலசரிவு ,கர்நாடகா , ஆந்திரா வெள்ள தாக்குதல் என நீளும் இயற்கையின் தாக்குதல்..
பத்திரிகைகளும் சரி நாமும் சரி
26 /11 நினைவு நாள் நிகழ்வுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பிற இரு நிகழ்வுகளுக்கு
கொடுப்பதில்லை.ஏன் ???
தீவிரவாத தாக்குதல் மூன்றாவது நபர் செய்தது..செய்வது...
மற்ற இரண்டிலும் நமது பங்கும் கொஞ்சம் உள்ளது அதனால் தான்..

Copenhagen மாநாட்டில் வளர்ந்த நாடுகள் வளரும்
நாடுகளை புறக்கணிப்பதாய் கூறி வெளி வந்த நம் நாடு கூட என்ன செய்யும்.

தாஜ் மஹால் பக்கம் வசிப்பவர்கள் மண்ணெண்ணெய் உபயோகிக்க கூடாது என்று
கூறி விட்டு அதன் பக்கத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய five star ஹோட்டல்
இரண்டு திறக்க அனுமதி வழங்கும்.
ஒரு டிவிஎஸ்-50 இல் வரும் நடுத்தர வர்க ஆசாமியிடம் டிராபிக் போலீஸ் pollution control certificate - இல்லை என்று லஞ்சம் கேட்க வழி வகுக்கும்.
சரி நாட்ட விடுங்க.. நான் என்ன செய்யலாம்
மரம் வைத்து தினம் தண்ணீர் ஊற்ற முடியாது...
பிளாஸ்டிக் use செய்யாமலே இருக்க முடியாது..
எல்லா இடத்துக்கும் நடந்தே செல்ல இயலாது...
என்று யோசித்த படியே நடக்கையில் கையில் படுகிறது ஒரு சின்ன மரத்தின் கிளை..
எப்பொழுதும் சடக் என்று ஒடித்து விடும் வழக்கம் கொண்ட எனக்கு அதை இப்பொழுது ஏனோ ஒடிக்க எனக்கு மனம் வரவில்லை...
இது கூட copenhagen மாநாட்டின் ஒரு வெற்றியாக இருக்கலாம்...

பின் குறிப்பு:(நான் பல முறை என் உடன் பணி புரிந்த பிரசன்னாவை கடுப்பேத்த அவன் கண் முன்னால் அவன் வளர்த்த செடிகளை கிள்ளி இருக்கிறேன். Sorry பிரசன்னா... )

விருதுகள் 2009

Happy New Year to all of you..Happy Year Ahead


1.சிறந்த அறிமுக நாயகன் : மு.க. அழகிரி
(மக்களவை தேர்தலில் அறிமுகத்தின் போதே எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறியது,மக்களவையில் தமிழ் மொழியில் பேசுவதற்காக போராடுவதாலும் இவ்விருது இவருக்கு செல்கிறது)
2.சிறந்த டபுள் ஆக்சன் : மத்திய அரசுக்கு (இலங்கை சண்டை, தெலுங்கனா, மும்பை பிற
மாநிலத்தார் தாக்குதல், நுட்ரினோ மையம் ,மலேசிய தமிழர்
பிரச்சனை போன்ற விசயங்களில் இரட்டை வேடம் போட்டதற்காக இவ்விருது இவருக்கு செல்கிறது)
3.சிறந்த நாயகி : சோனியா காந்தி (தனி ஒரு மனிதராக இருந்து மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிக்கு வித்திட்டதாலும், தனது கணவரை கொன்ற விடுதலை புலிகள் இயகத்தை தந்திரமாக பலி வாங்கியதாலும் இவ்விருது இவருக்கு செல்கிறது)
4.சிறந்த வில்லன் : மஹிந்த ராஜபட்கச்சே
(விடுதலை புலிகள் இயகத்தை அழிகின்றேன் என்று கூறி பல குழந்தைகளையும் அழித்து கொன்றமைக்காக இவ்விருது இவருக்கு செல்கிறது)
5. சிறந்த ஸ்டன்ட் : மு.கருணாநிதி
(5 மணி நேர உண்ணா விரதத்தில் இலங்கை சண்டையை நிறுத்தியதாக
அவரே கூறி கொன்றமைக்காக இவ்விருது இவருக்கு செல்கிறது)
6 .சிறந்த திருப்புமுனை : ப. சிதம்பரம் & ஜெ.ஜெயலலிதா ( முதல யார் முதல் வர்றாங்கறது முக்கியம் இல்ல கடைசில யார் முதல் வர்றாங்கறது தான் முக்கியம் என்று ப.கண்ணப்பனுக்கு தேர்தல் வெற்றியில் உணர்த்தியதற்காக இவ்விருது ப. சிதம்பரம் செல்கிறது, இலங்கை பிரச்சனை குறித்த தனது நிலயை மாற்றியதற்காக இவ்விருது ஜெ.ஜெயலலிதாக்கும் செல்கிறது )
7 .சிறந்த நாயகன் : மு.க.ஸ்டாலின்
(படிப்படியாக வளர்ந்து துணை முதல்வர் பதவிக்கு வந்துள்ளதாலும் ,
அண்ணன் அழகிரிக்கு ஒரு விருது கொடுக்கபட்டுள்ளதாலும் இவ்விருது இவருக்கு செல்கிறது)
8 . சிறந்த வாழ்நாள் சாதனையாளர்: Dr .Y.S.ராஜ சேகர ரெட்டி
(ஊரில் மட்டும் அல்லாது மக்கள் மனதிலும் பாலம்
கட்டியவர்.பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும்)

