Medical Physicist - மருத்தவ இயற்பியலார் - Part I


சமீபத்தில் நான் எனது உறவினர் ஒருவரிடம் பேசி கொண்டு இருந்த போது
அவர் எதேட்சையாக கேட்டார். நீ என்ன வேலை பார்க்கிறாய் என்று...
அந்த உரையாடல் கீழே இதோ

நான்:மெடிக்கல் ப்ய்சிசிஸ்ட்

என் உறவினர்:அப்படினா என்ன வேலை..கொஞ்சம் புரியர மாதிரி சொல்லுபா..

நான்:(ஆரமிபிச்சுடாங்காய ஆரமிபிச்சுடாங்க என்று நினைத்த படியே)கான்சர் நோயாளிகளுக்கு radiation -ல் எப்படி ட்ரீட் பண்றதுன்னு நாங்க பிளான் பண்ணுவோம்.

என் உறவினர்: ஒன்னும் வெளங்கலையே...என்னமோ பெரிய படிப்பு பெரிய வேலைன்னு சொன்னங்க..ஆனா நீ என்னடானா என்ன படிச்சேன் கூட சொல்ல தெரியாம தடுமாற..இந்த காலத்து பசங்களுக்கு எதையும் பட்டுனு சொல்ல தெரியல..

நான்: அதாவது கான்சர் வந்தா radiation இல்ல!! இல்ல!!(அவருக்கு புரிய வேண்டும் என்று) கரண்ட்டு குடுப்பாங்க அப்படின்னு சொல்லுவாங்க இல்லையா..அதுல...

என் உறவினர்: (என்னை இடை மறித்து) ஆமா ஆமா நம் முத்துசாமிக்கு கூட முப்பது நாள் போய் கரண்ட்டு வச்சாங்க..அந்த கரண்ட்டு வைக்கிற வேலைன்னு சொல்லு.

நான்: இல்லைங்க அவங்க எங்களுக்கு கீழ் வேலை பார்க்கும் Technologist. நாங்க அவங்களுக்கு எவ்ளவு நேரம் radiation இல்ல இல்ல கரண்ட்டு,அப்பறம் அந்த கரண்டை எப்படி குடுக்கணும்னு சொல்லுவோம்.
என் உறவினர்: அப்பா நீ டாக்டரா..


நான்:(இப்பவே கண்ணை கட்டுதே என்று நினைத்து படி) இல்லைங்க டாக்டர் எங்களுக்கு கரண்டை எங்க எவ்வளவு கொடுக்கணும்னு சொல்லுவாங்க..நாங்க கரண்டை எப்படி எவ்வளவு நேரம் கொடுக்கணும்னு டாக்டர்-க்கு அச்சிஸ்ட்(assist) பன்னுவோம்.

என் உறவினர்: அட டாக்டர்க்கு அச்சிஸ்ட்டன்ட் அப்படினா கம்பவுண்டர்னு சொல்லு..

நான்: இல்லைங்க நாங்களும் டாக்டர் மாதிரி தான் ஆனால் டாக்டர்க்கு கொஞ்சம் கீழ்.. புரிஞ்சதுங்களா...

என் உறவினர்: லைட்டா புரிஞ்சது...முழுசா புரியல..

நான்:அப்பாட லைட்டாவது புரிஞ்சதே..

என் உறவினர்:நீ மினி டாக்டர் வேலை பாக்கிற...கரெக்டா ..

நான்: கரெக்ட்டு தான் ஆனா...

என் உறவினர்: என்ன ஆனானு இழுக்ற..எதாவது தப்புனா சொல்லுபா

நான்:(மறுபடியும் முதல் இருந்தா என்று பயந்து) இல்லங்க கரெக்ட் தான்..ரொம்ப கரெக்ட் என்றேன்.

பின் குறிப்பு: மெடிக்கல் ப்ய்ச்சிஸ் (Medical Physics ) படிச்ச நாங்க ஒரு உண்மை சொல்லி ஆகணும்...
நாங்க மெடிக்கல் ப்ய்ச்சிஸ் (Medical Physics ) படிக்க பட்ட கஷ்டத்தை விட என்ன படிச்சோம்னு மத்தவங்க கிட்ட சொல்லி புரிய வைக்க ரொம்ப கஷ்ட படுறோம்.


இருந்தாலும் தொடர் பதிவின் மூலமாக Medical Physicist என்னவென்று சொல்லியே தீருவேன்.அதுக்கு அப்பறம் யாராவது நீ என்ன படிச்சு இருக்காய் என்று கேட்டால் கீழ் உள்ள படத்தில் உள்ளது போல் பதில் சொல்லுவேன்

4 comments:

  1. இது போன்ற அனுபவம் மருத்துவ இயற்பியல் படித்த அனைவரது வாழ்கையிலும் ஒரு முறை அல்ல, பலமுறை நடந்திருக்கும்; நடக்கும்.

    முதல் படம் அனைத்தையும் பேசுகிறது!

    ReplyDelete
  2. ரொம்ப கஷ்ட படுற போல.. material science.. தோழரிடம் யோசனை கேளும்..

    ReplyDelete
  3. தேவன் கிருஷ்ணமுர்த்திAugust 12, 2010 at 6:26 AM

    ha haaa.. உண்மை உண்மை முற்றிலும் உண்மை. இது மாதிரி தான் நான் டாக்டரத்ட் (doctorate) என்பதை புரிய வைக்க படாத பாடுப்படேன். இப்போது நான் "Dr" என்று சொல்வது இல்லை "Scientist"!!!!

    ReplyDelete
  4. Ha ha ha...நம்பாளுங்க அனைவருக்கும் 100% இந்த சம்பவம் நடந்து இருக்கும் சார்... நல்ல பதிவு சார்....

    ReplyDelete

Popular Posts