மரத்தின் கைகள்


சற்று நேரம் முன்பு கீழ் வீட்டு பெண்மணி வந்து கதவை தட்டினார் . நமது வீட்டு அருகில் உள்ள இரு மரத்தின் கிளைகளை வெட்ட வேண்டும் என்றார். மொத்தம் 1600 ஆகும் என்கிறார்கள். இந்த மரத்தின் அருகில் வசிக்கும் நாலு வீடும் பகிர்ந்து கொள்ளலாம் என்றார். "பண பகிர்வை பிறகு பார்ப்போம் .ஏன் மரத்தை வெட்ட வேண்டும்" என்றேன்.. "நிறைய குரங்குகள் வந்து ஆட்டம் போடுகின்றன" என்றார் "மரத்தின் சில கிளைகளை வெட்டுவதால் குரங்கு வராது என எப்படி கூற முடியும். இப்பொது வெட்டி விட்டால் கோடை காலத்தில் கஷ்டம் ". மரத்தை வெட்ட தேவை இல்லை என்றேன். "இல்லை இன்னும் 15 நாளில் பட்ட திருவிழா வருகிறது.. தனது மகன் விட மர கிளைகள் இடைஞ்சலாக இருக்கும் என்றேன். பட்டம் விடுவதற்காக மரத்தை வேண்டுமா" என்று கேட்டேன். அந்த எதிர் கேள்வியை விரும்பவில்லை. நேரடியாக கடைசி கேள்விக்கு வந்தார்.. "உங்களை தவிர மீதி மூன்று வீடும் வெட்டுவதாய் முடிவெடுத்து உள்ளோம். நீங்கள் பணத்தை பகிர்ந்து கொள்வீர்களா இல்லையா" என்றார். ஊருடன் ஒத்து வாழ முடிவு செய்து "பணம் வேண்டுமானால் கொடுக்கிறேன். ஆனால் எனக்கு பட்டம் விடுவதற்க்காக மரத்தின் கிளையை வெட்ட தேவை இல்லை என படுகிறது. அப்பறம் உங்கள் இஷ்டம்" என்றேன். "பணம் தருவீரகள் இல்லையா..நன்றி" என்று கூறி சென்றுவிட்டார். "முதலில் மரத்தை அறுப்பார்கள்..பிறகு பறவையின் கழுத்தை அறுப்பார்கள்" என்று நினைத்து கொன்டே இந்த ஆண்டு இவ்வாறு முடிந்து இருக்க தேவை இல்லை என்ற சிந்தனையோடு கதவை சாத்தினேன்.