9. சிறந்த இயக்குனர் : மு.கருணாநிதி
(தனது சூரிய குடும்பத்தில் சுற்றி உள்ள உள்ள ஸ்டாலின், அழகிரி ,கனிமொழி,கலாநிதி,தயாநிதி,ராஜாத்திஅம்மாள்,தயாளு அம்மாள், தி.மு.க கட்சி,தமிழக ஆட்சி என்ற 9 கோள்கள் அனைத்தையும் சிறப்பாக இயக்குவதால் இவ்விருது இவருக்கு செல்கிறது)



10. சிறந்த blogspot :பாதையும் பதிவும்
(தனக்கு தானே விருது வழங்கி கொள்ளலாம் என்று அண்ணா விருதை காஞ்சிபுரம் விழாவில் தனக்கே வழங்கி கொண்டும், சிறந்த வசனகர்தா என்று தமிழக அரசின் விருதை தனது உளியின் ஓசை படத்திருக்கு வழங்கி கொண்டும் நமக்கு எடுத்து காட்டை இருந்த கலைஞருக்கு நன்றி)


பின் குறிப்பு : பெரும்பாலான விருது கலைஞர் & கோ - விருக்கு செல்ல காரணம் நல்ல போட்டியாளர்கள் இல்லாதது தான்.
ஜெ.ஜெயலலிதா அவர்களும் பல மாதம் காணமல் போனவர் பட்டியலில் இருந்ததும் காரணமாக கூறப்படுகிறது.

அவஸ்த்தையில் ஒரு கடிதம்


மதிப்பிற்குரிய மன்மோகன் ஐயா,

உங்கள் அமைச்சரவையில் உள்ள ப.சிதம்பரம் அவர்கள் தனது பழைய நிதி துறை போலவே உள் துறையையும் பார்க்கிறார்.சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்தால் ஒரு பிரஸ் மீட்
வைப்பார் பின்பு நிலைமை சரி ஆகிவிடும்.அது போல உள்துறையையும் கவனிக்கிறார்.எனக்கு ஒரு கதை ஞாபகம் வருது ,
ஒரு மாணவன் " எனது நண்பன்" என்ற தலைப்பில் கட்டுரை படிக்க பரிட்சையில் வந்ததோ "எனது தந்தை " உடனே அவன் தான் படித்த கட்டுரையில்
வரும் நண்பன் என்ற இடத்தில எல்லாம் தந்தை என்று எழுதி விட்டானாம்.
"எனக்கு பல அப்பாக்கள் இருக்கிறார்கள்.எனக்கு மிகவும் பிடித்த அப்பா பக்கத்துக்கு வீட்டுக்காரர் ......".அது போல ப.சிதம்பரம் தினம் தினம் மாறி மாறி நடந்து கொள்கிறார்.
பிரதமரே உங்களுக்காக ஒரு குறள்

நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்ப செயல்


நான் உங்களை வேண்டுவது தெலுங்கனா விசயத்தில் ஒரு இறுதியான உறுதியான முடிவை எடுங்கள்.இல்லாவிடில் சோனியாவிடம் கேட்டாவது எடுங்கள்.

