உறவினர் வீட்டுக்கு வந்து திரும்ப தயார் ஆனார்கள் சிவா மற்றும் ஒரு தனியார் வங்கியில் பணி புரியும் அவனது அம்மா.
வாசலை கடந்ததும் ஒரு பூனை குறுக்கே வர மன ஊளைச்சலுக்கு உள்ளான தாய் சிவாவிடம் " வாடா, வீட்டிக்கு போய் தண்ணீ குடித்து விட்டு போலாம்." என்றாள்.
அம்மாவின் பேச்சால் கடுப்பான சிவா அது ஒரு மூட நம்பிக்கை என புரிய வைக்க வாக்கு வாதம் செய்தான்.கடைசி வரை புரியாத அம்மாவை நினைத்து சிரித்த படியே அவ்வாறே செய்து மீண்டும் ஊருக்கு கிளம்பினார்கள்.
அன்று மாலை சிவா தன் வீட்டில் கிரிக்கெட் மேட்ச் பார்த்த படி அமர்ந்திருந்த வேலையில் அவனது நண்பன் வந்தான்.
"என்னடா சிவா எப்படி இருக்க ? ஜாப் எல்லாம் எப்படி போவுது ?" என்றான் அவனது நண்பன்.
"fine டா" என்றான் சிவா.
" வா பா எப்படி இருக்க ? ஏன் இப்ப எல்லாம் இங்க வர்ரதே இல்ல ?" என்ற படியே வந்தாள் சிவாவின் தாய்.
"இல்ல ஆன்டி ,கொஞ்சம் பிஸி அதான்... என இழுத்த படியே,
சிவா, What about match da ? ". என்றான் அவனது நண்பன்.
"Touch wood India is playing fine upto now , sachin is 97" என்றான்.
அவன் சொன்னதை மீண்டும் ஒரு முறை சொல்லி பார்த்தாள் சிவாவின் தாய்.
"Touch wood India is playing fine upto now , sachin is 97" என்றான்.
காலையில் தன்னிடம் மூட நம்பிக்கை பற்றி வாக்கு வாதம் செய்த தன் மகன் தானே ஒரு (மூட) நம்பிக்கையை தனக்கே தெரியாமல் நாகரிக தோனியோடு "Tocuh wood " என கூறியதை நினைத்தும் வார்த்தைகள் தான் இங்கு மாறுகிறது நம் நம்பிக்கைகள் அல்ல என நினைத்து கொண்டும் மனதுக்குள் சிரித்த படியே அவனிடம் வாக்கு வாதம் ஏதும் செய்யாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.
இ(எ)துவும் கடந்து போகும் என்பது தத்துவம்... இ(எ)தையும் கடந்து போவேன் என்பது நம்பிக்கை ... Miles to Go Before I Sleep...
பதிவுகளின் பிரிவுகள்
- சொந்த கதை(சுய புராணம்) (24)
- கவிதை (23)
- பார்வைகள் பல விதம் (19)
- சத்தம் போட்டு சொல்லாதே (10)
- நண்பர்களின் படைப்புகள் (10)
- அம்மாவும்அப்பாவும்நாங்களும் (5)
- கருத்து கணிப்பு (5)
- பாதித்ததும் பதிந்ததும் (5)
- யாரோ சொன்னாக (5)
- அவன் அவள் மற்றும் காதல் (4)
- Medical Physicis (2)
- உள்ளம் கொள்ளை போகுதே (2)
- என் (கேள்வி) பதில் (2)
- சிறு கதை (2)
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
படிக்கும் போது புவியல் பாடத்தில் 5 மார்க் வாங்குவதற்காக உலக வரைபடத்தை முதன் முதலில் பார்த்தது. அதன் பிறகு நம் நண்பர்கள் வெளி நாட்டில் எங...
-
(முன் குறிப்பு :என் ஆயாவின் நினைவு நாள் 14.01.2006.அதன் நினைவாய் ஒரு நினைவு அஞ்சலி ) அறிமுகம் என் ஆயா பெயர் சின்ன குட்டி நான் தான் அவளின் செ...
-
சமீபத்தில் நான் எனது உறவினர் ஒருவரிடம் பேசி கொண்டு இருந்த போது அவர் எதேட்சையாக கேட்டார். நீ என்ன வேலை பார்க்கிறாய் என்று... அந்த உரையாடல...
No comments:
Post a Comment