இ(எ)துவும் கடந்து போகும் என்பது தத்துவம்... இ(எ)தையும் கடந்து போவேன் என்பது நம்பிக்கை ... Miles to Go Before I Sleep...
பதிவுகளின் பிரிவுகள்
- சொந்த கதை(சுய புராணம்) (24)
- கவிதை (23)
- பார்வைகள் பல விதம் (19)
- சத்தம் போட்டு சொல்லாதே (10)
- நண்பர்களின் படைப்புகள் (10)
- அம்மாவும்அப்பாவும்நாங்களும் (5)
- கருத்து கணிப்பு (5)
- பாதித்ததும் பதிந்ததும் (5)
- யாரோ சொன்னாக (5)
- அவன் அவள் மற்றும் காதல் (4)
- Medical Physicis (2)
- உள்ளம் கொள்ளை போகுதே (2)
- என் (கேள்வி) பதில் (2)
- சிறு கதை (2)
சின்ன சின்ன வருத்தங்கள் - 2
அதிகாலையில் அவசர அவசரமாய் அனைப்பதால்
ஆசைபட்டு வைத்த அலாரம் பாடலை
கேட்க முடியாததை நினைக்கும் பொழுது
புதிய காலணிகளை(shoes) அணிந்து
நடக்கையில் வரும் அடை மழை...
நான் செல்லும் பேருந்தை முந்தி
செல்லும் அதே வழி தடத்து பேருந்து...
அழகான இளம் பெண் நம் கோச்சில்
இல்லாத நெடுந்தூர ரயில் பயணம்...
Labels:
கவிதை
உள்ளம் கொள்ளை (கொல்ல) போகுதே - 2
கடந்த பதிவில் உங்களை யோசிக்க சொன்ன சொற்றொடர் என்னனா
"என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க" என்பது தான் அது...
உண்மை தான..நீங்க சொல்லுங்க..
இதை நீங்க சொன்ன உடனே நீ மட்டும் எல்லாத்தையும் புரிஞ்சுக்கிடயோ.. போடா போ என்று உங்கள் எதிர் தரப்பு சொல்லகூடும்...இப்படி தான் மன கசப்புகள் தொடருது
இப்படி தான் ஒரு நாள் ஜீவன் தனது நண்பனிடம் தனக்கு ஒரு நாள் புதிய டிஜிட்டல் காமெராவை கடனை தருமாறு கேட்டான் அவனும் ஒறிரு நாட்களில் தருவதாய் கூறினான்.நாட்கள் மாதங்கள் ஆகிவிட்டது அவனும் தரவில்லை. ஜீவனும் அவவபோது ஞாபக படுத்தினான்.அவன் நண்பனும் தான் மறந்து விட்டதாகவும் கட்டாயம் தருவேன் என்றான். நேற்று கூட வீட்டின் கதவை மூடி வண்டியை ஸ்டார்ட் செய்த போது தான் ஞாபகம் வநதது நான் தான் அப்பறம் எடுத்துக்கலாம் என்று வந்துட்டேன் என்றான் .என்னை தப்பாய் நினைக்க வேண்டாம் என்றும் கேட்டு கொண்டான்.ஜீவனும் நண்பனுக்கு நமக்கு தர விருப்பம் இல்லையோ என்று நினைக்க ஆரமித்து விட்டான்.அவனும் கேட்பதை நிறுத்தி விட்டான். அடுத்து ஒரு வாரமும் ஓடி விட்டது.அவர்கள் இருவரின் மேல் அதிகாரி ஜீவனின் நண்பனிடம் தன் டிஜிட்டல் கேமரா தண்ணீர் பட்டு ரிப்பேர் ஆகிவிட்டதாகவும் இந்த வார இறுதியில் குடும்பத்துடன் அவுடிங் செல்ல இருப்பதாகவும் ஆனால் டிஜிட்டல் கேமரா இல்லை என்று எதேட்சையாக சொல்ல உடனே ஜீவனின் நண்பன் என்னிடம் உள்ளது நான் தருகிறேன் என்றான். அடுத்த நாள் தனது வீட்டில் இருந்து அலுவலகம் கிளம்பி பாதி தூரம் கிட்ட தட்ட 4KM வந்தவுடன் தான் அவனுக்கு காமெராவை எடுக்க வில்லை என்று ஞாபகம் வந்தது.உடனே வண்டியை திருப்பி வீடு வந்து காமெராவை எடுத்து சென்று தனது மேலதிகாரியிடம் குடுத்து விட்டான்.அன்று இரவு முழுவதும் சில கேள்விகள் அவனை தூரத்தி கொண்டே இருந்தன.
