இது கொஞ்சம் சுய தம்பட்டம் நிறைய நன்றிகள்.
2009 நவம்பர் 10 ,மாலை மணி ஒரு 5 .40 இருக்கும்.அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு செல்ல தயார் ஆகி கொண்டு இருந்தேன்.சரி ஒரு முறை இணையத்தை கொஞ்சம் மேய்வோம் என்று என் நண்பனின் மடிக்கணியை எடுத்து அமர்ந்தேன்.எந்த மின்அஞ்சலும் வரவில்லை.சரி நான் இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்த ஒரு பிரச்சனையான Bulk Orkut Scraps பற்றி search செய்ய தொடங்கினேன். கிடைத்த பதில் எதுவும் சரியாக தோன்ற வில்லை.ஒருமுறை எனது சீனியர் ஒருவர் சாட்டிங் போது சொன்ன " உங்கள் வகுப்பு தோழர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு blogspot ஆரம்பிகலாம்" என்ற வாசகம் நினைவு வர உடனே ஒரு டெஸ்ட் ப்ளாக் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து வழக்கம் போல் அழகுக்ரிஷ் என டைப் செய்து விட்டேன். அப்போது மணி 6 .30 இருக்கும்.என் உடன் இருந்த பாலாஜி இடம் என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டேன்.நான் எனது டைரியில் முதல் பக்கத்தில் எழுதி உள்ள My foot prints ... சாயலில் வேண்டும் யோசித்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பாதையும் பதிவும் என மனதில் தோன்ற அது பாலாஜிக்கும் பிடித்து போக பெயர் சூட்டு விழாவும் முடிந்தது.அன்று காலை எனக்கு தோன்றிய வாழ்த்தா! வழக்கமா? கவிதையை பதிந்து விட்டேன். அந்த கவிதையை முதலில் அமைந்து கூட எதேட்சையான ஒரு நிகழ்வு.அப்பறம் எனது ஜூனியர் தினேஷ் ஷங்கர்கு போன் போட்டு கொஞ்சம் ப்ளாக் பற்றி சீனையும் போட்டு விட்டேன்.இதற்கு முன்னால் நான் ஒரு ப்ளாக்கை கூட படித்து இல்லை.அதுவும் நல்லது தான் ஒரு வேலை முன்பே படித்து இருந்தால் ஆரம்பிக்காமல் கூட இருந்து இருப்பேன்.எல்லாம் எதேட்சையாக ஒரு மணி நேரத்தில் முடிந்து விட்டது.இத போய் இப்ப என்னத்துக்கு நீ சொல்லற என்று கேட்பது எனக்கு புரிகிறது. இன்று 2010 நவம்பர் 11.நேற்றுடன் ஒரு வருடம் முடிந்து விட்டது. உங்களில் சிலரை போலவே " Even I don't believe numbers,I believe in time & people "
நான் ஆரமித்த போது என் உடன் இருந்தது அப்பறம் பல பதிவுகளுக்கு பிழை திருத்தம் செய்த பாலாஜி,எனது முதல் கவிதைக்கு முதல் பின்னூட்டம் இட்டது மட்டும் அல்லது பலருக்கு இந்த ப்ளாக் -ஐ அறிமுக படுத்தி வரும் தினேஷ் ,சில பதிவுகளை தட்டச்சு செய்ய உதவிய பத்மநாபன்,எதை பற்றி எல்லாம் எழுதலாம் என்று எனக்கு ஆலோசனை கூறும் பிரசன்னா, வேல் ,முத்துலிங்கம் ,சதீஷ்,அறிவு ,அதியமான்,எதை எழுதினாலும் போன் செய்து வாழ்த்தும் அமீர் ,வெங்கடேஷ்,சிலம்பரசன், ராஜேஷ் அப்பறம் blog எப்படி எல்லாம் இருக்கலாம் என்றும் சொல்லி வரும் M .செந்தில் மற்றும் G .செந்தில்.கவிதை அதிகமாக எழுதுங்கள் என்று சொன்ன குமார் ,கவிதை அதிகமாக ரசிக்கும் கலை ,V.R .செந்தில் , இவர்கள் எல்லாம் நண்பர்கள் மற்றும் ஜூனியர்கள்.இவர்கள் என் மீது அன்பு பாராட்டுவதில் மிக பெரிய வியப்பு இல்லை.
