அவன் அவள் மற்றும் காதல் -2

அவன் அவள் மற்றும் காதல் -2 போர்டிங் செல்ல வழியில் நின்று கொன்டே, சற்று முன் பார்த்த அந்த பெண்ணை திரும்ப பார்த்தான். உடனே அவன் மனசாட்சி வெளியில் குதித்து "டேய் ஜீவா கல்யாணம் ஆன பெண்ணை சைட் அடிப்பது தப்பு டா என்றது". அடுத்த கணமே அதே மனம், அழகை ரசிப்பது தவறில்லை, அனுபவிக்க நினைப்பது தான் தவறு என்று வெஃகியானாம் பேசியது. அந்த பெண்னும் கணவனும் அங்கேயே இருந்தனர். இவன் விமானத்தினுள் சென்று தனது இருக்கையில் அமர்ந்தான். முன் இருக்கை பயணிகளும் வர தொடங்கினர்.பயணிகள் வரிசையாய் ஏற விமானம் நிரம்பி கொண்டு இருந்தது. அவனுக்கு அருகில் இருந்த 22ஏ ,22பி இருக்கைகள் காலியாகவே இருந்தன. அவன் பார்த்து கொன்டு இருந்த புது மன தம்பதியும் ஒன்பதோ பத்தோ கொண்ட இருக்கை வரிசையில் அமர்ந்து இருந்தனர். விமான பனி பெண் இன்னும் ஒரு பயணி வர வேண்டி உள்ளது வந்ததும் விமானம் புறப்படும் என்றாள். அப்பொழுது தான் அவள் உள்ளே நுழைந்தாள். விமானத்தில் உள்ள எல்லா பயணிகளையும் பார்த்து, "சாரி" "சாரி" "மாப் கர்த்தியே" என்று மன்னிப்பு கேட்ட படியே வந்தாள். அவளை அப்போது தான் ஜீவா முதன் முதலில் பார்த்தான். லேட்டா வந்ததுக்கு இந்த சாரி பில்டப் பா என்ற நினைத்து கொண்டான். இருந்தாலும் அவளையே பார்த்து கொண்டு இருந்தான். அவன் மட்டும் அல்ல,விமானத்தின் உள்ள பெரும்பாலனோர் அவளை தான் பார்த்துதான் கொண்டு இருந்தனர். அவள் அழகாய் இருக்கிறாள் என்பதிற்காக ஆண்களும்,இவள் மட்டும் எப்படி ரொம்ப அழகாய் இருக்கிறாள் எனபத்திற்க்காக பெண்களும் பார்த்து இருக்க கூடும்.அவள் வெகுவேகமாக தன் இழுப்பெட்டியை இழுத்து வந்து கொண்டு இருந்தாள்.அவள் க்ரே கலரில் கேப்ரி லெக்கிங்ஸ் அணிந்து இருந்தாள்.கருப்பு நிற டீ ஷர்ட் அணிந்து இருந்தாள். நடுவே நேர் வகிடு எடுத்து இருந்தால் ஆனால் முடியை லூஸ் ஹேராய் விட்டு இருந்தாள். வெளிர் மஞ்சளை விட இன்னும் கொஞ்சம் வெள்ளையாவே இருந்தாள்.வயது இருபத்தியிரண்டுக்கு குறையாமலும் இருபத்திநாளுக்கு மிகாமலும் இருக்க கூடும் என்று ஜீவா நினைத்தான். ஜீவாவின் அருகில் இடம் காலியாய் இருந்ததால் ஒரு வேளை அங்கு வருவாளோ என்று நினைத்து கொண்டு இருந்தான். பல முறை புகைவண்டி பயணத்தில் அழகான பெண்கள் அவன் அருகில் அமர்ந்து இருக்கிறார்கள். ஆனால் விமானத்தில் ஒரு போதும் அவ்வாறு அமைந்தது இல்லை. அதனால் அவன், அவள் நமது அருகில் அமர போவதில்லை என்று முடிவுக்கு வந்து இருந்தான். ஆனால் அவனது விதி வேறு கணக்கை போட்டு கொண்டு இருந்தது. அவள் இவனது இருக்கை 22சி அருகில் வந்து "எக்ஸ்க்யூஸ் மீ" என்றாள். அவள் தன்னை அழைக்கிறாள் என்பதை ஜீவாவால் நம்ப முடிய வில்லை. அதற்குள் அவள் மீண்டும் ஒரு முறை "எக்ஸ்க்யூஸ் மீ" என்றாள். அவள் எங்கு "எக்ஸ்"-ஐ ஆரம்பித்தால் எங்கு "மீ" என முடித்தால் என தெரியவில்லை. அவள் "எக்ஸ்க்யூஸ் மீ" அவளை விட அழகாய் இருந்தது. தொடரும்...

அவன் அவள் மற்றும் காதல் -1


ஜீவா பத்து மணிக்கு சென்னை செல்வதற்கான விமானத்தை முன்பதிவு செய்து இருந்தான். மணி எட்டரை ஆகிவிட்டது.ola கார் காரனும் கொஞம் லேட் செய்து விட்டான்.காரில் பரபரப்பாய் அமர்ந்து இருந்த ஜீவா நிமிடத்திற்கு நாலு முறை தனது fossil decker கைகடிகாரத்தையும் காரின் ஸ்பீடோமீட்டரையும் பார்த்த படியே இருந்தான். அவன் பதட்டத்தை உணர்ந்த கார் ஓட்டுநர், சற்று வேகத்தை அதிகப்படுத்தினார். காரை விட்டு இறங்கி ஓடினான். வெறும் தோள் பை மட்டும் தான் இருந்ததால் விரைவாக checkin செய்து செக்யூரிட்டி செக் எல்லாத்தையும் முடித்து நிம்மதி பெரு மூச்சு விட்டு அமர்ந்தான். பின்பு தான் ஏர்போட்டில் சுற்றி இருப்பவர்களை பார்க்க ஆரம்பித்தான். நிதானமாய் ஒவ்வொரு கடையாய் சென்று பார்த்து எந்த கடையில் டீ விலை கம்மியாய் இருந்ததோ அந்த கடையில் டீ வாங்கி கொண்டு ஒரு மூலையில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் அவன் அமர்ந்து இருந்த இருக்கை அடுத்த ஒரு இருக்கையை விட்டு அடுத்த சீட்டில் ஒரு இளம்பெண் வந்து அமர்ந்தாள். அழகாகவே இருந்தாள். நாம் பார்க்க போகும் பொன்னும் இவளை போல இருப்பாளா என்று யோசிக்க போனான் . அவன் யோசிக்கும் வேளையில் நடுவில் இருந்த காலி இருக்கையில் ஒருவன் வந்து அமர்ந்தான். ஹிந்தி அதிகம் தெரியாவிட்டாலும் அவர்கள் இருவரும் கணவர் மனைவி என்பது புரிந்தது. நாமும் நமது கல்யாணத்து பிறகு இவர்களை போல தான் இருப்போமா என்று யோசிக்க ஆரம்பித்தான். போர்டிங்கு அழைப்பு வந்தது.16க்கு மேல் உள்ளவர்களை முதலில் வர சொன்னார்கள். அவன் போர்டிங் பாசை பார்த்தான் 22 சி என இருந்தது. எனவே அவனும் எழுந்து போர்டிங்கு செல்ல தயாரானான். தொடரும்...

Popular Posts