பின்பு செவ்வாய் கிழமை மேலதிகாரி காமெராவை திருப்பி குடுத்துவுடன் வாங்கி ஜீவனிடம் குடுத்தான்.குடுக்கும் பொழுது குஷி பட ஜோதிகா போல் SORRY ,SORRY என்று கேட்டான். ஜீவனுக்கு ஒன்றும் புரியவில்லை என்ன இத்தனை SORRY என்று கேட்ட ஜீவனிடம் பதில் ஏதும் சொல்ல வில்லை அவனது நண்பன்.
அவன் என்ன சொல்ல முடியும் கடந்த சில நாட்களாய் அவன் மனம் கேட்ட போதே அவனால் சொல்ல முடியவில்லை
மனம் கேட்ட கேள்விகள் இதோ உங்களுக்காக..
1 . ஒரு முறை கதவை மூடி வண்டியை ஸ்டார்ட் செய்த போது ஞாபகம் வந்தும் காமெராவை எடுக்காமல் வர காரணம் என்ன?
2. கிட்ட தட்ட 4KM வண்டியை திருப்பி வீடு வந்து காமெராவை எடுத்து சென்று தனது மேலதிகாரியிடம் குடுக்க காரணம் என்ன ??
3. அவன் மேலதிகாரியிடம் கேமரா குடுத்த விஷயம் ஜீவனுக்கு தெரிந்து இருந்தால் ??

உள்ளம் கொள்ளை போகுதே
ஏன் அக்னி சாட்சி ...
பஞ்ச பூதங்களான நீர்,நிலம்,காற்று,நெருப்பு,ஆகாயம் இந்த ஐந்தில் ஏன் நெருப்பை மட்டும் சாட்சியாய் வைத்தார்கள்.
அக்னியை தவிர எல்லாமே தன் நிலையை மாற்றி கொள்ளும் எப்படி என்றால்
நீரின் சுவை இடத்திருக்கு இடம் மாறகூடும்,
நிலம் என்பது பாலைவனம் , கடல் என இடத்திருக்கு இடம் மாறும்.
காற்று என்பது தென்றல்,சுறாவளி என நிலை மாறக்கூடும்.
ஆகாயம் என்பது மாறி கொண்டே இருக்கும்..
ஆனால் இந்த அக்னியின் தன்மை எங்கும் ஒன்றே சுடுவது ... சுடுவது மட்டுமே
அதனால் தான் அக்னி சாட்சி...
("எங்க பாட்டி அப்பவே சொல்லுச்சு..." என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது)
Labels:
யாரோ சொன்னாக
உள்ளம் கொள்ளை (கொல்ல) போகுதே - 1
கடந்த கருத்து எடுப்பில் ,
உறவு ,காதல்,நட்பு இந்த அனைத்தையும் தாண்டி எல்லாம் சுயநலம் என்று அதிக பேர் கருதுகிறார்கள்.நான் நினைப்பது சரியாக இருந்தால்
வயது 20 -24 உள்ளவர்கள் நட்பு மற்றும் காதலையும்
24 - 27 வயது உள்ளவர்கள் உறவையும்
27 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எல்லாம் சுயநலம் தேர்ந்து எடுத்து இருக்க கூடும்.
நட்பு & எல்லாம் சுயநலம் இரண்டும் சரி சமமாக இருக்கும் என்று நான் நினைத்தேன் ஆனால் 51 % பேர்(just majority ) எல்லாம் சுயநலம் என்கிற கட்சி. ஒரு முக்கியமான விஷயம் இன்னமும் 49 % பேர் எதோ ஒரு பிரிவில் (உறவு,காதல்,நட்பு) நம்பிக்கை வைத்துள்ளனர்.
