
நம் எல்லாருக்கும் தெரிந்த ஒரு கதை,ரொம்ப தேய்ந்த ஒரு கதையும் கதை கூட.
பாட்டி வடை சுட்ட கதை.இந்த கதையில் இறுதியில் நரி காக்கையை ஏமாற்றி வடையை பறித்து விடுவது போல அமையும்.
நீங்கள் என்றாவது யோசித்து உண்டா நரி ஏன் இந்த கதையில் என்று?.ஒரு நாய் , பூனை என்று வைத்து கூட கதை புனைய பட்டிருக்கலாம்.நரியை ஏமாற்றும் விலங்கு என்று காட்ட வேண்டிய அவசியம் என்ன? இந்த கேள்விக்கான பதில் பின் வரும் கேள்வியில் தான் உள்ளது.நீங்கள் சர்கஸில் எங்காவது நரியை பார்த்தது உண்டா?.பாம்பு கீறி சண்டை போல் எங்காவது நரியை வைத்து வித்தை காட்டுவதை பார்த்து உண்டா? பார்த்து இருக்க வாயப்பு இல்லை.காரணம் நரியை நீங்கள் அவளவு சீக்கரம் ஏமாற்றி பழக்க படுத்த முடியாது. சிங்கம் , புலி , யானை, பாம்பு போன்ற பெரிய விலங்குகளை கூட கொஞ்சம் சீக்கரம் பழக்க படுத்த முடியும். தன்னால் ஏமாற்ற முடியாத நரியை ஏமாற்றும் விலங்காக நாம்(மனிதன்) சித்தரித்து விட்டோம்.இதன் அடுத்த கட்டமாய் நாம் சொல்லவதை கேட்காதவனையும் அவன் நரி மாதிரி என்று சொல்ல ஆரம்பித்து விட்டோம்.நாம கலக்கரோம் இல்ல
இதற்கு மனிதனோட அகராதியில் பல பெயர் இருக்கு.அது என்னன்னா Sixth Sense , தந்திரம் , Diplomacy, Politics and etc.
No comments:
Post a Comment