இப்படிக்கு
1 .Osmania unviersity -இல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவன்.
2 .தெலுங்கனா பகுதியில் கடை வைத்துள்ள கடலோர ஆந்திரா பகுதி வியாபாரி.
3 .பொங்கல் விடுமுறைக்கு ஆந்திரா + தெலுங்கனா கடந்து செல்ல
வேண்டி உள்ள ஒரு ரயில் பயணி

தங்கத்தை காதலிக்கும் ஆண்களா இங்கு இல்லை


சமீபத்தில் டிவி -ல் பார்த்த ஒரு நகைக்கடை விளம்பரம், விவேக் நடிப்பது, வீட்டை காலி செய்து கொண்டு நகை வாங்க போவார், காரணம் 4 வீடுகள் முதல் பரிசாம். அது உண்மையா இல்லையா , அது முறையாக கிடைக்குமா? என்பதை விட வீடு வாங்கினால் ஒரு கிராம் தங்கம் என்பது போய், தங்கம் வாங்கினால் வீடு என்று சொல்லும் அளவுக்கு தங்கம் விலை உயர காரணம் " தங்கத்தை காதலிக்கும் பெண்களா இங்கு இல்லை" என்பது போயி பணத்தை முதலீடு செய்ய "தங்கத்தை காதலிக்கும் ஆண்களா இங்கு இல்லை" என்று மாறி உள்ளது தான்.

தெலுங்கானா!!! தெலுங்கானா???

அட டே தெலுங்கானா உருவாகி விட்டது என்று ஆச்சிர்யதோடு பார்த்தவர்கள் கூட இப்போது அட டா அது உருவாகுமா என்று கேள்வி குறியோடு இருக்கிறார்கள்.என்னை பொறுத்த வரை அது உறுதி ஆகிவிட்டதாக தான் தெரிகிறது.இப்போதே எல்லா கட்சியும் இரண்டாகி விட்டது.மக்களும் இரண்டாகி விட்டார்கள்.இன்னும் மாநிலம் அதிகார பூர்வமாகா பிரிப்பது மட்டும் தான் பாக்கி.
ஒரு தரப்பு கூடாது என்று கோசம் போட்டாலும் இவர்கள் பாதி பேரு YSR இறந்த பிறகு கூட அமைச்சர் வேண்டாம் என்று கூறியவர்கள் இப்போது அமைச்சர் ஆகி விட்டார்கள். ஒரு விவாகரத்து வழக்கில் கணவன் மனைவி இருவரில் ஒருவர் விருப்பம் இல்லை என்றாலும் பிரிவு என்பது உறுதி.சற்று கால தாமதம் ஆகும் அவ்வளவு தான்.ஒரு தரப்பு வேண்டாம் என்று கூற காரணம் ஒரு நகரம் அது ஹைதராபாத்.இரு ஆறுகள் கிருஷ்ணா & கோதாவரி.முதல் முறையாக பிரிக்கும் புது மாநிலத்துடன் போகிறது தலை நகர். இது எதிர்க்கும் தரப்பு MLA ,MP -க்கு பெரிய பொருளாதார இழப்பு.
பிரியும் தெலுங்கானா இரு ஆறுகள் கிருஷ்ணா & கோதாவரி மீது அணை கட்டினால் அது கடலோர ஆந்திரா-வை பெரிதும் பாதிக்கும்.

பிரிப்பதற்கு முன்பு யோசிக்க வேண்டியவை.
1 .எது புதிய தலைநகர் - Viskapatnam ,Vijayawada ,Tirupathi
Viskapatnam என்றால் அது ஒரு ஓரத்தில் இருப்பதால் மீண்டும் ராயலசிம்மா புறகணிக்க படுகிறோம் என்று பிரிவு கோர வாய்ப்பு உள்ளது.
Tirupathi என்றால் அது ராயலசிம்மா பகுதயில் இருப்பதால் கடலோர ஆந்திரா மீண்டும் ஒரு தலை நகர் இழக்க வேண்டி வருமோ என்று பயந்து அதை ஏற்காது.என்னை பொறுத்தவரை விஜயவாடா என்பது நன்று.அங்கிருந்து நான்கு பெரிய நகரங்களை (Chennai,Viskaptanam,Banglore,Hyderabad) எளிதில் அடைய முடியும்.
2.நதி நீர் பங்கீடு
இந்தியா பாகிஸ்தான் சிந்து நதியை பங்கு போட்டு கொள்கிறோம்.அதில் பெரிய பிரச்சனை இல்லை.
ஆனால் எல்லா மாநிலத்தோடும் நதியை பங்கு போட்டு கொள்ளுவதில் பிரச்சனை அதிகமாக உள்ளது என்பது நாம் அறிந்ததே.
என்னை பொறுத்தவரை எவ்வாறு நதி நீர் பங்கீடு,அனை கட்டுவது பற்றி பிரிவுக்கு முன்பே முடிவு செய்ய வேண்டும்.
3 .இன்னும் எத்தனை மாநிலங்கள்?
மாநிலங்கள் பிரிப்பது தொடர்பாக ஒரு உறுதியான சட்ட வரைமுறை தேவை.உண்ணாவிரதம் இருந்தால் மாநிலம் என்றால் 2020 -இல் மாநிலம் இருக்காது .குறுநிலம் தான் இருக்கும்.

