.
(Photo Courtesy:Mr.Muthulingam,Hyderabad)
சுய முன்னேற்றம் குறித்த புத்தகம் படிப்பதை நானும் அவவ்போது செய்து வருகிறேன்.அதை படிக்கும் போது எதோ நாளை முதல் இதன் படி நடந்தால் வெற்றி நமதே என்பது போல் தெரியும்.ஆனால் அது படித்த பிறகு தான் மிக்க பெரிய குழப்பமே ஆரம்பம் ஆகும் எனக்கு..
சில புத்தகம் "ஒரு விஷயத்தை பற்றி தெரியாம அந்த விசயத்தில் இறங்க கூடாது" என்பது போல் அறிவுரைகள் சொல்லும்.இறுதியில் ஆழம் தெரியாம காலை விட கூடாது என்பது போல் அதன் கருத்து இருக்கும். ஓகே என்று ஒரு விசயத்தை செய்வதற்கு முன் அதன் பற்றி அறிய முற்பட்டால் அதில் உள்ள ரிஸ்க் பற்றி தெரிந்து வேண்டாம் என்று முடிவு செய்வேன்.அப்போது அடுத்த ஒரு தலைப்பில் சொல்லப்பட்ட " லைப்-ல ரிஸ்க் எடுக்காட்டி ஜெயிக்க முடியாது என்று இருந்தது ஞாபகம் வரும்.இப்ப மறுபடியும் குழப்பம் ஸ்டார்ட் ஆகிவிடும் ..இதுல எது சரின்னு என்று மண்டய பிச்சுக்க வேண்டி இருக்கும்.
சரி இது பற்றி நம்ப நண்பர்களிடம் அல்லது பெரியவர்களிடம் முழு கதையை சொல்லி அறிவுரை கேட்டா அவங்க Take Calculative Risk அப்படின்னு ஒரு புது வார்த்தையை சொல்லி இன்னும் குழப்பிடுவாங்க.
Calculative risk எப்படி எடுக்கனும்? ? நான் எடுக்கற Calculative risk சரியானு எப்படி தெரியும்? போன்ற கேள்விக்கு பதில் தெரியாம நான் முழிச்சுகிட்டு இருப்பேன்..
அப்பறமா ஒருத்தன் " நீ ஜெய்சிட்டா அது சரியான Calculative risk.இல்லாட்டி அது தப்பான Calculative risk " அப்படின்னு பொசுக்குனு சொல்லிப்புட்டான் பாவி பய புள்ள..
இது தெரியாம மதில் மேல் பூனை மாதிரி இருந்த நான் ஒரு முட்டாளுங்க ...
இ(எ)துவும் கடந்து போகும் என்பது தத்துவம்... இ(எ)தையும் கடந்து போவேன் என்பது நம்பிக்கை ... Miles to Go Before I Sleep...
பதிவுகளின் பிரிவுகள்
- சொந்த கதை(சுய புராணம்) (24)
- கவிதை (23)
- பார்வைகள் பல விதம் (19)
- சத்தம் போட்டு சொல்லாதே (10)
- நண்பர்களின் படைப்புகள் (10)
- அம்மாவும்அப்பாவும்நாங்களும் (5)
- கருத்து கணிப்பு (5)
- பாதித்ததும் பதிந்ததும் (5)
- யாரோ சொன்னாக (5)
- அவன் அவள் மற்றும் காதல் (4)
- Medical Physicis (2)
- உள்ளம் கொள்ளை போகுதே (2)
- என் (கேள்வி) பதில் (2)
- சிறு கதை (2)
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
படிக்கும் போது புவியல் பாடத்தில் 5 மார்க் வாங்குவதற்காக உலக வரைபடத்தை முதன் முதலில் பார்த்தது. அதன் பிறகு நம் நண்பர்கள் வெளி நாட்டில் எங...
-
(முன் குறிப்பு :என் ஆயாவின் நினைவு நாள் 14.01.2006.அதன் நினைவாய் ஒரு நினைவு அஞ்சலி ) அறிமுகம் என் ஆயா பெயர் சின்ன குட்டி நான் தான் அவளின் செ...
-
சமீபத்தில் நான் எனது உறவினர் ஒருவரிடம் பேசி கொண்டு இருந்த போது அவர் எதேட்சையாக கேட்டார். நீ என்ன வேலை பார்க்கிறாய் என்று... அந்த உரையாடல...
No comments:
Post a Comment