(நன்றி:நண்பர் அண்டோ வாஸ் எழுதியது-santovaz@gmail.com)
எனது உடைகளை இஸ்திரி செய்யும் பெட்டி இடுபவர் ஒரு தமிழர் பெயர் ராஜு ( கோயம்புத்தூர் நகரில் இருந்து வந்து இங்கே தொழில் செய்கிறார் ), வீட்டிற்கு வந்து துணிகளை எடுத்து போவார் ,ஒரு சட்டை இஸ்திரி செய்வதற்கு Rs 5 , கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் எனக்கு இஸ்திரி செய்ய தெரியாது ( சோம்பேறிக்கு கிடைத்தது எல்லாம் சாக்கு ) மேலும் அவருடைய தொழில் சுத்தம் ( மடிப்பு துல்லியம் ) , ஒரே ஒரு பிரச்சனை தலைவர் அப்போ அப்போ ஊருக்கு ஓடிடுவார் வர பத்து பதினைந்து நாட்களாகும் , இந்த முறை 20 நாட்களாகியும் அவரை காணவில்லை , தேய்த்து வைத்த துணிகளை எல்லாம் உபயோகித்து விட்ட நிலையில் நானே இஸ்திரி செய்ய தொடங்கினேன் , இரண்டு தினங்கள் செய்திருபேன் ரூபாய் 5 மகத்துவம் புரிந்தது , போதுமடா இந்த பொழப்பு என்று ராஜுவின் வீடு எங்கு உள்ளது என்று தேட தொடங்கினேன் அன்று பார்த்து ஆலப்புழா மாவட்டம் முழுவதும் ஏதோ ஒரு சொதப்பல் காரணத்திற்காக பந்த் ( மலையாளத்தில் ஹர்த்தால் ) . கேரளாவை பொறுத்தவரை பந்த் என்றால் எல்லாருக்கும் ஒரே கொண்டாட்டம் ( யாருடைய பந்த் ஆகா இருக்கட்டுமே ஆளும் கட்சி , எதிர்க்கட்சி நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் கட்சி, லேபர் யூனியன் , வணிகர்கள் சங்கம் , பேருந்து ஓட்டுனர்கள் சங்கம் என்று வரிசை நீண்டு கொண்டே போகும்) , எல்லாரும் கடையை அடைத்து கொண்டு வீட்டில் ஜாலியாக இருப்பார்கள் கடைகள் மட்டும் அல்ல பேருந்து , ஆட்டோ , பள்ளி , கல்லுரி , என்று ஒட்டு மொத்த இயல்பு வாழ்கையும் பாதிக்கப்படும், மூடாத கடைகள் இரண்டு உண்டு 1. மெடிக்கல் ஸ்டோர் , 2. கள்ளு கடை ( தெருவுக்கு ஒரு கள்ளு கடை உண்டு ). சரி என்று எனது பைக்கை எடுத்து கொண்டு ராஜுவின் வீடு கண்டு பிடிக்க கிளம்பினேன் , ஒரு தெரு முனையில் விசாரித்த போது அங்கே ஒரு கொடி கம்பத்தின் கீழே அமர்ந்து இருண்ட ஒருவர் தனக்கு தெரியும் என்றும் ஆனால் இன்று பந்த் அதனால் அவர் எனக்கு உதவ முடியாது என்று கடமை உணர்ச்சி பொங்க கூறினார் ( வயது 35 இருக்கும்,முகத்தில் நாலு நாள் தாடியும் பசி களையும் தெரிந்தது ) அவருடைய அருகில் அமர்ந்து இருந்தவர் சட்டென்று எழுந்து என்னிடம் வந்து மெதுவாக அவனுக்கு கள்ளு வாங்கி தாரேன்னு சொல்லு கூட்டிட்டு போய் காட்டுவான் என்றார்