உள்ளம் கொள்ளை போகும்னு பார்த்தா நம்மில் பல பேர் உள்ளம் "கொல்ல தான்" போயிருக்கு.
ஏன் இந்த நிலை?? என்று கேட்டா உடனே நாம எல்லாரும் ஒரு சொற்றொடரை பதிலா சொல்லுவோம்.அது என்னனா..
நீங்க எல்லாரும் உங்கள் வாழ்வில் மனிதர்களிடம் மன கசப்பு ஏற்பட சமயத்தில் பலமுறை குறைந்த பட்சம் ஒரு முறையேனும் use பண்ணின சொற்றொடர் தான்.தெரியல...
நல்லா உட்காந்து யோசிங்க இன்னும் தெரியாட்டி ரூம் போட்டு யோசிங்க.
இப்ப சங்கத்தை கலைச்சாச்சு...உங்கள அப்பறம் மீட் பண்றேன் ...
Labels:
உள்ளம் கொள்ளை போகுதே
இப்படிக்கு Camellia assamica
என்னை பார்த்த பின்பு தான் எழுந்திருக்கிறாய்
நான் என்ன உன் செல்ல மகளா ?
எனக்காக தினமும் பல முறை காத்து கிடக்கிறாய்
நான் என்ன உன் ஆசை காதலியா ?
தினமும் உன் இதழ்களை என்
மீது பதித்து விடுகிறாய் மறவாமல்
நானும் உனக்கு ஒரு உற்சாகத்தை
தந்து விடுகிறேன் தவறாமல்
நான் சூடாய் இருக்கையில் நீ உன்
இதழ்களை என் மீது பதிக்க முயல்கையில்
நான் சுட்டு விடுவதும்
நீ எனை உமிழ்ந்து விடுவதும்
என ஊடல் கொள்கிறோம்
ஊடல் கொண்ட அடுத்த ஐந்து நிமிடத்திற்குள்
நாம் இருவரும் கூடல் கொண்டு விடுகிறோம்.
என்னை உன்னுள் கலந்து விடுகிறாய்..
நான் என்ன உன் அன்பு மனைவியா ?
பொழுது போகாமல் போரடிக்கையில்
அலுவலக மீட்டிங் நடக்கையில்
வேலை பளு மண்டையை பிளக்கையில்
நண்பர்களுடன் வெட்டி அரட்டை அடிக்கையில்
இப்படி எல்லா நிகழ்விலும் உன்னுடன் நான்
உன் பர்சில் உள்ள உன் தாயின் புகை படத்தை போல ...
இப்படிக்கு,
தேநீர்(தேன்+நீர்)/(Camellia assamica)
(Camellia assamica is the Botanical name of Indian Tea)

உள்ளது உள்ளபடி - 4
(நன்றி:நண்பர் அண்டோ வாஸ் எழுதியது-santovaz@gmail.com)
ஒரு மாதத்திற்கு முன்பு எனது தாய் மற்றும் சித்தி இருவரையும் தமிழ்நாடு வரை அனுப்பி வைப்பதற்காக எர்னாகுளம் ரயில் நிலையம் சென்றிருந்தேன், இரவு பத்து மணிக்கு ரயில் வரும் என்று விசாரணை பெட்டியில் கூறினார்கள் . போக வேண்டிய நடை பாதை மேடைக்கு மெதுவாக ஊர்ந்து சென்றோம் (அம்மாவால் துரிதமாக நடக்க இயலாது ). இரண்டு மணி நேரம் முன்னதாக வந்து என் சாமர்த்தியத்தை மெச்சி கொண்டே அவர்கள் இருவரையும் ஒரு இடத்தில் அமர வைத்து விட்டு (platform no 4) சைட் அடிக்க கிளம்பினேன் , போகும் வழியில் பாப் கார்ன் வாங்கி கொண்டு நடந்தேன் (நான் ஒரு (பாப் கார்ன்) பைத்தியம் ) , என்ன தான் சொல்லுங்கள் இந்த கேரள பெண்களின் நடை உடை பாவனைகளின் தரம் ஒரு உயர் தரம் தான் ம்ம்.... என்ன செய்வது நான் கொடுத்து வைச்சது அவ்வளவு தான் ! , கையில் இருந்த பாப் கார்ன் மற்றும் அரை மணி நேரம் காலியாக , நடை பாதை மேடை 9 திற்கு திரும்பினேன்
வேறு ஒரு ரயில் அந்த நடை பாதையின் முன் வந்து நிற்க என் அம்மா , சித்தியின் முகங்கள் அஷ்ட கோணத்தில் மாறியது ,