அவன் அவள் மற்றும் காதல்-4


ஜீவாக்கு அவளின் பெயர் பிடிக்க வில்லை. அவளின் பெயர் அஷிமா குலாத்தி. அவளின் பெயரை மனதிற்குள் சொல்லி பார்த்தான் ஜீவா. அவளை பார்த்ததும் பிடித்து இருந்தது. ஆனால் அவளின் பெயர் கேட்டதும் பிடிக்க வில்லை. கேட்க கேட்க பிடிக்கும் என்றும் தோன்ற வில்லை. வழக்கமாய் சொல்லும் ஸ்வீட் நேம் என்று சொல்ல கூட மனம் வரவில்லை. "மை செல்ப் ஜீவா" என்றான். அவள் "ஸ்வீட் நேம்" என்றாள். சென்னையில் நீங்க எங்க என்று கேட்டான் ஜீவா. "எங்க பூர்வீகா இப்ப பாகிஸ்தானில் இருக்கு. சுதந்திரத்தின் பிறகு இந்தியா பிரிந்த போது எங்க தாத்தா குஜராத் வந்து செட்டில் ஆகிட்ட்டாங்க" என்றவாரே தொடர்ந்தாள் அஷிமா. "அப்புறம் அப்பா ஒரு 40 வருடம் முன்னால் தமிழ்நாடு வந்து சென்னைல செட்டில் ஆயாச்சு. சென்னையில் வளசரவாக்கத்தில் விநாயகர் கோவில் பக்கத்துல இருக்கோம். நான் பிறந்தது வளந்தது படித்தது எல்லாம் தமிழ்நாடு தான் " என்று கூறி முடித்தாள் அஷிமா. ஜீவாவிற்கு ஆச்சிரியமாய் இருந்தது. எந்த ஊரு என்று கேட்டதிற்கு ஒரு பொண்ணு வீட்டு முகவரி வரை சொலிக்கிறாளே என்று வியந்தான். அவள் ஜாதகத்தையும் போன் நம்பரையும் தான் அவள் தரவில்லை என்று எண்ணி கொண்டு "நைஸ்" என்று ஒரு வார்த்தையை மட்டும் ஊதிர்தான் ஜீவா. உங்களுக்கு எந்த ஊரு என கேட்டாள் அஷிமா. நான் சென்னை இல்லை. சேலம் பக்கம் என்றான் ஜீவா. அப்போது தான் விமானம் மேல் எழும்ப போகிறது என்று அறிவித்தார்கள். இருவரும் பெல்ட் சரியாய் இருக்கிறதா என்று பார்த்து கொண்டார்கள். பெல்ட் போட்டு என்ன பிரயோசனம். இருவரும் எப்படியோ அந்த காதலில் விழ தான் போகிறார்கள் என்பதை உணராத நேரம் அது. எதேச்சயாய் இருவரும் பார்த்து கொண்டார்கள். மெல்லிய புன்னகை உதிர்த்து கொண்டார்கள். "ஜீவா உங்க ஸ்மைல் ரொம்ப அழகா இருக்கு" என்றாள் அஷிமா. எப்படி எதிர்வினை ஆற்றுவது என ஜீவாவிற்கு தெரியவில்லை. முதல் முதலாய்,அதுவும் ஒரு பொண்ணு, அதுவும் மிக அழகான பொண்ணு இப்படி சொல்லியதை கேட்ட ஜீவா ஆச்சிரியத்தில் நிலை மறந்து இருந்தான். ஜீவா மேல் எழும்பி பறந்து போல் உணர்ந்தான். அது நிஜம் தான் விமானம் மேல் எழும்பி பறக்க ஆரம்பித்து இருந்தது. தொடரும்...