ஆனால் ப்ளாக் என்ற வார்த்தையை எனக்கு முதலில் சொன்னத்து மட்டும் இல்லாமல் தொடர்ந்து படித்து தன் கருத்தை பகிர்ந்து வரும் சீனிச்சாமி சார்,சுரேஷ் சார் ,தொடர்ந்து பின்னூட்டம் இட்டு படித்து வரும் தேவன் சார் அவர்களின் அன்பில் தான் நான் இன்னும் கொஞ்சம் செருக்கோடு நடக்கிறேன்.
அது மட்டும் இல்லாமல் அல்லாமல் ஊக்க படுத்தும் உள்ளங்களில் இணைந்து உள்ள அண்டோ ,ஷியாமா ,சிவா, பாலா,செல்வா, ரகு ஸ்ரீராம் ஜகதீஷ்,கோதண்டராமன் ,வசந்தன் ,ஈஸ்வர் என பட்டியல் நீளுவது கொஞ்சம் நெகிழ்ச்சியாய் இருக்கிறது. அமைதியாய் படித்து வரும் ரகு,ராகவ் மற்றும் எனது உறவினர் சிவா ,அண்ணன் ராமு ,வைரம் மற்றும் பலர் என்னை பாராட்டி மகிழ்கிறார்கள்.
வேல்முருகன் இதற்காக செய்த உதவி மடிகணினி கொடுத்ததில் தொடங்கி, சாப்ட்வேர் சப்போர்ட்,terror திங்கிங், நான் சொல்லும் கவிதையை சகித்து கொள்வது என பட்டியல் மிக நீளமானது.
இதற்காக என் மீது சிலர் கல் எறியவும் செய்தீர்கள்.அவர்களுக்கு எல்லாம் ஒரு அன்பு கட்டளை நான் காய்த்த மரம் அல்ல வளரும் செடி தான்.
உங்கள் அனனவருக்கும் நன்றி..
பாதையும் பதிவும் தந்த புதிய நண்பர்கள் அமீரும் & முத்துலிங்கமும்..
நீங்கள் பாராட்டாத போது நான்
செல்லரித்து விடவில்லை -ஆனால்
பாராட்டிய போது நிறைய
புல்லரித்து போனேன் என்பது நிஜம்..
இதையும் கடந்து போக தயார் ஆகிறேன்.
Miles to go before I sleep ...
--
With hope & Smile
C.Krishnappan
எழுதறதுக்கு எதுவும் இல்லேன்னா பிறந்தநாள் கொண்டாடிறாங்க..என்ன கொடுமை சார்..
ReplyDeleteஒரு வருசமா இந்த கொடுமைய நாங்க
ReplyDeleteசகிச்சுட்டோமா ? ஆச்சர்யம் தான் ! வேற என்ன பண்றது , continue பண்ணுங்க
வேல் சார் செய்த மிகப் பெரிய உதவி இதுவரைக்கும் உங்க ப்ளோக்கை ஹாக் செய்யாதது தான் !!!!!
ReplyDeleteகண்டிப்பான முறையில் பல மைல்களை(100) கடக்க வேண்டும், தூங்க செல்லும் முன்..........
இந்த பதிவை முதலில் படிக்கத் தொடங்கியவுடன் எனக்கும் வேல்முருகன் சார் கூறியது போலவே தோன்றியது.
ReplyDeleteபுலி பதுங்குவது பாயத்தான்!
அடேகப்பா 365 நாட்களா ஆகி விட்டது, இதையாவது சொல்லி பெருமை பட்டுக்க வேண்டியதுதான்...
ReplyDeletevaltthukkal
ReplyDeletevilaiyatta arambichhu vetrikaram poikkittu irukke
Thank u for sharing u r thoughts and entertaining us !! keep take us thro' u r journey!!
ReplyDeleteCongrats!! The blog is damn good :) (Thanks to Ms.Vennila Govindasamy)
ReplyDeleteBtw.,
I cann't resist asking this question : whether the background music ( too good to listen) at the blog is from a movie ? ?? PS: I am not used to seeing tamil movies now-a-days!!
with kind regards,
RM.Nehru
Ungal pathayum pathuvum... enakkul pul arikkuthu...Enathu Vazhthukkal...
ReplyDeleteWith Regards
Tamilarasan.R