இந்த இடத்தில் ஒரு விஷயம் கூற விரும்புகிறேன் அது ஏனோ தெரியவில்லை இந்த ரயில் நிலையங்களில் உண்டாகும் உணர்ச்சி பரிமாணங்கள் பேருந்து நிலையங்களில் உண்டாவதில்லை (உறவுகளை பிரியும் அந்த தருணங்கள் மனதை நெகிழ வைக்கும்) இல்லை என்று மறுக்கும் நண்பர்கள் உண்டு , என்னை பொறுத்த வரை மனது குழம்பிய நிலைகளில் எனக்கு ஆறுதல் அளிக்க வல்ல விஷயங்கள் இரண்டு 1. கடற்கரை 2. ரயில் நிலையம் ஆனால் இரவு நேரங்களில் கடற்கரை உலாத்தல் சாத்தியம் இல்லை எனெவே நான் எப்பொழுதும் ரயில் நிலையங்களை நாடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளேன் .
back to ernakulam Railway station
வந்து நின்ற ரயிலில் இருந்து இறங்கும் ஒவ்வொரு மனிதர்களின் முக பாவங்களை ரசித்து கொண்டிருந்தேன் ஒரு பிரயாணி உறங்கி கொண்டிருந்த சக பிரயாணியை எழுப்பினார் எழுந்த பிரயாணிக்கு ஒரு நாற்பது வயது இருக்கும் அவருக்கு உறக்கம் களைந்து இருக்கும் நிலை உணர சில கணங்கள் ஆயின உடனே அவர் எதையோ தேடினார் , விநாடிகள் கழிய கழிய அவருடைய தேடுதலின் தீவிரம் கூடியது , இருக்கையின் அடியில் , கழிப்பறையின் உள்ளே என்று தேட எனக்கு ஒன்றும் பிடி பட வில்லை . திடீரென்று ரயிலில் இருந்து இறங்கி தலை மேல கை வைத்து ஐயோ அலற தொடங்கினார் நெஞ்சிலும் தலையிலும் அடித்து கொண்டு அவர் அழ ,சுற்றி இருந்த யாருக்கும் ஒன்றும் புரிய வில்லை என்னவென்று சிலர் விசாரிக்க அவர் கூட பிரயாணம் செய்த ஒன்பது வயது மகனை காண வில்லை என்பது தெரிய வந்தது , பதட்டத்தில் அவருக்கு தலை சுற்ற நிலை தடுமாறி தரையில் அமர்ந்தார் , அவருக்கு உதவி செய்யும் எண்ணத்தில் அவருடைய பொருட்களை ரயிலில் இருந்து இறக்கி வைத்து விட்டு அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தேன் அவர் வாய் உளறி கொண்டே இருக்க ( என் மனைவிக்கு என்ன பதில் சொல்வேன், ஒரே மகன் எங்கு போய் தேடுவேன் ) அவருக்கு உதவ யாரவது வருவார்களா என்று பார்த்தேன் பெண்கள் உச்சு கொட்டி கொண்டு இருக்க ஆண்கள் முனவிகொண்டிருக்க நேரம் கழிந்தது , மெதுவாக எனக்கு தெரிந்த மலையாளத்தில் அவரிடம் மொபைல் உண்டா என்று விசாரித்தேன் உடனே அவர் சட்டை பையில் இருந்த மொபைலை என் கையில் கொடுக்க அதை சுவிட்ச் ஆன் செய்தேன் , பின்னர் அவருடைய மொபைல் நம்பர் அவருடைய மகனுக்கு தெரியுமா இன்று வினவினேன் , தெரியும் என்று அவர் கூற அவரை அழைத்து கொண்டு ரயில்வே காவல் நிலையதிருக்கு கிளம்பினேன் ( எனக்கு எதற்கு இந்த தேவை இல்லாத வேலை என்ற முக பாவனை என் அம்மா முகத்தில் இருந்தது )
போகும் வழி எல்லாம் மகனை பற்றிய பிதற்றலுடன் அவர் வர அவருக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்று யோசித்த படி நான் நடந்தேன் காவல் நிலையத்தில் நடந்ததை கூற , அவர்கள் உடனே (!) குறிப்பெடுக்க தொடங்கினார்கள் , எந்த ரயில் நிலையம் வரை ஷ்யாம் (மகனுடைய பெயர் ) அவருடன் இருந்தான், எப்பொழுது அவர் கண் அயர்ந்தார் , அதன் பின் உள்ள ரயில் நிலையங்கள் எத்தனை , அவைகளின் தொலைபேசி எண்கள் என்று அவர்கள் செயல் பட்ட விதம் மிக துரிதம் , துல்லியம்.