வேறு தெரிந்தவர்கள் அந்த ஏரியாவில் யாரும் இல்லாத காரணத்தினாலும் கடுப்பின் உச்சத்தின் நான் இருந்ததினாலும் சரியென்று ஒத்து கொண்டு அவரை அழைத்தேன் வந்தவர் பைக்கில் ஏறும் முன் சில நிபந்தனைகள் விதித்தார் 1. இதே இடத்தில கொண்டு வந்து விட வேண்டும் 2.13 no கள்ளு கடையில் தான் கள்ளு வாங்கி தர வேண்டும் 3. ராஜு வீட்டில் இல்லை என்றால் அதற்கு அவர் பொறுப்பு அல்ல , எல்லாம் என் நேரம் என்று எண்ணி கொண்டு சரியென்று சம்மதித்தேன். போகும் வழியெல்லாம் என்னை பற்றி விசாரித்து கொண்டு வந்தார் ( கேரளாவில் ஒரு பழக்கம் உண்டு நண்பர்களுக்கு இடையே நல்ல வேலையில் உள்ளவர் நல்ல வேலை இல்லாதவருக்கு அவர் கேட்கும் போதெலாம் குடிக்க வாங்கி கொடுக்க வேண்டும் ) எதற்கு வம்பு என்று என்னை பற்றி முழு விபரம் எதுவும் கூறாமல் மழுப்பி கொண்டே வந்தேன் பல left , right களுக்கு பின் ஒரு வீட்டின் முன் நிறுத்த சொன்னார் வீட்டை கண்டால் கோடீஸ்வரன் வீட்டு போல் இருந்தது பினால் அமர்ந்து இருதவர் இறங்கி கேட்டை திறந்து உள்ளே சென்றார் ஒரு பத்து நிமிடம் கழிந்து அவரும் ராஜுவும் ஒருமித்து வந்தனர் இந்த வீட்டிலா அவர் வசிக்கிறார் ? என்று வினவிய பொழுது இல்லை என்றும் இந்த வீட்டின் பின் புறத்தில் ஒரு ஒட்டு வீடு உள்ளதாகவும் அதில் தன் குடும்பத்தோடு வசிப்பதாகவும் கூறினார் , அவரிடம் எனது அவல நிலயை விளக்கி கூறி விட்டு தயவு செய்து என்றே வந்து துணிகளை எடுத்து போகுமாறு கூறினேன் அவர் தலை அசைத்து விட்டு பைக்கில் என் கூட வந்தவரை காட்டி கண்ணால் ஏதோ சைகை செய்தார் எனக்கு ஒன்றும் புரிய வில்லை சரி வந்த வேலை முடிந்ததென்று பைக்கில் ஏறினேன்
கூட வந்தவர் என் முன் வந்து நிற்க பேசியபடி கள்ளு குடிக்க எவ்வளவு என்று கேட்ட படி எனது பர்சை எடுத்தேன் உடனே அவர் முகம் மாறியது தனக்கு காசு வேண்டாம் என்றும் கள்ளு தான் வேணும் என்றும் கூறினார் சரியென்று அவரை பைக்கில் ஏற்றி கொண்டு அவர் கூறிய கள்ளு கடையை நோக்கி விரைந்தேன் கடை தென்னங் கூரை இட்டு சுமார் இருபது பேர் அமர்ந்து சாப்பிட கூடிய ஒரு ஹோடேளை போல் இருந்தது ஒரு முனையில் கல்லா பெட்டியும் மறு முனையில் டிவி பெட்டியும் , சுவரில் மகாத்மா காந்தியின் படம் சத்தியமவே ஜெயதே என்ற சொற்றொடருடன் இருந்தது கூட வந்தவர் நேரே உள்ளே சென்று இரண்டு டம்ளர் கள்ளும் ஒரு தட்டில் ஒரு டபுள் ஆம்லெட்டும் வாங்கி கொண்டு வந்தார் அவர் முகத்தில் இருந்த பூரிப்பை காண வேண்டுமே ! நான் கொடிப்பதிலை என்பதை கூறியவுடன் வேகமாக சென்று ஒரு லெமன் சர்பத் வாங்கி வந்தார் ( கம்பெனி வேணுமாம் ) பாத்து நிமிடத்தில் கொண்டு வந்த இரண்டு டம்ளரையும் காலி செய்து விட்டு என்னை அழைத்து கொண்டு கல்லா அருகே வந்தார் என்னிடம் இருந்து ஒரு பத்து ரூபாய் வாங்கி