மிக சரியாக 30 வருடங்களுக்கு முன் , 1991-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரம்...
காட்சி 1: அப்பா செய்த புதிய தொழில் கொஞ்சம் நல்ல வருமானம் தர தொடங்கி இருந்த நேரம்,
எனது தாய் மாமா எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார்..
அப்பா மாமாவிடம் நீங்க கல்யாணத்துக்கு போட்ட நகை எல்லாத்தையும் கடந்த பத்து வருடத்தில் விற்று விட்டேன். இப்பதான் கொஞ்சம் காசு சேர்ந்து இருக்கு, நண்பர்களிடம் 10000 ரூபாய் கொடுத்து வைத்து இருக்கிறேன். அதை இன்னும் ஓரிரு மாதத்தில் வாங்கி தருகிறேன், முதலில் செயினோ/வளையலோ வாங்கி விடலாம் என்றார்.
காட்சி 2: நானும் அப்பாவும் வாடகை சைக்கிளில் சென்று கொண்டு இருந்தோம். அவருக்கு numberology -இல் ஆர்வம் உண்டு வழியில் எந்த வண்டியை பார்த்தாலும் அதன் நம்பர் பிலேட்டில் உள்ள எண்களை கூட்டி விடுவார்.. அன்றும் என்னை வழியில் செல்லும் பல வண்டிகளின் எண்களை கூட்ட சொன்னார்..கணக்கு பாடம் ரொம்பமுக்கியம் அதுக்கு தான் இந்த பயிற்சி என்றார். அப்போது இன்னொன்றும் சொன்னார். தான் புது சைக்கிள் வாங்க முன்பணம் கட்டி விட்டதாகவும், நாகப்பா சைக்கிள்ஸ் என்ற நிறுவனத்தில் இருந்து வரும் என சொன்னார். அதன் பிறகு வாடகை சைக்கிள் எடுக்க தேவை இருக்காது என்றார்.
காட்சி 3: அம்மாவும் அப்பாவும் கடைவீதி சென்று அம்மாவுக்கு புதிய செப்பல்/காலனி வாங்கி வந்து இருந்தார்கள். முதல் முறையாக அம்மா ஹவாய் காலணி இல்லாமல் சற்றே விலை கூடிய காலணியை வாங்கி இருந்தார்.
காட்சி 4: அப்பாவை பார்க்க வந்த அவரின் நண்பர் வெங்கடேஷிடம் , அடுத்த தடவ நீ என்னை பார்க்கணும்னா மேல தான் வரணும் என்றார் . அவர் ஏன் என வினவ, தான் அதே வீதியில் சற்று புதிதாய் கட்டிய வீட்டில் முதல் அடுக்கில் தனி வீடாக வாடகைக்கு பார்த்து முன்பணம் கொடுத்து இருப்பதாக சொன்னார். ஆம்..எனக்கு அது தனி வீடு என்பதை விட அந்த வீட்டில் தனி கழிப்பறையும், பைப் /குழாய் இருக்கும் என்பது மிகுந்த ஆனந்தத்தை கொடுத்தது..
ஆனால் அதற்கு அடுத்து வந்த வாரம், இந்த காட்சிகள் பலவற்றை புரட்டி போட்டு விட்டது. ஆம்..உண்மை தான்.. தனி கழிப்பறை உள்ள வீட்டிற்கு நாங்கள் போக கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகி விட்டது.
தொடரும்..
கிருஷ்ணப்பன் சொக்கலிங்கம்
19-06-2021
இ(எ)துவும் கடந்து போகும் என்பது தத்துவம்... இ(எ)தையும் கடந்து போவேன் என்பது நம்பிக்கை ... Miles to Go Before I Sleep...
பதிவுகளின் பிரிவுகள்
- சொந்த கதை(சுய புராணம்) (24)
- கவிதை (23)
- பார்வைகள் பல விதம் (19)
- சத்தம் போட்டு சொல்லாதே (10)
- நண்பர்களின் படைப்புகள் (10)
- அம்மாவும்அப்பாவும்நாங்களும் (5)
- கருத்து கணிப்பு (5)
- பாதித்ததும் பதிந்ததும் (5)
- யாரோ சொன்னாக (5)
- அவன் அவள் மற்றும் காதல் (4)
- Medical Physicis (2)
- உள்ளம் கொள்ளை போகுதே (2)
- என் (கேள்வி) பதில் (2)
- சிறு கதை (2)
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
படிக்கும் போது புவியல் பாடத்தில் 5 மார்க் வாங்குவதற்காக உலக வரைபடத்தை முதன் முதலில் பார்த்தது. அதன் பிறகு நம் நண்பர்கள் வெளி நாட்டில் எங...
-
(முன் குறிப்பு :என் ஆயாவின் நினைவு நாள் 14.01.2006.அதன் நினைவாய் ஒரு நினைவு அஞ்சலி ) அறிமுகம் என் ஆயா பெயர் சின்ன குட்டி நான் தான் அவளின் செ...
-
சமீபத்தில் நான் எனது உறவினர் ஒருவரிடம் பேசி கொண்டு இருந்த போது அவர் எதேட்சையாக கேட்டார். நீ என்ன வேலை பார்க்கிறாய் என்று... அந்த உரையாடல...
No comments:
Post a Comment