மரத்தின் கைகள்


சற்று நேரம் முன்பு கீழ் வீட்டு பெண்மணி வந்து கதவை தட்டினார் . நமது வீட்டு அருகில் உள்ள இரு மரத்தின் கிளைகளை வெட்ட வேண்டும் என்றார். மொத்தம் 1600 ஆகும் என்கிறார்கள். இந்த மரத்தின் அருகில் வசிக்கும் நாலு வீடும் பகிர்ந்து கொள்ளலாம் என்றார். "பண பகிர்வை பிறகு பார்ப்போம் .ஏன் மரத்தை வெட்ட வேண்டும்" என்றேன்.. "நிறைய குரங்குகள் வந்து ஆட்டம் போடுகின்றன" என்றார் "மரத்தின் சில கிளைகளை வெட்டுவதால் குரங்கு வராது என எப்படி கூற முடியும். இப்பொது வெட்டி விட்டால் கோடை காலத்தில் கஷ்டம் ". மரத்தை வெட்ட தேவை இல்லை என்றேன். "இல்லை இன்னும் 15 நாளில் பட்ட திருவிழா வருகிறது.. தனது மகன் விட மர கிளைகள் இடைஞ்சலாக இருக்கும் என்றேன். பட்டம் விடுவதற்காக மரத்தை வேண்டுமா" என்று கேட்டேன். அந்த எதிர் கேள்வியை விரும்பவில்லை. நேரடியாக கடைசி கேள்விக்கு வந்தார்.. "உங்களை தவிர மீதி மூன்று வீடும் வெட்டுவதாய் முடிவெடுத்து உள்ளோம். நீங்கள் பணத்தை பகிர்ந்து கொள்வீர்களா இல்லையா" என்றார். ஊருடன் ஒத்து வாழ முடிவு செய்து "பணம் வேண்டுமானால் கொடுக்கிறேன். ஆனால் எனக்கு பட்டம் விடுவதற்க்காக மரத்தின் கிளையை வெட்ட தேவை இல்லை என படுகிறது. அப்பறம் உங்கள் இஷ்டம்" என்றேன். "பணம் தருவீரகள் இல்லையா..நன்றி" என்று கூறி சென்றுவிட்டார். "முதலில் மரத்தை அறுப்பார்கள்..பிறகு பறவையின் கழுத்தை அறுப்பார்கள்" என்று நினைத்து கொன்டே இந்த ஆண்டு இவ்வாறு முடிந்து இருக்க தேவை இல்லை என்ற சிந்தனையோடு கதவை சாத்தினேன்.

அவன் அவள் மற்றும் காதல்-4


ஜீவாக்கு அவளின் பெயர் பிடிக்க வில்லை. அவளின் பெயர் அஷிமா குலாத்தி. அவளின் பெயரை மனதிற்குள் சொல்லி பார்த்தான் ஜீவா. அவளை பார்த்ததும் பிடித்து இருந்தது. ஆனால் அவளின் பெயர் கேட்டதும் பிடிக்க வில்லை. கேட்க கேட்க பிடிக்கும் என்றும் தோன்ற வில்லை. வழக்கமாய் சொல்லும் ஸ்வீட் நேம் என்று சொல்ல கூட மனம் வரவில்லை. "மை செல்ப் ஜீவா" என்றான். அவள் "ஸ்வீட் நேம்" என்றாள். சென்னையில் நீங்க எங்க என்று கேட்டான் ஜீவா. "எங்க பூர்வீகா இப்ப பாகிஸ்தானில் இருக்கு. சுதந்திரத்தின் பிறகு இந்தியா பிரிந்த போது எங்க தாத்தா குஜராத் வந்து செட்டில் ஆகிட்ட்டாங்க" என்றவாரே தொடர்ந்தாள் அஷிமா. "அப்புறம் அப்பா ஒரு 40 வருடம் முன்னால் தமிழ்நாடு வந்து சென்னைல செட்டில் ஆயாச்சு. சென்னையில் வளசரவாக்கத்தில் விநாயகர் கோவில் பக்கத்துல இருக்கோம். நான் பிறந்தது வளந்தது படித்தது எல்லாம் தமிழ்நாடு தான் " என்று கூறி முடித்தாள் அஷிமா. ஜீவாவிற்கு ஆச்சிரியமாய் இருந்தது. எந்த ஊரு என்று கேட்டதிற்கு ஒரு பொண்ணு வீட்டு முகவரி வரை சொலிக்கிறாளே என்று வியந்தான். அவள் ஜாதகத்தையும் போன் நம்பரையும் தான் அவள் தரவில்லை என்று எண்ணி கொண்டு "நைஸ்" என்று ஒரு வார்த்தையை மட்டும் ஊதிர்தான் ஜீவா. உங்களுக்கு எந்த ஊரு என கேட்டாள் அஷிமா. நான் சென்னை இல்லை. சேலம் பக்கம் என்றான் ஜீவா. அப்போது தான் விமானம் மேல் எழும்ப போகிறது என்று அறிவித்தார்கள். இருவரும் பெல்ட் சரியாய் இருக்கிறதா என்று பார்த்து கொண்டார்கள். பெல்ட் போட்டு என்ன பிரயோசனம். இருவரும் எப்படியோ அந்த காதலில் விழ தான் போகிறார்கள் என்பதை உணராத நேரம் அது. எதேச்சயாய் இருவரும் பார்த்து கொண்டார்கள். மெல்லிய புன்னகை உதிர்த்து கொண்டார்கள். "ஜீவா உங்க ஸ்மைல் ரொம்ப அழகா இருக்கு" என்றாள் அஷிமா. எப்படி எதிர்வினை ஆற்றுவது என ஜீவாவிற்கு தெரியவில்லை. முதல் முதலாய்,அதுவும் ஒரு பொண்ணு, அதுவும் மிக அழகான பொண்ணு இப்படி சொல்லியதை கேட்ட ஜீவா ஆச்சிரியத்தில் நிலை மறந்து இருந்தான். ஜீவா மேல் எழும்பி பறந்து போல் உணர்ந்தான். அது நிஜம் தான் விமானம் மேல் எழும்பி பறக்க ஆரம்பித்து இருந்தது. தொடரும்...

Popular Posts