அவன் அவள் மற்றும் காதல் -3


அவன் அவள் மற்றும் காதல் -3 அவளின் "எக்ஸ்க்யூஸ் மீ "-ஐ அவன் ரசித்து கொண்டு இருப்பதற்கு இடையிலேயே அவள் மீண்டும் பேச தொடங்கி இருந்தாள். தனது இழு பெட்டியை மேல தூக்கி வைக்க உதவி செய்யுமாறு ஹிந்தியில் கேட்டாள் . "பேக் ஊப்பர் ரக்ணக்கிலேயே தோடா ஹெல்ப் கரியே " என்றாள். உடனே ஜீவாவும் ஹிந்திதியில் கண்டிப்பா என்ற அர்த்தமுள்ள "பக்கா" என்ற வாறே வெளியில் வந்து அந்த இழு பெட்டியை தூக்க முயற்சிதான். அந்த கருப்பு நிற samsonite பெட்டியை அசுவாசமாய் தூக்க முயற்சித்து தோல்வி அடைந்தான். சுதாரித்து கொண்டு மீண்டும் தொக்கி வைக்க முற்பட்டான். இந்த முறையும் தூக்க முடியாவிடில் அசிங்கமாயிடும் என்று எண்ணி கொன்டே சற்று தள்ளி நின்று இருந்த அவள் நம்மை பார்க்கிறாளா என்று பார்த்தான். அவள் அந்த பெட்டியை பார்த்து கொன்டே இருந்தாள். சரி இன்னக்கி அசிங்க பட போறோம் என்று நினைத்து கொன்டே அந்த பெட்டியை தூக்க குனிந்தான். இப்போது அவனுக்கு பின்னால் இருந்து இன்னொரு எக்ஸ்க்யூஸ் மீ என்ற குரல் கேட்டது. இன்னைக்கு எத்தனை எக்ஸ்க்யூஸ் மீ என்று நினைத்த படியே திரும்பினான். ஒரு விமான பணி பெண் நின்று கொண்டு இருந்தார். அந்த விமான பணி பெண் ஜீவாவிடம் "May I" என்றார். இவன் அவசரம் அவசரமாய் நோ நோ ஐ வில் மேனேஜ்" என்று கூறிய படியே எல்லா கடவுளையும் மனதில் வேண்டிய படி அந்த கனத்த பெட்டியை தூக்கி மேலே வைத்து விட்டான். கண்டிப்பாய் அந்த பெட்டி 10 கிலோ இருக்க கூடும். எப்படி இதை கேபின் பேக்கஜ்-இல் அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை என்று எண்ணி கொண்டு இருந்தான். கண்டிப்பாய் இவளுக்கு யாரோ ஒரு ஆண் தான் போர்டிங் பாஸ் கொடுத்து இருக்க வேண்டும் என்று அவனே ஒரு கற்பனை பதிலையும் மனதில் சொல்லி கொண்டான். அவள் "தேங்க்ஸ். தேங்க்ஸ் எ லாட்" என்றவாறே 22எ இருக்கையில் சென்று அமர்ந்தாள். இவனும் நோ மென்ஷன் என்ற வாரே அவனது இடமான 22சி யில் போய் அமர்ந்தான். அவன் அவளும் அமர்ந்து இருந்தார்கள், இருவருக்கும் இடையில் யாரும் இல்லை,எதுவும் இல்லை காற்று மட்டுமே இருந்தது. காற்றும் காதலும் வேறல்ல என்பதை இருவரும் உணர்ந்திரா தருணம் அது. ஜீவாவி அவள் பக்கம் பார்க்காமல் வேறு திசையில் பார்த்து நல்லவன் என்ற இமேஜை உயர்த்த நினைத்தான். பிறகு அந்த இமேஜை வச்சு என்ன பண்ண போறோம் என்று எண்ணி அவளை மீண்டும் பார்க்க முற்பட்டான். அவள் எங்கு பார்க்கிறாள் என்று என்பதை பார்பதற்க்காக எதச்சையாக திரும்புவது போல் அவளை பார்த்தான் ஜீவா.அவள் கண்ணாடி ஜன்னல்-லின் வழியே வெளியே பார்த்து கொண்டு இருந்தாள். அவள் நம்பை பார்க்க வில்லை என்ற பேரின்பத்துடன் அவளை பார்த்தான்.வலது பக்க காதோரத்தில் இருந்து பின் கழுத்து வரை நான்கு ஐந்து நல்ல சிகப்பு நிறத்தில் முகப்பருக்கள் இருந்தன. மஞ்சளும் வெள்ளையும் கலந்த நிறமுடையவர்களுக்கு அந்த சிக நிற முகப்பருக்கள் தான் என நினைத்து கொண்டான் ஜீவா.அவள் நடை உடை பாவனை பார்த்த ஜீவா அவள் கண்டிப்பாய் நகம் நீளமாய் வளர விட்டு இருக்க கூடம் என்று நினைத்து அவள் விரல்களை நோக்கி கண்களை நகர்த்தினான். இவனது முன் உணர்தல் பொய்யாய் போனது. அவள் நகம் முழுமையாய் வெட்ட பட்டு இருந்தது. பெண்களை அவர்களுக்கு தெரியாமல் ஒரு ஆண் கவனித்து பார்த்தால், அந்த பெண்ணின் உள்ளூஉணர்வு எச்சரிக்கை செய்யும் என்பார்கள். அப்படியே சட்டு என்று திருப்பினாள் அவள். ஜீவா வேறு பக்கம் பார்ப்பதற்குள் " சாரி TROLLY BAG ரொம்ப வெய்ட்டா இருந்துச்சு" என்றாள். அவனுக்கு சட்டென ஆச்சரியம். அவள் பேசியதால் அல்ல. அவள் தமிழில் பேசியதால்.. "இட்ஸ் ஓகே. நோ WORRIES" என்பதோடு "உங்களுக்கு தமிழ் தெரியும்னு எதிர் பார்க்கல" என்றான் ஜீவா. "நான் படிச்சதெல்லாம் தமிழ்நாடு தான். பை த பை I am ------------ " என்றாள் அவள். ஜீவாக்கு அவளின் பெயர் பிடிக்க வில்லை. தொடரும்... ஜீவாக்கு புடிக்காத அவளின் பெயரை நீங்களும் முன் மொழியலாம்