5 நிமிடங்கள் கடந்திருக்கும் ஒரு அதிகாரி நல்ல செய்தி கொண்டு வந்தார் 60 km தொலைவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் ஒரு சிறுவன் இருப்பதாக கூற அதே சமயத்தில் மகனை தொலைத்தவருடைய மொபைல் அடித்தது , அழைத்து அவருடைய மகன் , ரயில் அதிகாரியின் போனில் இருந்து அவன் அழைக்க இவர் நெகிழ்ந்து உரையாடிய விதம் வார்த்தைகளால் விவரிக்கக் இயலாது அப்பாட என்று நான் மூச்சு விட ஒரு காவல் துறை அதிகாரி வந்து நடந்த விசயங்களை ஒரு காகிதத்தில் எழுதி தரும் படி கூறினார் , கூடவே வந்த என் பெயர் மற்றும் விலாசம் கொடுக்கும் படி அவர் கூறினார், போச்சுடா என்ற படி எழுதி கொடுத்தேன் பின் அந்த நபரை அழைத்து அவருடைய பொருட்கள் எல்லாம் என் அன்னையின் வசம் உள்ளதையும் அவர்க்கு இன்னும் 10 நிமிடங்களில் ரயில் வரும் என்பதையும் உணர்த்தினேன்.
மகனை இருக்கும் ரயில் நிலையத்திலே இருக்கும் படி கூறி விட்டு அவர் வந்து தன் பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு டாக்ஸி பிடிக்க ஓடினார் நானும் என் அம்மா மற்றும் சித்தியை அவர்கள் ஏற வேண்டிய ரயிலில் ஏற்றி விட்டு வீடு வந்து சேர்ந்தேன் நடு நிசி 2 மணிக்கு எனக்கு ஒரு போன் வர இந்நேரத்தில் யாரடா தூக்கத்தை தொந்தரவு செய்வது என்று சபித்து கொண்டே போனை எடுத்தேன் மறு முனையில் ஷியாமின் தகப்பனார் தன்னுடைய மகனை கண்டு விட்டதாகவும் தக்க தருணத்தில் உதவிய எனக்கு நன்றி கூறுவதற்காக அழைத்ததாக அவர் கூறினார் எனது தொலைபேசி என்னை அந்த காவல் துறை அதிகாரி கொடுத்ததாகவும் கூறினார்.
இன்னும் சொல்லுவேன்

நண்பர்களின் படைப்புகள்
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
படிக்கும் போது புவியல் பாடத்தில் 5 மார்க் வாங்குவதற்காக உலக வரைபடத்தை முதன் முதலில் பார்த்தது. அதன் பிறகு நம் நண்பர்கள் வெளி நாட்டில் எங...
-
(முன் குறிப்பு :என் ஆயாவின் நினைவு நாள் 14.01.2006.அதன் நினைவாய் ஒரு நினைவு அஞ்சலி ) அறிமுகம் என் ஆயா பெயர் சின்ன குட்டி நான் தான் அவளின் செ...
-
சமீபத்தில் நான் எனது உறவினர் ஒருவரிடம் பேசி கொண்டு இருந்த போது அவர் எதேட்சையாக கேட்டார். நீ என்ன வேலை பார்க்கிறாய் என்று... அந்த உரையாடல...