கொண்டு அவர் பாக்கெட்டில் இருந்து 25 ரூபாய் எடுத்து கொடுத்தார் ( நான் வாங்கி கொடுக்க வேண்டிய கள்ளு ரூபாய் பத்து அவர் வாங்கி குடித்த கள்ளு ரூபாய் பத்து ஆம்லெட் ரூபாய் பத்து அவர் எனக்கு வாங்கி கொடுத்த லெமன் சர்பத் ரூபாய் ஐந்து மொத்தம் ரூபாய் 35 ) அவர் கண்ணில் போதை இல்லை வாய் குழற வில்லை நடையில் தள்ளாட்டம் இல்லை பேசியபடி என்னை கொண்டு அந்த கொடி மரத்தின் அடியில் விடு என்று கூறினார் அது வரை அவரை பற்றி ஒன்றும் விசாரிக்காத நான் அவரை பற்றி மெதுவாக பேச்சு எடுத்தேன் அவர் துபையில் முடி வெட்டும் சலூன் வைத்திருந்ததாகவும் இரண்டு வருடங்களாக இங்கு ஒரு சலூனில் வேலை பார்ப்பதாகவும் கூறினார் ஏன் திரும்பி வந்து விட்டீர்கள் என்று கேட்ட பொழுது வேண்டிய அளவு சம்பாதித்து விட்டு இங்கே வந்து சுமார் 4 லட்சத்தில் ஒரு வீடு கட்டியதாகவும் மனைவி மற்றும் ஒரு குழந்தை இருப்பதாகவும் கூறினார் மேலும் என்ன தான் காசு துபையில் கிடைத்தாலும் நானே ராஜா நானே மந்திரி என்ற வாழ்கை இங்கு மட்டுமே கிடைக்கும் அதனால் தான் திரும்பி வந்து விட்டதாக கூறினார்
இந்த கால மனிதர்களுக்கு பணம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு சுதந்திரமும் தன்மானமும் முக்கியம் என்பதை அவர் மூலம் உணர்ந்து கொண்டேன்
இன்னும் சொல்லுவேனா ???
காலம் முடிவு செய்யும்.
இ(எ)துவும் கடந்து போகும் என்பது தத்துவம்... இ(எ)தையும் கடந்து போவேன் என்பது நம்பிக்கை ... Miles to Go Before I Sleep...
பதிவுகளின் பிரிவுகள்
- சொந்த கதை(சுய புராணம்) (24)
- கவிதை (23)
- பார்வைகள் பல விதம் (19)
- சத்தம் போட்டு சொல்லாதே (10)
- நண்பர்களின் படைப்புகள் (10)
- அம்மாவும்அப்பாவும்நாங்களும் (5)
- கருத்து கணிப்பு (5)
- பாதித்ததும் பதிந்ததும் (5)
- யாரோ சொன்னாக (5)
- அவன் அவள் மற்றும் காதல் (4)
- Medical Physicis (2)
- உள்ளம் கொள்ளை போகுதே (2)
- என் (கேள்வி) பதில் (2)
- சிறு கதை (2)
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
படிக்கும் போது புவியல் பாடத்தில் 5 மார்க் வாங்குவதற்காக உலக வரைபடத்தை முதன் முதலில் பார்த்தது. அதன் பிறகு நம் நண்பர்கள் வெளி நாட்டில் எங...
-
(முன் குறிப்பு :என் ஆயாவின் நினைவு நாள் 14.01.2006.அதன் நினைவாய் ஒரு நினைவு அஞ்சலி ) அறிமுகம் என் ஆயா பெயர் சின்ன குட்டி நான் தான் அவளின் செ...
-
சமீபத்தில் நான் எனது உறவினர் ஒருவரிடம் பேசி கொண்டு இருந்த போது அவர் எதேட்சையாக கேட்டார். நீ என்ன வேலை பார்க்கிறாய் என்று... அந்த உரையாடல...
No comments:
Post a Comment