"என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க" என்பது தான் அது...
உண்மை தான..நீங்க சொல்லுங்க..
இதை நீங்க சொன்ன உடனே நீ மட்டும் எல்லாத்தையும் புரிஞ்சுக்கிடயோ.. போடா போ என்று உங்கள் எதிர் தரப்பு சொல்லகூடும்...இப்படி தான் மன கசப்புகள் தொடருது
இப்படி தான் ஒரு நாள் ஜீவன் தனது நண்பனிடம் தனக்கு ஒரு நாள் புதிய டிஜிட்டல் காமெராவை கடனை தருமாறு கேட்டான் அவனும் ஒறிரு நாட்களில் தருவதாய் கூறினான்.நாட்கள் மாதங்கள் ஆகிவிட்டது அவனும் தரவில்லை. ஜீவனும் அவவபோது ஞாபக படுத்தினான்.அவன் நண்பனும் தான் மறந்து விட்டதாகவும் கட்டாயம் தருவேன் என்றான். நேற்று கூட வீட்டின் கதவை மூடி வண்டியை ஸ்டார்ட் செய்த போது தான் ஞாபகம் வநதது நான் தான் அப்பறம் எடுத்துக்கலாம் என்று வந்துட்டேன் என்றான் .என்னை தப்பாய் நினைக்க வேண்டாம் என்றும் கேட்டு கொண்டான்.ஜீவனும் நண்பனுக்கு நமக்கு தர விருப்பம் இல்லையோ என்று நினைக்க ஆரமித்து விட்டான்.அவனும் கேட்பதை நிறுத்தி விட்டான். அடுத்து ஒரு வாரமும் ஓடி விட்டது.அவர்கள் இருவரின் மேல் அதிகாரி ஜீவனின் நண்பனிடம் தன் டிஜிட்டல் கேமரா தண்ணீர் பட்டு ரிப்பேர் ஆகிவிட்டதாகவும் இந்த வார இறுதியில் குடும்பத்துடன் அவுடிங் செல்ல இருப்பதாகவும் ஆனால் டிஜிட்டல் கேமரா இல்லை என்று எதேட்சையாக சொல்ல உடனே ஜீவனின் நண்பன் என்னிடம் உள்ளது நான் தருகிறேன் என்றான். அடுத்த நாள் தனது வீட்டில் இருந்து அலுவலகம் கிளம்பி பாதி தூரம் கிட்ட தட்ட 4KM வந்தவுடன் தான் அவனுக்கு காமெராவை எடுக்க வில்லை என்று ஞாபகம் வந்தது.உடனே வண்டியை திருப்பி வீடு வந்து காமெராவை எடுத்து சென்று தனது மேலதிகாரியிடம் குடுத்து விட்டான்.அன்று இரவு முழுவதும் சில கேள்விகள் அவனை தூரத்தி கொண்டே இருந்தன.

பின்பு செவ்வாய் கிழமை மேலதிகாரி காமெராவை திருப்பி குடுத்துவுடன் வாங்கி ஜீவனிடம் குடுத்தான்.குடுக்கும் பொழுது குஷி பட ஜோதிகா போல் SORRY ,SORRY என்று கேட்டான். ஜீவனுக்கு ஒன்றும் புரியவில்லை என்ன இத்தனை SORRY என்று கேட்ட ஜீவனிடம் பதில் ஏதும் சொல்ல வில்லை அவனது நண்பன்.
அவன் என்ன சொல்ல முடியும் கடந்த சில நாட்களாய் அவன் மனம் கேட்ட போதே அவனால் சொல்ல முடியவில்லை
மனம் கேட்ட கேள்விகள் இதோ உங்களுக்காக..
1 . ஒரு முறை கதவை மூடி வண்டியை ஸ்டார்ட் செய்த போது ஞாபகம் வந்தும் காமெராவை எடுக்காமல் வர காரணம் என்ன?
2. கிட்ட தட்ட 4KM வண்டியை திருப்பி வீடு வந்து காமெராவை எடுத்து சென்று தனது மேலதிகாரியிடம் குடுக்க காரணம் என்ன ??
3. அவன் மேலதிகாரியிடம் கேமரா குடுத்த விஷயம் ஜீவனுக்கு தெரிந்து இருந்தால் ??
No comments:
Post a Comment