மிடில் கிளாஸ் மனசு - 1



சிறிய வயதில் இருந்தே பொறுப்போடு இருக்க வேண்டும் என்று சொல்லியே நான் வளர்க்க பட்டேன்.நான் ஒரு பெண்,அதுவும் வீட்டிற்கு மூத்தவள், எனது அப்பா வெளி நாட்டில் இருப்பதால் அம்மாவிற்கு உதவியாக நானும் இருக்க வேண்டும் என்று பல காரணம் சொல்ல பட்டு இருந்தது. அப்போது ஒரு போதும் நான் நினைத்தது இல்லை என் அப்பா வேலை செய்யும் வெளி நாட்டு வீதிகளில் நானும் ஒரு நாள் இப்படி நடந்து செல்வேன் என்று...

கால சுழற்சியில் திருமணமும் ஆகி நாங்கள் சென்னைக்கு குடி பெயர்ந்து வந்து விட்ட போது கூட சிங்கார சென்னை ஒரு நாள் சிங்கப்பூர் ஆகும் என்று எதிர் பார்த்து இருந்தது போதும் சரி .என் மகனுக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்த போதும் சரி. நான் சிங்கப்பூர் வீதிகளில் ஒரு நாள் இப்படி நடந்து செல்வேன் என்று எதிர் பார்த்தது இல்லை...

நான் இந்த உலகுக்கு வர காரணமாய் இருந்தவர் வாழ்ந்த நாட்டிற்கு என்னால் இந்த உலகுக்கு வந்தவனால் இந்த உலகுக்கு வர போகும் ஒரு புதிய உறவிற்காக இங்கு வர முடிந்தது.(என்ன புரியலையா..அது என்னன்னா .. என் மருமகள் பிரசவத்துக்கு நான் சிங்கப்பூர் வந்து உள்ளேன் போதுமா..)

இன்று இந்த வீதிகளில் நடக்க நான் மட்டும் தான் காரணம்...நான் பக்கத்தால இருக்க கோவிலுக்கு போய்ட்டு வரேன்...பஸ்சுல போக என் மகன் கார்டு போட்டு கொடுத்து இருக்கான்.நான் வரும் போது அதை வச்சு தான் ரெண்டு பஸ்சு மாறி வந்தேன். ரெண்டாவது பஸ்சு ஏற்ன இடம் ஒரு ஸ்டாப் தள்ளி பக்கத்துல தான் அப்படிங்கறது நால எதுக்கு வீனா செலவுன்னு நான் நடந்து போய்கிட்டு இருக்கேன்...ஆனா இப்ப நடக்கும் போது ரொம்ப தூரம் மாதிரி தெரியுது..கால் கூட கொஞ்சம் வலிக்குது. அட என்னது என்னக்கு இவ்வளவு பக்கமா வந்து காரு நிக்கிது...


நீ எங்கடா இங்க ... (என் மகன் வந்துட்டான்..நாங்க பேசறத ஒட்டு கேட்காதிங்க)

நான் கேட்க வேண்டிய கேள்வி நீ எங்க மா இங்க...

இல்ல ஒரு ஸ்டாப் தான அப்படின்னு நடந்து வரேன்..

அய்யோ அம்மா நீ ஏற வேண்டிய பஸ்ஸ்டாப் கோவில இருந்து ரெண்டாவது சிக்னல் கிட்ட வளைந்து போகணும்..

நீ வளைந்து வந்து இருக்கிறது முதல் சிக்னல்.


(கார் கதவை திறந்த படி) சரி வண்டில ஏறு..நான் உன்னை வீட்ல விட்டுரேன்.

இந்த ரோட்ல இன்னும் கொஞ்சம் தூரம் போய் இருந்தா காடு வந்துரும்.நல்ல வேலை நான் வந்தேன்..இல்லாட்டி..



இந்த ஊருல எல்லா சிக்னலும் ஒரே மாதிரி இருக்கு..கட்டடம் கூட ஒன்னுக்கு ஒன்னு ஒரே மாதிரி இருக்கு..அதான்..ஒன்னும் வெளங்கலை

நான் தான் கார்டு போட்டு குடுத்தேன் இல்ல..ஒழுங்கா பஸ்ல வரலாம் இல்லை.. இந்த காசை வச்சு கோவிலா கட்ட போறோம்..

கோவில் கட்ட முடியாது.. ஆனா என் தங்கச்சிக்கு கோடாரி தைலம் வாங்க உதவும் இல்லையா..

(அம்மாவின் மிடில் கிளாஸ் மனசை நினைத்த படியே மகனும் , மகனை இங்கு சரியாக வர வைத்த கடவுளை நினைத்த படி அவளும் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர்)

No comments:

Post a Comment

Popular Posts