காங்கிரஸ் என்ன செய்ய போகிறது?
இறைவா
வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!

விஜயின் பாதை - ஒரு பார்வை

நாளை விஜய்-இன் புது படம் வேட்டைக்காரன் வெளி வருகிறது.இந்த படத்தின் இயக்குனர் பாபு சிவன் மற்றும் புது கதாநாயகி என்பது மட்டுமே மாறுதலாக இருககும் என்று தோன்றுகிறது.இது கூட எனக்கு சற்று ஆறுதலாக தான் தெரிகிறது.ஏன் எனில் அவர் சமீப காலத்தில் நடித்த படங்களான வில்லு, அழகிய தமிழ் மகன், குருவி,ஆதி,சிவகாசி, போக்கிரி, திருப்பாச்சி, கில்லி போன்ற படங்களில் கதாநாயகி மற்றும் இயக்குனர்கள் பற்றி கேள்வி கேட்டால் நம்மில் பல பேர் சற்று குழம்பித்தான் போவோம். ஏன் எனில் நாலு படத்தில் கதாநாயகி திரிஷா இரு படத்தில் அசின் , இரு படத்துக்கு இயக்குனர்கள் பிரபு தேவா, இரு படத்திற்கு தரணி, இரு படத்திற்கு பேரரசு யார் எந்த படம் என்பது நமக்கு குழப்பம் வருவது இயல்பு. அவர் இடையில் நடித்த சற்று மாறுதலான படம் சச்சின் அதுவும் வணிக ரீதியாக பெரிய லாபம் கிட்டாததால் மீண்டும் தனது பழைய பாணிக்கு வந்து விட்டார். மசாலா படங்களை மட்டும் கொடுத்து வெற்றி பெறுவது என்பது மிக கடினமான விஷயமே. பிறகு அது விஜய்க்கு மட்டும் தெரிந்த வித்தையோ?



கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு விஜய் படத்தின் ரிலீஸ்-in போதும் திட்டமிட்டோ அல்லது எதேச்சையாகவோ எப்பொழுதும் சில forward message அவர் புது படத்தை தாக்கி வருவது வாடிக்கையாகிவிட்டது.இது எனக்கு சரியாக படவில்லை.பல ஹீரோக்கள் இதை தான் செய்கிறார்கள் பிறகு ஏன் விஜயை மட்டும் தாக்குதல் நடத்துகிறார்கள்.விஜய் தன் உடல் வாகை இன்னும் அப்படியே வைத்து உள்ளார் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.இந்த message-ai forward செய்யும் பலபேர் இப்போதே "நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட" என்ற படலை முனு முணுக்க தொடங்கி விட்டதால் வேட்டைக்காரன் நல்ல வசூல் வேட்டையில் இறங்குவான் என்பது எனக்கு இப்போதே தெரிகிறது.ஆனால் இத்தனை மசாலாக்கள் விஜய்க்கு எப்படி போர் அடிக்காமல் உள்ளது என எனக்கு புரியவில்லை

Masala- வை நாம் அதிகமாக விரும்புகிறோம் என்பது இயல்பு. அது உணவில் என்றாலும் சரி படத்தில் என்றாலும் சரி. நம்மில் பல பேர் பழைய சோறு சாப்பிட விரும்புவது அதன் உடன் உள்ள ஊறுகாய் அல்லது உரிச்ச வெங்காயத்திர்க்காகதான். நாம் சாப்பாட்டை விட சமோசாவை தான் அதிகமாக விரும்புகிறோம்.அது உடல் நலத்திற்கு கெடுதல் என்றாலும் கூட. இல்லை என்பவர்கள் தங்கள் இடுப்பளவை பாருங்கள் உண்மை புரியும்.

ஆம் விஜய் நம்மை போல் ஒருவன் தான் (Fw: Nammai Pol Oruvan )

விஜய் நீங்க கலக்குங்க சித்தப்பு ...ஆனா ஒன்னு சொல்றேன் கேளுங்கோ விஜய்

வாழ்கை ஒரு வட்டம் Mass (மசாலா) படம் நட்சவன் class (classical ) படம் நடிச்சு தான் ஆகனும்.

அத நாங்க புரிஞ்ச்கிட்டோம் நீங்க சீக்ரமே புரிஞ்சுபீங்கோ..

Popular Posts