அவன் அவள் மற்றும் காதல் -2

அவன் அவள் மற்றும் காதல் -2 போர்டிங் செல்ல வழியில் நின்று கொன்டே, சற்று முன் பார்த்த அந்த பெண்ணை திரும்ப பார்த்தான். உடனே அவன் மனசாட்சி வெளியில் குதித்து "டேய் ஜீவா கல்யாணம் ஆன பெண்ணை சைட் அடிப்பது தப்பு டா என்றது". அடுத்த கணமே அதே மனம், அழகை ரசிப்பது தவறில்லை, அனுபவிக்க நினைப்பது தான் தவறு என்று வெஃகியானாம் பேசியது. அந்த பெண்னும் கணவனும் அங்கேயே இருந்தனர். இவன் விமானத்தினுள் சென்று தனது இருக்கையில் அமர்ந்தான். முன் இருக்கை பயணிகளும் வர தொடங்கினர்.பயணிகள் வரிசையாய் ஏற விமானம் நிரம்பி கொண்டு இருந்தது. அவனுக்கு அருகில் இருந்த 22ஏ ,22பி இருக்கைகள் காலியாகவே இருந்தன. அவன் பார்த்து கொன்டு இருந்த புது மன தம்பதியும் ஒன்பதோ பத்தோ கொண்ட இருக்கை வரிசையில் அமர்ந்து இருந்தனர். விமான பனி பெண் இன்னும் ஒரு பயணி வர வேண்டி உள்ளது வந்ததும் விமானம் புறப்படும் என்றாள். அப்பொழுது தான் அவள் உள்ளே நுழைந்தாள். விமானத்தில் உள்ள எல்லா பயணிகளையும் பார்த்து, "சாரி" "சாரி" "மாப் கர்த்தியே" என்று மன்னிப்பு கேட்ட படியே வந்தாள். அவளை அப்போது தான் ஜீவா முதன் முதலில் பார்த்தான். லேட்டா வந்ததுக்கு இந்த சாரி பில்டப் பா என்ற நினைத்து கொண்டான். இருந்தாலும் அவளையே பார்த்து கொண்டு இருந்தான். அவன் மட்டும் அல்ல,விமானத்தின் உள்ள பெரும்பாலனோர் அவளை தான் பார்த்துதான் கொண்டு இருந்தனர். அவள் அழகாய் இருக்கிறாள் என்பதிற்காக ஆண்களும்,இவள் மட்டும் எப்படி ரொம்ப அழகாய் இருக்கிறாள் எனபத்திற்க்காக பெண்களும் பார்த்து இருக்க கூடும்.அவள் வெகுவேகமாக தன் இழுப்பெட்டியை இழுத்து வந்து கொண்டு இருந்தாள்.அவள் க்ரே கலரில் கேப்ரி லெக்கிங்ஸ் அணிந்து இருந்தாள்.கருப்பு நிற டீ ஷர்ட் அணிந்து இருந்தாள். நடுவே நேர் வகிடு எடுத்து இருந்தால் ஆனால் முடியை லூஸ் ஹேராய் விட்டு இருந்தாள். வெளிர் மஞ்சளை விட இன்னும் கொஞ்சம் வெள்ளையாவே இருந்தாள்.வயது இருபத்தியிரண்டுக்கு குறையாமலும் இருபத்திநாளுக்கு மிகாமலும் இருக்க கூடும் என்று ஜீவா நினைத்தான். ஜீவாவின் அருகில் இடம் காலியாய் இருந்ததால் ஒரு வேளை அங்கு வருவாளோ என்று நினைத்து கொண்டு இருந்தான். பல முறை புகைவண்டி பயணத்தில் அழகான பெண்கள் அவன் அருகில் அமர்ந்து இருக்கிறார்கள். ஆனால் விமானத்தில் ஒரு போதும் அவ்வாறு அமைந்தது இல்லை. அதனால் அவன், அவள் நமது அருகில் அமர போவதில்லை என்று முடிவுக்கு வந்து இருந்தான். ஆனால் அவனது விதி வேறு கணக்கை போட்டு கொண்டு இருந்தது. அவள் இவனது இருக்கை 22சி அருகில் வந்து "எக்ஸ்க்யூஸ் மீ" என்றாள். அவள் தன்னை அழைக்கிறாள் என்பதை ஜீவாவால் நம்ப முடிய வில்லை. அதற்குள் அவள் மீண்டும் ஒரு முறை "எக்ஸ்க்யூஸ் மீ" என்றாள். அவள் எங்கு "எக்ஸ்"-ஐ ஆரம்பித்தால் எங்கு "மீ" என முடித்தால் என தெரியவில்லை. அவள் "எக்ஸ்க்யூஸ் மீ" அவளை விட அழகாய் இருந்தது. தொடரும்...

அவன் அவள் மற்றும் காதல் -1


ஜீவா பத்து மணிக்கு சென்னை செல்வதற்கான விமானத்தை முன்பதிவு செய்து இருந்தான். மணி எட்டரை ஆகிவிட்டது.ola கார் காரனும் கொஞம் லேட் செய்து விட்டான்.காரில் பரபரப்பாய் அமர்ந்து இருந்த ஜீவா நிமிடத்திற்கு நாலு முறை தனது fossil decker கைகடிகாரத்தையும் காரின் ஸ்பீடோமீட்டரையும் பார்த்த படியே இருந்தான். அவன் பதட்டத்தை உணர்ந்த கார் ஓட்டுநர், சற்று வேகத்தை அதிகப்படுத்தினார். காரை விட்டு இறங்கி ஓடினான். வெறும் தோள் பை மட்டும் தான் இருந்ததால் விரைவாக checkin செய்து செக்யூரிட்டி செக் எல்லாத்தையும் முடித்து நிம்மதி பெரு மூச்சு விட்டு அமர்ந்தான். பின்பு தான் ஏர்போட்டில் சுற்றி இருப்பவர்களை பார்க்க ஆரம்பித்தான். நிதானமாய் ஒவ்வொரு கடையாய் சென்று பார்த்து எந்த கடையில் டீ விலை கம்மியாய் இருந்ததோ அந்த கடையில் டீ வாங்கி கொண்டு ஒரு மூலையில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் அவன் அமர்ந்து இருந்த இருக்கை அடுத்த ஒரு இருக்கையை விட்டு அடுத்த சீட்டில் ஒரு இளம்பெண் வந்து அமர்ந்தாள். அழகாகவே இருந்தாள். நாம் பார்க்க போகும் பொன்னும் இவளை போல இருப்பாளா என்று யோசிக்க போனான் . அவன் யோசிக்கும் வேளையில் நடுவில் இருந்த காலி இருக்கையில் ஒருவன் வந்து அமர்ந்தான். ஹிந்தி அதிகம் தெரியாவிட்டாலும் அவர்கள் இருவரும் கணவர் மனைவி என்பது புரிந்தது. நாமும் நமது கல்யாணத்து பிறகு இவர்களை போல தான் இருப்போமா என்று யோசிக்க ஆரம்பித்தான். போர்டிங்கு அழைப்பு வந்தது.16க்கு மேல் உள்ளவர்களை முதலில் வர சொன்னார்கள். அவன் போர்டிங் பாசை பார்த்தான் 22 சி என இருந்தது. எனவே அவனும் எழுந்து போர்டிங்கு செல்ல தயாரானான். தொடரும்...

Popular Posts